குஜராத்: ஜடேஜாவின் மனைவி ரிவபா பாஜக சார்பில் வெற்றி - வாக்கு வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி, ரிவாபா ஜடேஜா போட்டியிட்டார்.
ரிவாபா ஜடேஜா
ரிவாபா ஜடேஜாட்விட்டர்
Published on

பாஜக சார்பில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ரிவாபா ஜடேஜா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ரிவாபா இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ஆவார்.

குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில், குஜராத்தில் பாஜக வெற்றிப்பெறும் என்று தரவுகள் கூறியது.1997 முதல் பாஜகவின் கோட்டையாக இருக்கிறது குஜராத் மாநிலம்.

இம்முறையும் பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது பாஜக.

இந்நிலையில் குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி, ரிவாபா ஜடேஜா போட்டியிட்டார்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது சற்று பிந்தங்கியிருந்த ரிவாபா, சில நிமிடங்களிலேயே முன்னிலை வகிக்க தொடங்கினார்.

17 சுற்று வாக்கு எண்ணிக்கையில் 16 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், 62000 வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை வகித்து வெற்றி பெற்றார் ரிவாபா.

இவரை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் கர்ஷன்பாய் கர்முர் 34,000 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிபேந்தர்சிங் ஜடேஜா 23000 வாக்குகள் பெற்றுள்ளார். பிபேந்தர்சிங் ஜடேஜா ரவீந்திர ஜடேஜாவின் தந்தை ஆவார்.

ரிவாபா ஜடேஜா
Jadeja: CSK விலிருந்து விலகுகிறாரா ஜடேஜா? - ஆகாஷ் சோப்ரா கூறுவது என்ன?

”27 வருடங்களாக பாஜக குஜராத்திற்காக உழைத்துள்ளது. குஜராத் மற்ற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இதனால் மக்களும் பாஜகவை விட்டுக்கொடுத்ததில்லை” என்று ரிவாபா தெரிவித்திருந்தார். மேலும் தன்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்த கட்சிக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரிவாபா.

இதே நிலை தொடர்ந்தால், ரிவாபாவின் இந்த வெற்றி, பாஜக கட்சிக்கே இதுவரை கிடைத்திடாத பெரிய வெற்றியாக அமையும். இதற்கு முன்னர் 2001 தேர்தலில் 127 தொகுதிகளை பாஜக கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது 155 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

இது இதற்கு முன்னர் 1985ல் காங்கிரஸ் கட்சி வென்ற 149 தொகுதிகளையும் விட அதிகம் என்பது கவனிக்கதக்கது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்தார் ரிவாபா ஜடேஜா. முன்னர் கரனி சேனாவின் உறுப்பினராக இருந்த ரிவாபா, பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றி வந்தார்.

5 செப்டம்பர் 1990ல் பிறந்த ரிவாபா ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர். இவரது தந்தை தொழிலதிபர், தாயார் ரயில்வே துறையில் பணியாற்றி வந்தார். ரிவாபா ராஜ்கோட்டில், ஆத்மீய இண்டஸ்ட்ரீஸ் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்சஸ் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்.

இது ரிவாபா போட்டியிடும் முதல் தேர்தலாகும். ரிவாபாவுக்காக அவரது கணவர் ஜடேஜாவும் பிரச்சாரம் செய்ய களத்தில் குதித்திருந்தார்.

ரிவாபா தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற செய்திகள் வெளியானதிலிருந்து, இரு காரணங்களுக்காக அவர் அதிகமாக பேசப்பட்டார்.

ஒன்று நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி என்பதாலும், மற்றொன்று, இவரது மாமனார் பிபேந்திர சிங் ஜடேஜா இவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் களமிறக்கப்பட்டார் என்பதற்காகவும் அதிகமாக பேசப்பட்டார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் எதிரெதிர் கட்சிகளுக்காக போட்டியிடுவது பரபரப்பாக பேசப்பட்டது.

ரிவாபா ஜடேஜா
நடாவ் லபிட்: Kashmir Filesஐ விளாசிய யூத இயக்குநர்- காட்சிகளில் புரட்சி செய்யும் இவர் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com