Bharat: இந்தியாவின் பெயரை மாற்றும் மத்திய அரசு? பாரத் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

இதற்கு பல தரப்புகளில் இருந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. அது ஒருபக்கம் இருக்கட்டும். மாற்றவுள்ளதாக கூறப்படும் பாரத் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
Bharat: இந்தியாவின் பெயரை மாற்றும் மத்திய அரசு? பாரத் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
Bharat: இந்தியாவின் பெயரை மாற்றும் மத்திய அரசு? பாரத் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?Canva
Published on

இந்திய நாட்டின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாஜக அரசுக்கு எதிரான கட்சிகள் ஒருங்கிணைந்து, அந்த கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டியுள்ளது.

இந்திய குடியரசு என்று இருக்கும் பெயரை பாரத் குடியரசு என்று மத்திய அரசு மாற்றவுள்ளதாக தகவகள் வெளிவருகின்றன. வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நடக்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெயர் மாற்ற தீர்மானத்தை அரசு முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு பல தரப்புகளில் இருந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.

அது ஒருபக்கம் இருக்கட்டும். மாற்றவுள்ளதாக கூறப்படும் பாரத் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

பாரத் என்பதன் பொருள்

என்ன தான் இந்தியா என்பது நாட்டின் பெயராக இருந்தாலும், பாரதம், பாரத மாதா போன்ற வார்த்தைகளை நாம் பயன்படுத்தி தான் வந்துள்ளோம்.

இந்த பாரத் என்ற வார்த்தை பண்டைய மொழியான சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது.

’ஒளி அல்லது ஞானத்தை தேடி’ என்பது இதன் பொருள் என்றும், அப்படியே இந்த வார்த்தையை மொழிபெயர்த்தால், ‘பொறுத்துக்கொள்வது’ என்று பொருள்படுகிறது.

Bharat: இந்தியாவின் பெயரை மாற்றும் மத்திய அரசு? பாரத் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
ஈரான் முதல் இலங்கை வரை : பெயரை மாற்றிகொண்ட நாடுகள் - என்ன காரணம் தெரியுமா?

பாரத் என்ற வார்த்தை எதிலிருந்து வந்தது?

தகவல்களின் படி, பாரத் என்ற வார்த்தை பல வரலாற்று நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எழுத்தாளர் ரோஷினி தளால் தனது புத்தகமான, தி ரிலிஜியன்ஸ் ஆஃப் இந்தியா என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

  • பரதன் எனும் ரிக்வேத அரசரின் வம்சத்தினர் தோன்றியதில் இருந்து இந்த வார்த்தை உருவானது.

  • மகாபாரத கதாபாத்திரங்களான துஷ்யந்தன் - சகுந்தலையின் மகனின் பெயர் (கௌரவர்களும் பாண்டவர்களும் இவரின் வம்சத்தினர் என்பதால், இவர்களை மொத்தமாக பரதர்கள் என்று அழைத்ததாகவும் குறிப்புகள் உள்ளது)

  • ராமாயணத்தில் ராமரின் தம்பியின் பெயர் பரதன்.

இது மாதிரியாக இந்தியாவை ஆண்டதாக கூறப்படும் அரசர்கள், சாதுக்கள் பலரும் பரத் என்ற பெயரை கொண்டுள்ளனர்.

பாரத் என்ற பெயர் இப்படி தோன்றல்களை கொண்டுள்ளது.

இந்தியா என்ற பெயர் தோன்றியது எப்படி?

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற திட்டம்? நாட்டிற்கு 'இந்தியா' என்ற பெயர் எப்படி வந்தது?

Bharat: இந்தியாவின் பெயரை மாற்றும் மத்திய அரசு? பாரத் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
தேசியக் கொடியில் கல்லா கட்டிய மத்திய அரசு - ஆன்லைன் சந்தையில் 60 கோடி ரூபாய்க்கு விற்பனை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com