இந்திய மன்னர்கள் இதெல்லாமா செஞ்சாங்க? வினோத சம்பவங்களின் பட்டியல்!

மக்களை ஆட்சி செய்வதற்காக மன்னர்கள் இருக்கிறார்களா? மன்னர்காளால் ஆட்சி செய்யப்படுவதற்காக மக்கள் இருக்கிறார்களா? என்பதில் குழப்பம் ஏற்படும் அளவு கூத்துகள் நடக்கும்.
இந்திய மன்னர்கள் இதெல்லாமா செஞ்சாங்க? வினோத சம்பவங்களின் பட்டியல்!
இந்திய மன்னர்கள் இதெல்லாமா செஞ்சாங்க? வினோத சம்பவங்களின் பட்டியல்!Twitter

பிரிட்டிஷ் ஆக்கிரமிக்கு முன்பு உலகிலேயே செல்வந்தர்களாக இந்திய அரசர்கள் திகழ்ந்தனர். நம் நாடு ஆயிரக்கணக்கான மன்னர்களால் ஆளப்பட்டது.

குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள் என பல பிரிவுகளாக ஆட்சியாளர்கள் இருந்தனர். இந்திய மன்னர்களிடம் இருந்த செல்வத்தை அளக்கவே முடியாது.

அந்த காலதில் அளவுக்கதிகமான செலவத்தை செலவழிப்பதற்கான வழியும் மிகக் குறைவாகவே இருந்தது.

மேலும், வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் மன்னராட்சியை விட நகைச்சுவையான விஷயம் இல்லை. கொஞ்சம் இருண்ட நடைச்சுவை (Dark Comedy) தான்... மக்கள் யாரும் மன்னரை எதிர்த்து கேள்விகேட்க முடியாது.

மக்களை ஆட்சி செய்வதற்காக மன்னர்கள் இருக்கிறார்களா? மன்னர்காளால் ஆட்சி செய்யப்படுவதற்காக மக்கள் இருக்கிறார்களா? என்பதில் குழப்பம் ஏற்படும் அளவு கூத்துகள் நடக்கும்.

இப்படியாக வாழ்ந்துவந்த நம் இந்திய மன்னர்கள் செய்த 5 வினோதமான சம்பவங்களைத்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்!

நிஜாமின் பேப்பர்வெயிட் (Paper Weight)

ஹைத்ராபாத்தின் நிஜாமாக இருந்தவர் மிர் ஓஸ்மான் அலிகான். இவர் வாழ்ந்த காலத்தில் உலகிலேயே பெரிய பணக்காரர் இவர்தான் என்கின்றனர். உலகம் முழுவதும் வைரங்கள் சப்ளை செய்துவந்த கோல்கொண்டா சுரங்கங்களுக்கு இவர் அதிபதியாவார்.

உலகின் ஐந்தாவது பெரிய மற்றும் விலையுயர்ந்த வைரமான 185 காரட் ஜேக்கப் வைரத்தை வெறும் காகித எடையாகப் பயன்படுத்தியிருக்கிறார் மிர் ஓஸ்மான் அலிகான்.

இவர் ஹைத்ராபாத்தை இந்தியாவில் சேர்க்கமாட்டோம் என முரண்டுபிடித்துக்கொண்டிருந்தார். இருந்தாலும் இந்தியா ஹைத்ராபாத்தை ஆக்கிரமிப்பு செய்து, அவரது சொத்துகளில் பெரும்பகுதியை நாட்டுடைமை ஆக்கியது.

ராணி அலமேலம்மாவின் சாபம்

1612ம் ஆண்டு மைசூரை வாடியர்கள் என்ற வம்சம் ஆக்கிரமித்தது. அப்போது நோயுற்றிருந்த திருமலராஜாவை அரியணையில் இருந்து அகற்றிவிட்டனர்.

இடத்தைக் கைப்பற்றிய பிறகு வாடியர்கள் ராணி அலமேலம்மாவிடம் ராஜகுடும்பத்து நகைகளை கழற்றிக்கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

அப்போது ராணி, "தலக்காடு தரிசு நிலமாக மாறட்டும், மலங்கி சுழலாய் மாறட்டும், மைசூர் ஆட்சியாளர்களுக்கு குழந்தை இல்லை" என சாபம் விடுத்துள்ளார்.

ராணியின் சாபத்தில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள வாடியர்கள் ராணிக்கு சிலையெல்லாம் வைத்தார்கள். ஆனாலும் சாபம் பலித்தது.  வாடியார் அரச வம்சம் இன்னும் குழந்தை இல்லாமல் போனது. கடைசி மன்னர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ வாடியாரின் தூரத்து உறவினரான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ வாடியாரால் அந்த வம்சம் வழிநடத்தப்பட்டிருக்கிறது.

இந்திய மன்னர்கள் இதெல்லாமா செஞ்சாங்க? வினோத சம்பவங்களின் பட்டியல்!
தலக்காடு: கர்நடகாவில் இருக்கும் மினி பாலைவனம் பற்றி தெரியுமா?

கம்பீர நடை

பாட்டியாலாவின் மகாராஜா பூபிந்தர் சிங் பல விஷயங்களில் நாட்டம் கொண்டிருந்தார். மிக அழகான வைரங்களை சேமிப்பது முதல் 10 முறை திருமணம் செய்தது வரை சொல்லிக்கொண்டே போகலாம்.

அவருக்கு எக்கச்சக்க துணைவியரும் 88 குழந்தைகளும் இருந்திருக்கின்றனர்.

மகாராஜா "அவரது வைர மார்புக்கவசத்தைத் தவிர எதுவும் அணியாமல், உறுப்பில் விறைப்புத்தன்மையுடன் தனது குடிமக்கள் முன் வருடத்திற்கு ஒரு முறை நிர்வாணமாக தோன்றுவதை" வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவரது நடை மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுமாம். மேலும் அவரது உறுப்பு தீய ஆவிகளை அப்பகுதியிலிருந்து விரட்டும் திறன் கொண்ட மாய குணங்களைக் கொண்டுள்ளது என்று பலர் நம்பினர் என Dominique Lapierre மற்றும் Larry Collins இன் மிட்நைட் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மன்னர்கள் இதெல்லாமா செஞ்சாங்க? வினோத சம்பவங்களின் பட்டியல்!
பொன்னியின் செல்வன் - இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி - என்ன இப்படி ஒரு தொடர்பா?

800 நாய்கள்

முஹம்மது மஹாபத் கான் III, ஜுனாகத்தின் மகாராஜாவாக இருந்தவர். இவருக்கு நாய்கள் மீதிருந்த பிரியத்தின் காரணமாக 800 நாய்களை வளர்த்தார்.

800 நாய்களும் சொகுசான வீட்டில் வளர்க்கப்பட்டன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான வேலையாட்களையும் வைத்திருந்தார் மன்னர்.

ஏதெனும் ஒரு நாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் பிரிட்டிஷ் மருத்துவர்களிடம் தான் மருத்துவம் பார்ப்பாராம்.

அவரது நாய்களில் ஒன்று இறந்துவிட்டால் ராஜ்ஜியம் முழுவதும் துக்கம் விசாரிக்கப்பட்டது. அரசாங்கத்தின் இரண்டு கோரை நாய்கள் கலவியில் ஈடுப்பட்டதைப் பார்த்த்தவர் 20 லட்சம் செலவு செய்து திருமணம் செய்தார். அந்த திருமாணத்தில் கலந்து கொள்ள வைஸ்ராயை கூட அழைத்துள்ளார்.

அந்த நாள் அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மன்னர்கள் இதெல்லாமா செஞ்சாங்க? வினோத சம்பவங்களின் பட்டியல்!
Guinness: உலகின் மிகச் சிறிய நாய் - கின்னஸ் சாதனை படைத்த Pearl உயரம் எவ்வளவு தெரியுமா?

இங்கிலாந்து சென்ற கங்கைநீர்

மகாராஜா சவாய் மாதோ சிங் II ஜெய்பூரின் மன்னராக இருந்தவர். இவர் அந்த காலத்திலேயே கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டியவர்.

மிகப் பெரிய அளவுக்கு இரண்டு வெள்ளிப்பாத்திரங்களைச் செய்துள்ளார். இவர் இங்கிலாந்து செல்லும்போது அந்த பாத்திரங்களில் கங்கை நதியின் தண்ணீரைக் கொண்டு சென்றுள்ளார்.

அந்த பாத்திரங்களை உருவாக்க 14,000 வெள்ளிக்காசுகள் உருக்கப்பட்டிருக்கின்றன. இன்றும் கங்கை நீர் மகாராஜா சவாய் மாதோ சிங் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய மன்னர்கள் இதெல்லாமா செஞ்சாங்க? வினோத சம்பவங்களின் பட்டியல்!
ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரத்தின் 9 அட்டகாச புகைப்படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com