விநாயகர் சதுர்த்திக்கு ஏன் கொழுக்கட்டை செய்கிறோம்?

இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் விநாயகர் சதுர்த்திக்கு, பிரசாதமாக, கொழுக்கட்டை எனும் இனிப்பு வகையை விநாயகருக்கு படைக்கின்றனர். இது தான் விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவு என்றும் கதைகளில் நாம் கேட்டிருக்கிறோம். இதற்கு என்ன காரணம்?
விநாயகர் சதுர்த்திக்கு ஏன்  கொழுக்கட்டை செய்கிறோம்?
விநாயகர் சதுர்த்திக்கு ஏன் கொழுக்கட்டை செய்கிறோம்?canva
Published on

இந்திய கலாச்சாரத்தில் முழுமுதற் கடவுளாக வணங்கப்படுவது விநாயக பெருமானை தான்.

விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.

பார்வதி தேவி ஒரு முறை குளிக்க செல்கையில், காவலுக்காக தன் உடம்பில் தேய்த்திருந்த சந்தனத்தை சேகரித்து மனித உருவம் செய்து, அதற்கு உயிரளித்தார். அவனை காவலுக்கு நிறுத்தி யார் வந்தாலும் உள்ளே விடாதே என்று உத்தரவிட்டு நீராட சென்றார் பார்வதி.

அப்போது அங்கு வந்த சிவபெருமானை உள்ளே அனுமதிக்கவில்லை சிறுவன். கோபத்தில், காவலுக்கு நின்ற அந்த சிறுவனின் தலையை கொய்தார் சிவபெருமான்.

நிஜத்தை அறிந்த பின்னர், நீங்கள் பார்க்கும் முதல் உயிரினத்தின் தலையை எடுத்து வாருங்கள் என்று சிவன் உத்தரவிட, அவர்கள் முதலில் பார்த்தது யானையை தான். அதன் தலையாய் கொய்து வந்து சிறுவனுக்கு வைத்து, மீண்டும் உயிரளித்தார் சிவன். இதுவே விநாயகர் பிறந்த கதை!

இது போன்று பல கதைகளும் ஆங்காங்கே உண்டு

இந்த விநாயகரின் பிறந்த நாளை தான் விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுகிறோம்

களிமண்ணால் செய்த விநாயகரை எருக்கம் பூ, அருகம்புல் வைத்து அலங்கரித்து, பாரம்பரியமாக பூஜைகள் செய்து வழிபாடு நடக்கிறது.

இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் விநாயகர் சதுர்த்திக்கு, பிரசாதமாக, கொழுக்கட்டை எனும் இனிப்பு வகையை படைக்கின்றனர். இது தான் விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவு என்றும் கதைகளில் நாம் கேட்டிருக்கிறோம்.

இதற்கு என்ன காரணம்?

கதைகளின் படி, ஒரு முறை, சிவபெருமான், தன் மனைவி பார்வதி மற்றும் மகன் விநாயகருடன் அத்ரி என்ற முனிவரை சந்திக்க அவரது குடிலுக்கு சென்றனர்.

அங்கு அவரது மனைவி அனசூயா அறுசுவை விருந்து தயாரித்தார். ஆனால், விநாயகனின் பசி எவ்வளவு சாப்பிட்டாலும் அடங்கவில்லை. விநாயகன் சாப்பிடும்வரை சிவபெருமானும் காத்திருந்தார்.

விநாயகர் சதுர்த்திக்கு ஏன்  கொழுக்கட்டை செய்கிறோம்?
விநாயகர் சதுர்த்தி : ஆடல், பாடல் நிகழ்ச்சி தொடர்பாக நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்ன?

அனசூயாவும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். குழந்தையின் பசி அடங்கும் என்று, ஒரு இனிப்பான உணவை பரிமாறுகிறார். அதனை சாப்பிட்டவுடன் பெரிதாக ஏப்பம் விட்டாராம் குழந்தை விநாயகன்.

அனசூயாவிடம், இது என்ன இனிப்பு என்று பார்வதி கேட்ட பொது, அதன் பெயர் கொழுக்கட்டை என்று கூறினார்.

விநாயகரின் பசியை இந்த இனிப்பு வகை ஆற்றியதால், இனி வழிபடும் பக்தர்கள், 21 கொழுக்கட்டைகளை விநாயகருக்கு படைக்கவேண்டும் என வரம் கேட்டுள்ளார்.

அதனால் தான் விநாயகர் சதுர்த்திக்கு இனிப்பு கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்திக்கு ஏன்  கொழுக்கட்டை செய்கிறோம்?
விநாயகர் சதுர்த்தி : களிமண் சிலை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com