”மிஸ் இந்தியா” பட்டம் வென்ற கர்நாடக அழகி - யார் இந்த சினி ஷெட்டி?

சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த சினி, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராதலால், நிதி நெருக்கடி இவரது தேவைகளை பூர்த்தி செய்ய பெருந்தடையாக இருந்தது. தன்னை சுற்றியிருந்த நெகட்டிவிட்டியால் பல முறை தனிமையாலும், தனது சுயத்தை இழப்பது போன்ற மனநிலையிலும் இருந்துள்ளார் சினி.
Sini Shetty
Sini Shetty Twitter
Published on

ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சினி ஷெட்டி.

21 வயதே ஆன இவர், ஜூலை மூன்றாம் தேதி மும்பையிலுள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா 2022ல் கலந்துக்கொண்டார். இதில் ஃபெமினா மிஸ் இந்தியா 2022 என்ற பட்டத்தை சினி ஷெட்டி பெற்றார்.

இந்த ஃபெமினா மிஸ் இந்தியா 2022 போட்டியின் நடுவர்களாக பாலிவுட் நடிகை நேஹா துபியா, டினோ மொரியா, மலைக்கா அரோரா, மற்றும் ரோஹித் காந்தி, ராகுல் கன்னா, முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் இருந்தனர்.

Sini Shetty
Sini Shetty Twitter

இப்போட்டிக்கான ஆடிஷன்கள் இணையம் மூலம் நடத்தப்பட்டது. நாடு முழுவதிலிருந்தும் பங்கேற்றவர்களிலிருந்து, 31 மாநிலங்களிலிருந்து அடுத்தக் கட்டத்திற்கு அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் மும்பையின் ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருந்த இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்கள்

கடுமையான போட்டிகள், சவால்களை எதிர்கொண்டு, ஃபெமினா மிஸ் இந்தியா 2022 பட்டத்தை வென்றார் சினி ஷெட்டி.

யார் இந்த சினி ஷெட்டி?

மும்பையில் பிறந்த சினி ஷெட்டி, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். சிறு வயது முதலே பரதநாட்டிய பயிற்சியை கற்றுக்கொண்ட சினி, தனது 14 வயதில் அரங்கேற்றம் செய்தார்.

இதை தான் தனது வாழ்வின் மிக முக்கியமான, சந்தோஷமான தருணம் என்று கூறும் சினி ஷெட்டி, "நடனம் மூலம் கிடைக்கும் அனுபவம் ஈடு இணையற்றது. மனம், உடல், ஆன்மாவை சீராக ஒருமைப்படுத்தவும் நடனம் எனக்கு உதவியது" என்றார்.

குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்களின் ஊக்கம் அவரது கலை, கல்வி தேடல்களுக்கு துணையாக இருந்தபோதிலும், வாழ்வில் எந்த ஒரு விஷயமும் இவருக்கு எளிதாக கிடைத்துவிடவில்லை. மற்றவரின் கருத்துகள் சினியை மிகவும் மனவேதனைக்குள்ளாக்கியதாம்.

மிக சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த சினி, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராதலால், நிதி நெருக்கடி இவரது தேவைகளை பூர்த்தி செய்ய பெருந்தடையாக இருந்தது. தன்னை சுற்றியிருந்த நெகட்டிவிட்டியால் பல முறை தனிமையாலும், தனது சுயத்தை இழப்பது போன்ற மனநிலையிலும் இருந்துள்ளார் சினி.

அக்கவுன்டிங் அண்ட் ஃபினான்ஸில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ள சினி, Chartered FInancial Analyst (CFA) ஆக வேண்டும் என்பது தனது கனவு என்றார்.

வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று கூறும் சினி, தன்னுடைய இன்ஸ்பிரேஷன் 2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா என்றார்.

உங்களுக்கு ஒருவரின் மீது ஏற்படும் அதீத ஈர்ப்பினாலும், மரியாதையினாலும், அவர்கள் கூறும் ஒரு சில விஷயங்கள் உங்கள் மனதில் வேரூன்றி விடும்.

"உங்களை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக்கொள்ள நினைக்காமல், அந்த கூரையை உடைத்தெறியும் அளவுக்கு திறனை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று பிரியங்கா ஒரு முறை கூறியது தான் சினியின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது.

ஃபெமினா மிஸ் இந்தியா 2022ன் முதல் 31 போட்டியாளர்களில் ஒருவராக சினி தேர்வு செய்யப்பட்ட போது பல தயக்கங்கள் தனக்குள் இருந்ததாக கூறினார்.

தனக்கு கிடைத்த வாய்ப்பும், முன் வைக்கப்பட்டுள்ள பொறுப்புகளும் தான் தன்னை இப்போட்டியில் தொடர ஊக்குவித்தாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இவர் 71வது உலக அழகி போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்பார். ராஜஸ்தானை சேர்ந்த ருபல் ஷிகாவத் இரண்டாவது இடத்தையும், உத்தர பிரதேசத்தின் ஷிந்தா சௌஹான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

Sini Shetty
சர்வதேச அழகி போட்டி - பட்டம் வென்ற பிலிப்பைன்ஸ் திருநங்கைக்கு குவியும் பாராட்டு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com