இந்திய குடியரசு தலைவர் : எவ்வளவு சம்பளம் தெரியுமா? அவருக்கான மற்ற சலுகைகள் என்ன?

நாட்டின் உயரிய அரசியல் பொறுப்பான குடியரசுத் தலைவர் பதவியில் அமர்வோருக்கு இந்திய அரசு பல பிரமாண்ட சலுகைகளை வழங்குகிறது அது என்னென்ன..? வாருங்கள் பார்ப்போம்.
திரௌபதி முர்மு
திரௌபதி முர்முNewsSensetn
Published on

இந்தியக் குடியரசுத் தலைவர்தான் இந்தியா என்கிற நாட்டின் தலைவர் மற்றும் இந்திய ராணுவப் படைகளான காலாட்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தளபதியாக விளங்குகிறார்.

இந்தியக் குடியரசுத் தலைவரே இந்தியாவின் முதல் குடிமகனாகவும், பறந்து விரிந்த இந்திய நாட்டின் ஒற்றுமையின் குறியீடாக இருக்கிறார்.

தற்போது இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியோடு நிறைவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த ஜூலை 18ஆம் தேதி நடைபெற்றது. அதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஜூலை 21ஆம் தேதி இந்தியாவின் புதிய 15ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாரதிய ஜனதா கட்சியின் தரப்பில் திரௌபதி முர்மு மற்றும் இந்தியத் தேசிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க் கட்சிகளின் தரப்பில் யஸ்வந்த் சின்ஹா ஆகியோரும் போட்டியிட்டனர்.
இதில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றால், இந்தியாவின் முதல் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த பெண் குடியரசுத் தலைவராவர் என்கிற பெருமையைப் பெறுவார்.


குடியரசுத் தலைவர் பதவி அலங்காரத்துக்கு இருக்கும் பதவி, அப்பதவிக்குப் பெரிய அதிகாரமோ இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியோ இல்லை எனச் சிலர் கூறுவது உண்டு.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்முNewsSensetn


ஆனால், இதே ஜனாதிபதி பதவி மூலம் கே ஆர் நாராயணன் ஏபிஜே அப்துல் கலாம் போன்ற இந்தியக் குடியரசுத் தலைவர்கள் தங்களுக்கான அதிகாரத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டு, அரசியல் தலங்களிலும் மக்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளனர் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.


நாட்டின் உயரிய அரசியல் பொறுப்பான குடியரசுத் தலைவர் பதவியில் அமர்வோருக்கு இந்திய அரசு பல பிரமாண்ட சலுகைகளை வழங்குகிறது அது என்னென்ன..? வாருங்கள் பார்ப்போம்.

1. ராஷ்டிரபதி பவன்

உலகின் மிகப்பெரிய அதிபர் மாளிகைகளில் ஒன்றான ராஷ்டிரபதி பவன் இந்திய குடியரசுத் தலைவரின் வீடு மற்றும் அலுவலகமாக செயல்படுகிறது. சர் எட்வின் லுடியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோர் இந்த பிரம்மாண்ட மாளிகையை இன்ச் இன்சாக கட்டமைத்தனர்.

சுமார் 330 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் ராஷ்டிரபதி பவன் வளாகத்தில், 2 லட்சம் சதுர அடியில் கட்டமைக்கப்பட்டுள்ளது குடியரசுத் தலைவரின் வீடு. 340 சொகுசு அறைகள், மிகப்பெரிய நூலகம், வாசிக்க வாசிக்க மேலும் புத்தகங்களை வாசிக்கத் தூண்டும் பிரமாதமான வாசிப்பறை... என ராஷ்டிரபதி பவனின் வசதிகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

திரௌபதி முர்மு
இந்தியாவின் டாப் 10 விலை உயர்ந்த சொகுசு வீடுகள் இவைதான்

2. அதிபருக்கென தனி பாணி

இந்தியக் குடியரசுத் தலைவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் மிகப்பெரிய குதிரை லாயம், அற்புதமான உலகத்தரம் வாய்ந்த குதிரைகள், ஒரு ராட்சத கோல்ஃப் கோர்ஸ், முகலாயர்கள் காலத்தில் கட்டமைக்கப்பட்ட மொகல் தோட்டம்... என்ன பட்டியல் நீள்கிறது.

இதில் மொகல் தோட்டம் மட்டும் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் பறந்து விரிந்து கிடைக்கிறது. அதை ராஷ்டிரபதி பவனின் உயிர் நாடி என்றும் சிலர் அழைக்கிறார்கள். இந்த மொகல் தோட்டத்திற்கான யோசனை ஜம்மு காஷ்மீரில் உள்ள மொகல் தோட்டங்கள், தாஜ்மஹாலைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் தோட்டங்களிலிருந்து பெறப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது.

3. சம்பளம் எவ்வளவு

இந்தியக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பவர் மாதம் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக பல்வேறு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏழாவது பே கமிஷனுக்குப் பிறகு தான் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இத்தனை அதிக சம்பளம் வந்தது என்றும், 2017 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு மாதம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.

4. உதவி பணியாளர்கள்

இத்தனை பெரிய பிரம்மாண்ட மாளிகையை, சொல்லப்போனால் இந்திய அரசின் முக்கிய குறியீடுகளில் ஒன்றாகத் திகழும் இந்த அலுவலகத்தைப் பராமரிக்க, பாதுகாக்கப் பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவருக்கு உதவ என நூற்றுக்கணக்கான உதவிப் பணியாளர்கள் இருப்பர்.

5. சொகுசு விடுமுறை பங்களாக்கள்

ராஷ்டிரபதி பவன் எந்த அளவுக்கு வசதியாகவும் பறந்து விரிந்து கிடைக்கிறதோ, அதேபோல இந்தியக் குடியரசுத் தலைவர் விடுமுறை நாட்களைக் கழிக்க இந்தியாவிலேயே இன்னும் இரு பங்களாக்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் நகரத்தில் ராஷ்டிரபதி நிலையம் என்கிற பெயரிலும், இமாச்சலப்பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் ஒரு சொகுசு பங்களாவும் குடியரசுத் தலைவரின் வருகைக்காக எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

இது கோடைக்கால குளிர்கால வாசஸ்தலம் என்றும், வட இந்தியா தென்னிந்தியாவின் ஒற்றுமையையும் கலாச்சாரப் பகிர்வையும் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

திரௌபதி முர்மு
அம்பானி முதல் அபிஷேக் பச்சன் வரை பயன்படுத்தும் கார்கள் என்ன? - அட்டகாச தகவல்

6. குடியரசுத் தலைவருக்கான சொகுசு கார்கள்

இந்தியக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பவர்களுக்கு ஒரு பிரம்மாண்ட கருப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 w 221 புல்மென் கார்ட் காரும், குடியரசுத் தலைவர் இந்தியாவின் பிரதிநிதியாக மேற்கொள்ளும் பயணங்களுக்கு லிமோஷன் (limousine) காரும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியக் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பல அம்சங்கள் இந்த கார்களில் பொருத்தப்படுகின்றன.

7. மற்ற சலுகைகள்

இந்தியக் குடியரசுத் தலைவராக ஒருவர் பொறுப்பேற்று விட்டால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவமனை சிகிச்சைகள் மற்றும் வாடகை இல்லா ஒரு சொகுசு வீடு போன்றவை வழங்கப்படும்.

PBG
PBGTwitter

8. பாதுகாப்பு ஏற்பாடுகள்

இந்தியக் குடியரசுத் தலைவரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள பிரசிடெநன்ட் பாடிகார்ட் (PBG) என்கிற பெயரில் ஒரு தனி பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. இது உலகின் மிக வலிமையான ராணுவங்களில் ஒன்றான இந்திய ராணுவத்தின் மிகப் பழமையான யூனிட் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பிபிஜி யூனிட் போர் இல்லாத காலங்களில் பெயருக்குச் செயல்படும் ஒரு யூனிட்டாகவே இருக்கும். போர் மூண்டால் ஒட்டுமொத்த பி பி ஜி யூனிட்டும் களத்தில் இறக்கப்படும்.

திரௌபதி முர்மு
யஷ்வந்த் சின்ஹா : பேராசிரியர் டூ நிதியமைச்சர் டூ குடியரசுத் தலைவர் வேட்பாளர் - யார் இவர்?

9. ஓய்வுக் காலம்


ஒருவர் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றால் அவருக்கு மாதாமாதம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஓய்வூதிய தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதோடு வாடகை செலுத்த இல்லா சொகுசு பங்களா, இலவச ரயில் மற்றும் இலவச விமான பயணம் என பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

திரௌபதி முர்மு
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் சந்தால் ஆதிக்குடிகள் சமூகம் குறித்து தெரியுமா?


10. குடும்பத்துக்கு ஓய்வூதியம்


ஒருவர் குடியரசுத் தலைவராகப் பதவியிலிருந்து ஓய்வு பெற்று அல்லது ஓய்வு பெறுவதற்கு முன் இறந்துவிட்டால் அவரது கணவன் அல்லது மனைவிக்குப் பாதி ஓய்வூதியத் தொகை தொடர்ந்து வழங்கப்படும். குடியரசுத் தலைவராக இருந்து காலமானவர்களின் கணவன் அல்லது மனைவி அவரது வாழ்நாள் முழுக்க இலவசமாக மருத்துவச் சிகிச்சைகளைப் பெறலாம். அவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து ஒரு சொகுசு பங்களாவுக்கான வாடகை ஒரு தொலைப்பேசி இணைப்பு மற்றும் ஒரு அரசு வாகனமும் வழங்கப்படுகிறது.

திரௌபதி முர்மு
இலங்கை : ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளுமா தீவு தேசம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com