ஓட்டல், மோட்டல், ரெஸ்டாரண்ட் - மூன்றும் வெவ்வேறு இடங்களா? வித்தியாசம் என்ன?

இந்த தங்கும் விடுதிகளில் வகைகள் உள்ளன. ஓட்டல், மோட்டல், ரெஸ்டாரண்ட் என்றெல்லாம் நாம் குறிப்பிடுகின்றோம். இவை அனைத்தும் ஒன்று தான் என நினைத்து நாம் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் இவை மூன்றும் வேறு.
ஓட்டல், மோட்டல், ரெஸ்டாரண்ட் - மூன்றும் வெவ்வேறு இடங்களா? வித்தியாசம் என்ன?
ஓட்டல், மோட்டல், ரெஸ்டாரண்ட் - மூன்றும் வெவ்வேறு இடங்களா? வித்தியாசம் என்ன? Canva
Published on

நாம் வெளியூர்களுக்கு சென்றால் அந்த காலத்தில் சத்திரம், அல்லது கோவில் மண்டபம் போன்ற இடங்களில் தங்குவோம். அங்கேயே நமக்கு உணவு வசதிகளும் செய்து தரப்படும்.

பெரும்பாலும் இவை இலவசமானதாக இருக்கும். இந்த வழக்கமே தற்போது மருவி ஓட்டல்களாக மாறிவிட்டது எனலாம்.

இந்த தங்கும் விடுதிகளில் வகைகள் உள்ளன. ஓட்டல், மோட்டல், ரெஸ்டாரண்ட் என்றெல்லாம் நாம் குறிப்பிடுகின்றோம். இவை அனைத்தும் ஒன்று தான் என நினைத்து நாம் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் இவை மூன்றும் வேறு.

இவற்றிலுள்ள வேறுபாடுகள் என்ன? இந்த பதிவில்...

ஓட்டல்

ஓட்டல் என்பது விருந்தினர்கள் தங்குமிடம். இங்கு பிரதானமாக இருப்பது தங்கும் வசதி தான். இவற்றுடன் கூடுதலாக உணவு, உடற்பயைற்சி கூடம், நீச்சல் குள வசதி, ஸ்பா, குழந்தைகள் பராமரிப்பு கூடம் போன்ற வசதிகள் கிடைக்கும்.

இன்னும் சில ஓட்டல்களில் பாதுகாப்பு லாக்கர்கள், திரையரங்க வசதிகள், செல்ல பிராணிகள் பராமரிப்பு எல்லாம் கூட இருக்கும்.

இவற்றை தவிர சில ஓட்டல்கள் வணிக கூடங்கள், மாநாடுகள், சந்திப்புகளை நடத்தவும் அரங்க வசதிகள் இருக்கும்.

ஓட்டல்கள் வழங்கும் வசதிகளுக்கு ஏற்ப அதன் மதிப்பை காட்டும் விதமாக ஒன்று முதல் 7 ஸ்டார்கள் வழங்கப்படும். இவை நகரங்களில், ஊருக்குள் அதிகம் காணப்படுகிறது

மோட்டல்

மோட்டரிஸ்ட் ஹோட்டல் என்ற வார்த்தைகளை இணைத்து இந்த சொல் வந்தது எனலாம்.

அதாவது நீண்ட தூரம் செல்லும் வாகன ஓட்டிகள் இளைப்பாற இந்த விடுதிகள் பயன்படுகின்றன. மேலே குறிப்பிட்ட ஓட்டல்களில் இருக்கும் வசதிகள் எல்லாம் இங்கு இருக்காது.

தங்கவும், உறங்கவும், உணவுகளும் கிடைக்கும். இங்கு சிறிது காலமும் இருக்கலாம், நீண்ட நாட்களுக்கும் தங்கலாம். விலையும் ஓட்டல்களை விட குறைவாகவே இருக்கும்.

இவை பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும். பார்க்கிங் வசதியுடன் கொண்ட சிறிய கட்டிடங்கள் இவை.

ஓட்டல், மோட்டல், ரெஸ்டாரண்ட் - மூன்றும் வெவ்வேறு இடங்களா? வித்தியாசம் என்ன?
தியேட்டர், ஷாப்பிங் மால் rest room கதவுகளின் கீழே இடைவெளி இருப்பது ஏன் தெரியுமா?

ரெஸ்டாரண்ட்

இவை உணவு மற்றும் பானங்கள் மட்டுமே வழங்கும் இடமாகும். ஓட்டல்கள், மோட்டல்கள் சிலவற்றில் உணவு வசதிகள் இருக்கும். ஆனால் உணவகங்களில் மாறாக தங்கும் வசதிகள் கிடைக்காது.

இவற்றை தவிர, ரிசார்ட்கள், காட்டேஜ்களும் இருக்கின்றன. இந்த ரிசார்ட்கள் பரப்பளவில் பெரியதாக இருக்கும். அதேபோல காட்டெஜ்கள் ஒரு சிறிய வீடு போன்ற அமைப்பை கொண்டிருக்கும். இங்கு நாமே சமைத்துக்கொள்ள வசதிகள் இருக்கும்

ஓட்டல், மோட்டல், ரெஸ்டாரண்ட் - மூன்றும் வெவ்வேறு இடங்களா? வித்தியாசம் என்ன?
பீர் பாட்டில்கள் எப்போதும் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருப்பது ஏன்? அடடே தகவல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com