மேகாலயா: "விசில் தான் எங்க மொழி" - இசை கிராமத்தின் விசித்திர கதை

மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கிலிருந்து சுமார் 60 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது காங்தாங் என்கிற கிராமம். இந்த கிராமம் “விசிலிங் வில்லேஜ்” என்று பரவலாக அறியப்படுகிறது.
மேகாலயா: "விசில் தான் எங்க மொழி" - இசை கிராமத்தின் விசித்திர கதை
மேகாலயா: "விசில் தான் எங்க மொழி" - இசை கிராமத்தின் விசித்திர கதைட்விட்டர்

சில்லுனு ஒரு காதல் திரைப்படக் காட்சி நினைவிருக்கிறதா? கதையின் நாயகர்களை அறிமுகப்படுத்தும் காட்சியில், சூர்யா, ஜோதிகா அவர்களது குழந்தை என மூவரும் விசிலடித்துக்கொண்டு தான் பேசிக்கொள்வார்கள்.

அப்படி தான் இந்த கிராமத்தில் இருப்பவர்களும் பேசிக் கொள்வார்களாம். பெயர் சொல்லி ஒருவரை ஒருவர் கூப்பிட்டுக் கொள்ளமாட்டார்கள்.

ஒரு ஒரு நபருக்கும் ஒரு தனி ட்யூன் பெயராக சூட்டப்பட்டிருக்கிறது. அதனை விசில் செய்து கூப்பிட்டுக்கொள்கிறார்கள், பேசிக்கொள்கிறார்கள்

மேகாலயா: "விசில் தான் எங்க மொழி" - இசை கிராமத்தின் விசித்திர கதை
சாலைகளே இல்லாத ஓர் அடடே கிராமம் - இங்கு படகு சவாரி மட்டுமே

மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கிலிருந்து சுமார் 60 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது காங்தாங் என்கிற கிராமம். இந்த கிராமம் “விசிலிங் வில்லேஜ்” என்று பரவலாக அறியப்படுகிறது.

மொத்தம் 700 பேர் கொண்ட இக்கிராமத்தில் 700 வகையான இசை எப்போதும் இசைத்துக்கொண்டே இருக்கும்

காசி பழங்குடி மக்களான இவர்களுக்கு, கிராமத்தில் இரண்டு பெயர்கள். ஒன்று வழக்கமாக நமக்கு வைக்கப்படும் பெயர்கள், மற்றொன்று இசைப் பெயர். இந்த இசைப்பெயரிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒரு ஷார்ட் சாங், மற்றொன்று லாங் சாங்.

இந்த ஷார்ட் சாங் வீட்டிலிருப்பவர்கள் அழைப்பதற்காக, லாங் சாங் ஊரார் பயன்பாட்டிற்கு.

இந்த இசையை இவர்கள் ’ஜிங்கர்வை லாபெய்’ என்று அழைக்கிறார்கள். இது ’அம்மாவின் அன்பு பாடல்’ என்று பொருள்படுகிறது. அதாவது, குழந்தை பிறந்த பிறகு, அம்மா தன் குழந்தைக்காக இந்த இசையை அமைப்பார்.

கிராமவாசி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, “குழந்தை பிறந்தவுடன் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்காக இந்த இசையை அமைப்பார். கிராமத்தினர் யாராவது இறந்துவிட்டால், அந்த இசையும் அவர்களுடன் சேர்த்து மரணித்திவிடும்” என்றார்.

பல தலைமுறைகளாகவே இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருவதாக கூறும் கிராமவாசிகள், இது எப்போது என்ன காரணத்திற்காக தொடங்கப்பட்டது என்பது தெரியவில்லை, ஆனால் இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது எனக் கூறுகின்றனர்.

மேகாலயா: "விசில் தான் எங்க மொழி" - இசை கிராமத்தின் விசித்திர கதை
கூகுள், காபி, ஒன் பை டூ - குழந்தைகளுக்கு விநோத பெயர் சூட்டும் ஒரு அடடே இந்திய கிராமம்!

பெயர்கள் மட்டுமல்லாமல், ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதும் இசையின் வாயிலாகவே!

வயல்வெளிகளில், காடுகளில் வேலைபார்க்கும்போது அசதி தெரியாமல் இருக்க பாட்டு பாடுவது வழக்கம். ஆனால் இவர்கள் இயல்பாக பேசிக்கொள்வதே பாட்டுபாடி தான்!

இதை பற்றி அறிந்த அக்கம்பக்கத்து கிராமவாசிகளும் இந்த வழக்கத்தை பின்பற்ற தொடங்கியுள்ளதாக கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.

சிறந்த சுற்றுலா கிராம விருதை கடந்த ஆண்டு சுற்றுலா அமைச்சகம் காங்தாங் கிராமத்திற்கு வழங்கியது. மேலும், 2019 ஆம் ஆண்டு பீகார் எம்பி ராகேஷ் சின்ஹா, கிராமத்தை தத்தெடுத்து உலக பாரம்பரிய தலமாக காங்தாங்கை அறிவிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

மேகாலயா: "விசில் தான் எங்க மொழி" - இசை கிராமத்தின் விசித்திர கதை
Bera : மனிதர்களும் சிறுத்தைகளும் ஒன்றாக வாழும் இந்திய கிராமம்- அசரடிக்கும் தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com