365 நாளில் ரூ.30 ஆயிரம் கோடி; அசத்திய 59 வயது பெண் - யார் இந்த Falguni Nayar?

அடுத்தபடியாக இந்திய பிராண்டுகள் மட்டுமல்லாமல், சர்வதேச பிராண்டுகள், இதுவரை கேட்டிராத பிராண்டுகள் என அழகு சாதன பொருட்களின் விற்பனை விரிவாக்கப்பட்டது.
இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆனார் ஃபால்குனி நாயர்
இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆனார் ஃபால்குனி நாயர் டிவிட்டர்
Published on

பிரபல அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் நைகா. இதன் நிறுவனர் ஃபால்குனி நாயர் தற்போது இந்தியாவின் பணக்கார பெண்மணி என அறிவிக்கப்பட்டுள்ளார். பையோகான் நிறுவனர் கிரண் மஜும்தாரை பின்னுக்கு தள்ளி, ஒரே வருடத்தில் இவரது சொத்து மதிப்பு 38,700 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

இன்று இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஃபால்குனி நாயர் யார்? 

இன்வெஸ்ட்மென்ட் பேங்கர் ஆக இருந்த ஃபால்குனி நாயர் கடந்த 2012ஆம் ஆண்டு, நைகா ஸ்டார்ட் அப்பை துவங்கினார். அன்றைய தேதியில் அதிக புழக்கத்தில் இல்லாத டிஜிட்டல் வர்த்தக தளத்தை தேர்ந்தெடுத்தார் ஃபால்குனி.

கடைகளுக்கு  சென்று வேண்டியவற்றை வாங்கிக்கொண்டிருந்த காலத்தில், இருந்த இடத்தில் ஒரு பட்டனை அழுத்தினால் பொருட்கள் வீடு தேடி வரும் தொழிலை தொடங்கிய நைகாவுக்கு பெறும் வரவேற்பு கிடைத்தது. மேலும், அழகு சாதன பொருட்கள் பெண்களுக்கு மட்டுமல்லாது, ஆண்களுக்கும் தான் என்ற யுக்தியும் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

அடுத்தபடியாக இந்திய பிராண்டுகள் மட்டுமல்லாமல், சர்வதேச பிராண்டுகள், இதுவரை கேட்டிராத பிராண்டுகள் என அழகு சாதன பொருட்களின் விற்பனை விரிவாக்கப்பட்டது.

குஜராத்தில் பிறந்த ஃபால்குனி நாயர் அகமதாபாத்  இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டில் படித்தார். கோடக் மஹிந்திரா கேபிடல் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் படி, 2009 ஆம் ஆண்டில் தான் இவர் ஒரு தொழில்முனைவோராக மாறுவது குறித்து ஆலோசித்தார். அழகு சார்ந்த மல்டி பிராண்ட் சில்லறை விற்பனையாளராக வேண்டும் என முடிவெடுத்தார் ஃபால்குனி, 

இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆனார் ஃபால்குனி நாயர்
Nykaa: இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆனார் ஃபால்குனி நாயர் - அடுத்தடுத்த இடங்களில் யார்?

2012 ஆம் ஆண்டில்,நைகாவை நிறுவினார் ஃபால்குனி. இவை அனைத்து பெண்களுக்கும், ஆண்களுக்கு ஆன்லைனில் அழகுசாதனப் பொருட்களை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது என்று நியூஸ் 18 தளத்திற்கு அவர் தெரிவித்தார். நைகா நிறுவனத்தை துவங்கியபோது அவர் 50 வயதை பூர்த்தி செய்திருந்தார். நைகா என்ற வார்த்தைக்கு பொருள் சமஸ்கிருதத்தில் ஹீரோயின் என்பதாகும்.

நைகா நிறுவனம் ஆரம்ப காலத்தில் ஃபால்குனி நாயர் மற்றும் அவரது கணவர் சஞ்சய் நாயர் இருவரது நிதியில் தான் இயங்கியது. சஞ்சய் நாயர் தனியார் ஈக்விட்டி நிறுவனமான கேகேஆர் & கோ -வின் தலைவர்.

"நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக குடும்ப நிதியில் இயங்கியது. நைகா நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் அமெரிக்க தனியார் பங்கு நிறுவனமான டிபிஜி க்ரோத்,பில்லியனர்கள் ஹர்ஷ் மரிவாலா மற்றும் ஹாரி பங்கா ஆகியோர் அடங்குவர்.

அவிவா இன்சூரன்ஸ், டாபர் இந்தியா உள்ளிட்ட பல வாரியங்களில் பணியாற்றும் ஃபால்குனி நாயர், டாடா மோட்டார்ஸ் போர்டில் ஒரு சுயாதீன உறுப்பினராக உள்ளார்.

ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, நைகா இப்போது ஆன்லைன் மற்றும் கடைகளில் 4,000 க்கும் மேற்பட்ட பிராண்டுகளை விற்கிறது.

ஃபால்குனி, "அழகாக இருக்க விரும்பும் பெண்களுக்காக நான் துணை நிற்க விரும்பினேன், அழகு என்பது ஆண்களின் கண்களுக்கோ,  அல்லது மற்ற பெண்களுக்காவோ அல்ல.பெண்கள் அவர்கள் அழகாக இருக்கிறார்கள் என்று நம்பவேண்டும்" என்றார்.

இன்று ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனையில் முன்னிலையில் இருக்கிறது நைகா நிறுவனம்!

இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆனார் ஃபால்குனி நாயர்
ராகேஷ் ஜுன்ஜுன் வாலா: கலங்கும் தேசம், கண்ணீர் பகிரும் தலைவர்கள் - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com