Crime Against Children
Crime Against ChildrenTwitter

3 வயது சிறுமியை 'Digital Rape' செய்ததாக 75 வயது முதியவர் கைது - அது என்ன டிஜிட்டல் ரேப்?

சிறுமியின் மருத்துவ சான்றுகள் மற்றும் 8 சாட்சிகள் வழியாக போக்சோ, ஐபிசி 375, 376 ஆகிய பிரிவுகளில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
Published on

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 65 வயது நபர் 3 வயது சிறுமியை டிஜிட்டல் ரேப் செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 375 (வன்புணர்வு) மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

2019ம் ஆண்டு நடைபெற்ற குற்றத்துக்காக கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

என்ன நடந்தது?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அக்பர் அலி என்ற நபர் கடந்த 2019ம் ஆண்டு நொய்டாவில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது தான் அவர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

பக்கத்து வீட்டிலிருந்த மூன்று வயது குழந்தையை அவர் டிஜிட்டல் ரேப் செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் மருத்துவ சான்றுகள் மற்றும் 8 சாட்சிகள் வழியாக போக்சோ, ஐபிசி 375, 376 ஆகிய பிரிவுகளில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

Crime Against Children
அமெரிக்கா மத போதகர் : 900 மக்களை தற்கொலை செய்ய வைத்த ஒரு போலி சாமியாரின் விறு விறு கதை
child Abuse
child AbuseNewsSense

டிஜிட்டல் ரேப் என்பது என்ன?

சிறுமியை மிட்டாய் கொடுத்து ஆசைக் காட்டி இதனைச் செய்திருக்கிறார் அலி.

டிஜிட்டல் ரேப் என்பது பொதுவாக நினைப்பது போல விர்சுவலாக அல்லது தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் மூலம் பாலியல் தொல்லைக் கொடுப்பது அல்ல. மாறாக, ஒருவரின் பிறப்புறுப்பில் வலுக்கட்டாயமாக கைவிரல் அல்லது கால்விரலால் தொடுவதாகும்.

நிர்பயா வழக்கு

2012ம் ஆண்டுவரை மேற்கண்ட பாலியல் குற்றங்கள் வன்புணர்வாக கருதப்படவில்லை.

நிர்பயா வழக்குக்கு பின்னர் தான் அரசு இதனை பாலியல் வன்புணர்வாக எடுத்துக்கொண்டது.

2013ம் பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டது. டிஜிட்டல் ரேப் என்ற வார்த்தை இளம் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் பாலியல் குற்றங்கள்

டிஜிட்டல் ரேப் குற்றத்துக்காக நொய்டாவைச் சேர்ந்த 50 வயது நபரான மனோஜ் லாலா இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார்.

ஜூன் மாதம் நொய்டாவைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது 5 வயது மகளிடம் டிஜிட்டல் ரேப் செய்த குற்றத்துக்காக சிறுமியின் அம்மா கொடுத்த புகாரின் பேரில் பிடிபட்டார்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2021ம் ஆண்டு 31000 பாலியல் வன்புணர்வு குற்றங்கள் பதிவாகியிருந்தன.

Crime Against Children
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரம்: டெல்லி முதலிடம்- 40% அதிகரித்த குற்றங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com