இந்தியாவின் நீளமான மாவ்ஸ்மாய் குகையை பார்க்க துடிக்கும் மக்கள் - அப்படி என்ன இருக்கிறது?

மாவ்ஸ்மாய் குகை புதைபடிவங்களுக்கு பிரபலமானது. இயற்கையான தண்ணீரின் ஓட்டத்தால் ஏற்பட்ட அரிப்புகளாலும் சுண்ணாம்புக் கற்களில் பல உருவங்கள் உருவாகி இருப்பதை உங்களால் காண முடியும்.
mawsmai cave
mawsmai caveTwitter
Published on

மேகாலயா ஒரு சிறந்த டூரிஸ்டு ஸ்பாட் என்பது பலருக்கு தெரியும். இங்கு மலைகள், நீர்வீழ்ச்சிகள், புல்வெளிகள் மட்டுமில்லாமல் அற்புதமான பல குகைகள் உள்ளன.

இந்தியாவின் மிக நீளமான, ஆழமான குகைகள் எல்லாம் இங்கு உள்ளன. மேகாலயாவில் 1500க்கும் மேற்பட்ட குகைகள் உள்ளன, இவற்றில் சுமார் 980 குகைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட குகைகளில் ஒன்று தான் சிரபுஞ்சியில் உள்ள மாவ்ஸ்மாய் குகை.

இந்த அதியச குகைக்குள் என்ன இருக்கிறது என்பதை இங்கே நாம் தெரிந்துகொள்வோம்.

மாவ்ஸ்மாய் குகை சிரபுஞ்சியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். மேகாலயாவில் பல குகைகள் இருந்தாலும் இந்தியா அளவில் பெரிய குகையாக மாவ்ஸ்மாய் அறியப்படுகிறது.

இந்த குகைக்குள் என்னதான் இருக்கிறது என மக்கள் சென்று பார்த்து வருகின்றனர்.

குகையின் உள்ளே, 150 மீ தூரம் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குகை அமைப்பு வரம்பற்றது. மாவ்ஸ்மாய் குகை ஒரு பெரிய நுழைவாயிலைக் கொண்டுள்ளது

mawsmai cave
மத்திய பிரதேசம் : உதயகிரி முதல் பாக் வரை - நிச்சயம் பார்க்க வேண்டிய வரலாற்று குகைகள்

உள்ளே நுழையும்போது நடந்தே செல்லலாம் என நினைக்கும் சுற்றுலா பயணிகள் சிறிது நேரத்திலேயே குனிந்தும், தவழ்ந்தும், ஊர்ந்தும் செல்ல வேண்டிய நிலை உருவாகிறது.

குகைக்குள் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் மின்விளக்குகள் பொருத்தி இருந்தாலும் மின்விளக்கு இல்லாத சமயத்தில் என்ன ஆகும் என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு வருவதை தடுக்க முடியாத அளவுக்கு அந்த குகையின் அமைப்பு இருக்கும்.

குகை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை திறந்திருக்கும்.

இங்கு செல்ல பார்வையாளர்களிடம் 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கேமராவிற்கு ரு.20 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மாவ்ஸ்மாய் குகை புதைப்படிவங்களுக்கு பிரபலமானது. இயற்கையான தண்ணீரின் ஓட்டத்தால் ஏற்பட்ட அரிப்புகளால், சுண்ணாம்புக் கற்களில் பல உருவங்கள் உருவாகி இருப்பதை உங்களால் காண முடியும். ஒரு அட்வெஞ்சருக்காக அந்த வியூவை காணவும் மக்கள் அங்கு குவிகின்றனர்.

mawsmai cave
வியட்நாம் : மனித காலடி தடமே பதியாத உலகின் மிக பெரிய குகை - உள்ளே இருக்கும் தனி ஒரு உலகம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com