Ambani: கூகுளில் அதிகம் தேடப்பட்ட '300kg gold' - இதற்கும் அம்பானிக்கும் என்ன தொடர்பு?

இஷா அம்பானி, இஷா அம்பானி கணவர், இஷா அம்பானி குழந்தைகள், அம்பானி குடும்பம் ஆகிய சொற்கள் தேடப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து '300kg gold' என்ற சொல்லும் தேடப்பட்டுள்ளது. இதற்கும் அம்பானிக்கும் என்ன சம்பந்தம்?
Ambani: கூகுளில் அதிகம் தேடப்பட்ட '300kg gold' - இதற்கும் அம்பானிக்கும் என்ன தொடர்பு?
Ambani: கூகுளில் அதிகம் தேடப்பட்ட '300kg gold' - இதற்கும் அம்பானிக்கும் என்ன தொடர்பு?twitter

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு கடந்த மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்தன.

கலிஃபோர்னியாவில் இருந்து இந்த தம்பதி, குழந்தைகளுடன் மும்பை திரும்பும் தருணத்தை கொண்டாட, மும்பையில் உள்ள அவர்களது வீடுகள், அந்த வீதியே திருவிழாக் கோலம் பூண்டது.

கடந்த நவம்பர் 19 ஆம் தேதி இஷா அம்பானிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கு கிருஷ்ணா, ஆதியா எனப் பெயரிடப்பட்டுள்ளது. குழந்தைகளுடன் இந்த தம்பதி நேற்று மும்பை வந்திறங்கினர்

இதற்கிடையில், கூகுளில் சில வார்த்தைகள் அதிகமாக தேடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தரவுகளை வெளியிட்டது. இஷா அம்பானி, இஷா அம்பானி கணவர், இஷா அம்பானி குழந்தைகள், அம்பானி குடும்பம் ஆகிய சொற்கள் தேடப்பட்டுள்ளன.

இவற்றுடன் சேர்த்து '300kg gold' என்ற சொல்லும் தேடப்பட்டுள்ளது. இதற்கும் அம்பானிக்கும் என்ன சம்பந்தம்?

Ambani: கூகுளில் அதிகம் தேடப்பட்ட '300kg gold' - இதற்கும் அம்பானிக்கும் என்ன தொடர்பு?
கேதர்நாத் கோவிலுக்கு 'ரூ.5 கோடி' தட்சணை - அள்ளிக்கொடுத்த அம்பானி!

குழந்தைகளை வீட்டிற்கு வரவேற்கும் போது பூஜைகள், ஆடம்பரமான உணவு விருந்து உள்ளிட்ட தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அறிக்கைகளின்படி, சிறப்பு பூஜைகள் நடத்திக்கொடுக்கும் பூசாரிகளுக்கு அம்பானி 300 கிலோ எடையில் தங்கம் தானம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

விருந்தில் சமைக்க உலகளாவிய சமையல் கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் குழந்தைகளின் பேரில் திருப்பதி, துவாரகீஷ் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அதன் பிரசாதங்களும் அந்த விருந்தில் பரிமாறப்பட்டுள்ளது.

குழந்தைகளை பத்திரமாக கூட்டி வர, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பிஎம்டபுள்யூ காரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த தகவல்கள் வெளியில் கசிந்த நிலையில், இவற்றைக் குறித்து விவரங்கள் அறிந்துகொள்ள கூகுளில் மக்கள் இந்த சொற்களை தேடியுள்ளனர்

மகள், மருமகன், பேரக் குழந்தைகளை வரவேற்க முகேஷ் அம்பானி, மனைவி நீதா அம்பானி, மற்றும் மகன் ஆகாஷ் அம்பானி ஆக்யோர் கலினா விமான நிலையத்திற்கு நேரில் சென்றுள்ளார். குழந்தைகளை வார்லியில் உள்ள இஷா அம்பானியின் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அம்பானி தம்பதி குழந்தைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்லும் வீடியோ ட்விட்டரில் பரவி வைரலானது.

Ambani: கூகுளில் அதிகம் தேடப்பட்ட '300kg gold' - இதற்கும் அம்பானிக்கும் என்ன தொடர்பு?
Mukesh Ambani : மீண்டும் துபாயில் வீடு வாங்கிய முகேஷ் அம்பானி - எத்தனை கோடிக்கு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com