சர்வதேச அழகி போட்டி - பட்டம் வென்ற பிலிப்பைன்ஸ் திருநங்கைக்கு குவியும் பாராட்டு

மிஸ் இன்டெர்னேஷனல் குயின் என்ற போட்டி பிரத்தியேகமாகத் திருநங்கைகளுக்காகத் துவங்கப்பட்ட ஒரு சர்வதேச போட்டி. 2004 ஆம் ஆண்டு தாய்லாந்தில் திருநங்கைகளுக்காக, சமூகத்தில் அவர்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நோக்கத்தோடு துவங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி.
Filipina Ravena
Filipina RavenaTwitter
Published on

மிஸ் இன்டெர்னேஷனல் குயின் அழகி பட்டத்தை வென்றுள்ளார் திருநங்கை ஒருவர். இவர் பிலிப்பைன்சை சேர்ந்த தொழில்முனைவோர் ஆவார்.

பெண் சமத்துவத்தைப் பற்றிய சமூகம் சிறுக சிறுக மூன்றாம் பாலினத்தவரையும் அடையாளம் காண ஆரம்பித்து, அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்க துவங்கியிருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு, அடிப்படை வசதிகள் மட்டுமன்றி, அவர்கள் விரும்பும் துறையில் சாதிக்க வழிவகுக்கப்பட்டது.

அப்படி இவர்களுக்காக உலகளவில் அழகி போட்டிகளும் நடைபெறுவது நாம் அறிந்ததே. அந்த வகையில், தாய்லாந்தில் நடந்த சர்வதேச அழகி போட்டியில் திருநங்கை ஒருவர் பட்டம் வென்றுள்ளார்.

Crowning Filipina Ravena
Crowning Filipina RavenaTwitter

மிஸ் இன்டெர்னேஷனல் குயின் என்ற போட்டி பிரத்தியேகமாகத் திருநங்கைகளுக்காகத் துவங்கப்பட்ட ஒரு சர்வதேச போட்டி. 2004 ஆம் ஆண்டு தாய்லாந்தில் முதன் முதலாக திருநங்கைகளுக்காக, சமூகத்தில் அவர்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நோக்கத்தோடு துவங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி.

2004 முதல் வருடந்தோறும் நடைபெற்று வந்த இந்த சர்வதேச அழகிப்போட்டி, கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை. மேலும் பாலின சமத்துவத்தை கொண்டாடுவதற்காக பிரைட் மாதத்தை போற்றும் விதமாகவும் கொண்டாடப்படும் இந்நிகழ்வு, தாய்லாந்தின் கடற்கரையோர நகரமான பட்டாயாவில் மீண்டும் தொடங்கியது என்று மிச் டிஃபானி ஷோவின் தலைமை நிர்வாக அதிகாரி அலிசா பாந்துசாக் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு நாடுகளிலிருந்து பங்கேற்ற திருநங்கைகளோடு தற்போது இப்போட்டி நடைபெற்றது.

Filipina with Miss Columbia and France
Filipina with Miss Columbia and FranceTwitter

இதன் இறுதி சுற்றில் மொத்தம் 22 பேர் பங்கேற்றனர். இந்த 22 அழகிகளில், பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா சர்வதேச அழகியாக முடிசூடப்பட்டுள்ளார். கொலம்பியா மற்றும் பிரான்ஸ் நாட்டு அழகிகள், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை வென்றுள்ளனர்.

பிலிப்பினா ரவேனா ஒரு புகழ்பெற்ற தொழில்முனைவோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Filipina Ravena
காட்டுத்தீ முன்பு வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கிய மாடல் அழகி - என்ன நடந்தது.?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com