Guinness: உலகின் மிகச் சிறிய நாய் - கின்னஸ் சாதனை படைத்த Pearl உயரம் எவ்வளவு தெரியுமா?

உலகின் மிக சிறிய நாய் என்ற கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறது பெர்ல் நாய். இதற்கு முன் உலகின் மிக சிறிய நாய் என்ற சாதனையை மிலி என்ற வேறொரு சிவாவா நாய் படைத்திருந்தது.
Guinness: உலகின் மிகச் சிறிய நாய் - கின்னஸ் சாதனை படைத்த Pearl உயரம் எவ்வளவு தெரியுமா?
Guinness: உலகின் மிகச் சிறிய நாய் - கின்னஸ் சாதனை படைத்த Pearl உயரம் எவ்வளவு தெரியுமா?Twitter

உலகின் மிகச் சிறிய நாய் என்ற கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறது அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த பெர்ல் என்ற நாய். இதன் உயரம் 5 அங்குலத்தை விடவும் குறைவு.

உலகில் தற்போது உயிருடன் இருக்கும் நாய்களில் இது தான் மிக சிறியது. பொதுவாக ஒரு குச்சி ஐஸ்ஸின் உயரம் கூட 6.5 அங்குலம் இருக்கும். ஆனால் இந்த நாயின் உயரம் 3.59 அங்குலம், அல்லது 9.14 சென்டிமீட்டர் தான்.

கடந்த செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு பிறந்த பெர்ல், சிவாவா அல்லது சிஹுவாஹுவா இனத்தை சேர்ந்த நாய். உலகின் மிகவும் உயரம் குறைவான நாய் இனம் சிவாவா.

சிவாவா இன நாய்களில், ஒரு ஆரோக்கியமான பெண் நாயின் உயரம் 15 செ.மீ தான், எடை 1.8 கிலோ இருக்கும். ஆண் நாய்கள், 2.7 கிலோ எடையும், 20 செ.மீ உயரமும் இருக்கும்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, சிவாவா நாய்கள் குரைப்பது அதிக சத்ததுடன் இருக்கும்.

Guinness: உலகின் மிகச் சிறிய நாய் - கின்னஸ் சாதனை படைத்த Pearl உயரம் எவ்வளவு தெரியுமா?
8 அடி 6 அங்குலம்: உலகின் மிக அகலமான விக் - கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலிய பெண்

9.14 செ மீ உயரமுள்ள பெர்ல் ஒரு டிவி ரிமோட்டை விடவும் உயரம் குறைந்ததாக உள்ளது. பெர்லின் நீளம் 12.7 செ மீ. இது கிட்ட தட்ட ஒரு டாலர் நோட்டின் நீளமாகும். பெர்லின் எடை 553 கிராம்.

உலகின் மிக சிறிய நாய் என்ற கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறது பெர்ல் நாய். இதற்கு முன் உலகின் மிக சிறிய நாய் என்ற சாதனையை மிலி என்ற வேறொரு சிவாவா நாய் படைத்திருந்தது.

மிலி 9.65 சென் மீ அதாவது 3.8 அங்குலம் இருந்தது. தற்போது மிலி உயிருடன் இல்லை. ஆகையால், உலகின் மிகச் சிறிய நாய் என்ற பெருமையை பெறுகிறது பெர்ல்.

மிலியுடன் பிறந்த மற்றொரு சிவாவா நாயின் மகள் தான் பெர்ல்.

Guinness: உலகின் மிகச் சிறிய நாய் - கின்னஸ் சாதனை படைத்த Pearl உயரம் எவ்வளவு தெரியுமா?
Bobi : உலகின் மிக வயதான நாய் குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com