காஞ்சிவரம் புடவைகள் அவற்றின் பாரம்பரிய அழகுக்காக புகழ்பெற்றவை. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நகரத்திலிருந்து தோன்றிய இந்த புடவைகள் கைவினைத்திறனுக்காகவும், வண்ணமயமான பட்டு துணிக்காகவும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன.
கலாச்சார முக்கியத்துவம் மற்றும் காலத்தால் அழியாதவண்ணம் நெய்த காஞ்சிவரம் புடவைகள் சிறப்பானதாக இருக்க பல காரணிகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காஞ்சிவரம் புடவைகள் தூய மல்பெரி பட்டு மூலம் வடிவமைக்கப்படுகின்றன. இந்த புடவைகளில் பயன்படுத்தப்படும் பட்டு மிக உயர்ந்த தரம் வாய்ந்தது.
இந்த வகை பட்டை பயன்படுத்துவதனால் புடவை பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.
காஞ்சிவரம் புடவைகளின் சிறப்பு அம்சங்களில் ஒன்று ஜரி வேலைப்பாடு. ஜரி என்பது உலோக நூலின் ஒரு வடிவமாகும்.
தங்கம் அல்லது வெள்ளி ஜரிகை பயன்படுத்தப்பட்டு துணி நெய்யப்படுகிறது.
திறமையான கைவினைஞர்களின் நுட்பமான கைவினைத்திறனால் ஜரி வேலைகளின் அழகு தெரிகிறது.
இந்த ஜரி வேலைகள் பெரும்பாலும் கோயில் கலை மற்றும் இயற்கையால் ஈர்க்கப்பட்ட பாரம்பரிய வடிவமைப்புகளை உள்ளடக்கியது.
காஞ்சிவரம் புடவைகள் அவற்றின் மாறுபட்ட பார்டர்கள் மற்றும் பல்லு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன. காஞ்சிவரம் புடவைகளின் பார்டர் மற்றும் பல்லு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.
காஞ்சிவரம் புடவைகளின் வடிவமைப்புகள் பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளங்களை பிரதிபலிகின்றன.
புடவைகளில் பொதுவாக மயில்கள், யானைகள், பூக்கள் என பாரம்பரிய டிசைன்கள் இடம்பெற்றிருக்கும். இந்த உருவங்கள் புடவையின் அழகியலில் பங்களிப்பது மட்டுமல்லாமல், கலாச்சார மற்றும் மத முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.
காஞ்சிவரம் புடவைகள் திறமையான கைவினைஞர்களால் கைகள் கொண்டு நெய்யப்படுகின்றன. பெரும்பாலும் தலைமுறைகள் கடந்து வந்த பழமையான நுட்பங்களையே இதில் பின்பற்றுகின்றன.
குறிப்பாக தென்னிந்திய திருமணங்கள் மற்றும் திருவிழாக்களில் காஞ்சிவரம் புடவைகள் முக்கிய கலாச்சார முக்கியத்தைக் கொண்டுள்ளன. மணமக்கள் திருமண நாளில் காஞ்சிவரம் புடவை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
காஞ்சிவரம் புடவைகள் பார்ப்பதற்கு மட்டுமின்றி, கட்டுவதற்கு சௌகரியமாக இருக்கும். சூடான காலநிலையில் கூட எரிச்சலை உண்டாக்காது. புடவையின் எடையும் லேசானதாக இருக்கும்.
காஞ்சிவரம் புடவைகளின் ஒவ்வொரு நூலிலும் பாரம்பரியம், ஆடம்பரம், காலத்தால் அழியாத அழகு, நெசவாளர்களின் கலைத்திறன் என பல விஷயங்கள் இருக்கும்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust