டெல்லி: மங்கோலியர்களை தண்டிக்க கட்டபட்ட 13ஆம் நூற்றாண்டு கோபுரம் - ஓர் இருண்ட வரலாறு!

உங்களுக்கு சோர்மினார் வரலாறு பற்றி தெரியுமா? இந்த கோபுரத்தின் மேல் பகுதியில் நம்மால் 225 துளைகள் இருப்பதை காணமுடிகிறது. இது வெறும் துளைகள் இல்லை. மரண ஓலங்களை ஊருக்கு ஒலிக்கச் செய்த ஒலிபெருக்கிகள் எனலாம்.
டெல்லி: மங்கோலியர்களை தண்டிக்க கட்டபட்ட 13ஆம் நூற்றாண்டு கோபுரம்? ஓர் இருண்ட வரலாறு
டெல்லி: மங்கோலியர்களை தண்டிக்க கட்டபட்ட 13ஆம் நூற்றாண்டு கோபுரம்? ஓர் இருண்ட வரலாறு twitter

இந்தியாவின் முக்கியமான நினைவுச் சின்னங்களில் ஒன்று சார்மினார். 1591ஆம் ஆண்டு முகம்மது குலி குப் ஷா என்பவரால் கட்டப்பட்டது.

பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதற்கான அடையாளமாக, அதனை கொண்டாடும் பொருட்டு, சார்மினார் கட்டப்பட்டது. சார்மினாரை மையமாக வைத்தே பழமையான நகரமான ஐதராபாத் உருவாக்கப்பட்டது.

இந்த சார்மினாரின் வரலாறு தெரிந்தது தானே? ஆனால் உங்களுக்கு சோர்மினார் வரலாறு பற்றி தெரியுமா?

இந்திய தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கிறது இந்த கோபுரம். இதன் சுவர்களில் ரத்தக் கரை படிந்திருக்கிறது என்று கூறுகின்றனர்.

வாருங்கள் இதன் வரலாற்றை காணலாம்

டெல்லியின் தெற்கு பகுதியில், அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் ஹுவாஸ் காஸ் என்ற இடத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது ஒரு கோபுரம்.

இதனை சோர்மினார், அதாவது திருடர்களின் கோபுரம் என்று அழைக்கின்றனர். 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோபுரம் இருண்ட வரலாற்றினை கொண்டுள்ளது.

இந்த கோபுரத்தின் மேல் பகுதியில் நம்மால் 225 துளைகள் இருப்பதை காணமுடிகிறது. இது வெறும் துளைகள் இல்லை. மரண ஓலங்களை ஊருக்கு ஒலிக்கச் செய்த ஒலிபெருக்கிகள் எனலாம்.

சுமார் 700 அல்லது 800 ஆண்டுகளுக்கு முன் கில்ஜி வம்சத்தினர் ஆட்சியின் கீழ் இருந்தது டெல்லி.

டெல்லி: மங்கோலியர்களை தண்டிக்க கட்டபட்ட 13ஆம் நூற்றாண்டு கோபுரம்? ஓர் இருண்ட வரலாறு
ஜப்பான் முயல்தீவு: இங்கே ஆயிரக்கணக்கான முயல்கள் குவிந்தது எப்படி? - ஓர் இருண்ட வரலாறு

அப்போது கில்ஜி வம்சத்தினருக்கு பெருந்தொல்லையாக இருந்தது மங்கோலியர்கள். மங்கோலியர்களின் அட்டுழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார் மன்னர் அலாவுதீன் கில்ஜி.

தனது அதிகாரத்தின் கீழ் இருந்த மங்கோலியர்களை கொன்று குவித்தார். தனது ஆளுமையை மங்கோலியர்களுக்கு நிரூபிக்க இவ்வாறு செய்தார்.

கண்ணில் கண்ட மங்கோலியர்களை வெட்டி சாய்த்தார். இந்த கோபுரத்தில் துளையிட்டு கொல்லப்பட்டவர்களின் தலைகளை அதனுள் வைத்தார். ஊராருக்கு இந்த தலைகள் வெளிச்சம்போட்டு காட்சியளிக்கப்பட்டன.

சிலரோ, அலாவுதீன் கில்ஜி, இதற்காகவே இந்த கோபுரத்தை கட்டினார் என்றும் கூறுகின்றனர். மேலும் ஒரு சிலர், மன்னர் அலாவுதீன் அனைத்து மங்கோலியர்களையும் கொல்லவில்லை, திருட்டு தொழிலில் ஈடுபட்டவர்களை மட்டுமே கொன்றார் என்று கூறுகின்றனர்.

டெல்லி: மங்கோலியர்களை தண்டிக்க கட்டபட்ட 13ஆம் நூற்றாண்டு கோபுரம்? ஓர் இருண்ட வரலாறு
கோவை மக்களுக்கு ’திமிர் வரி’ விதித்ததா பிரிட்டிஷ் அரசு? என்ன காரணம்? ஒரு சுவாரஸ்ய வரலாறு

இப்படியாக திருடர்களை கோரமாக கொன்றால், திருட நினைக்கும் மற்றவர்களும் பயந்து திருடமாட்டார்கள் என்பது கில்ஜியின் நோக்கமாக இருந்திருக்கலாம்.

ஆட்சிகள் மாறியபோதிலும் வலிமையாக நின்ற இந்த கோபுரம், தற்போது பாழடைந்த நிலையில் கேட்பாரற்று கிடக்கிறது. குறைந்த அளவு சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள், வரலாற்று ஆர்வலர்கள் என இந்த கோபுரத்தை பற்றி அறிந்தவர்கள் மட்டுமே இங்கு சென்று வருகின்றனர்.

டெல்லி: மங்கோலியர்களை தண்டிக்க கட்டபட்ட 13ஆம் நூற்றாண்டு கோபுரம்? ஓர் இருண்ட வரலாறு
Taj Mahal : கருப்பு தாஜ்மஹால் கட்ட விரும்பினாரா ஷாஜகான்? - ஓர் இருண்ட வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com