அசாமை சேர்ந்த தம்பதிக்கு ஒரு வருடம் வரை இலவசமாக பீட்சா அளிக்கவுள்ளது பிரபல உணவகமான பீட்சா ஹட்.
திருமணங்களை சுவாரஸ்யமாக மாற்றும் பழக்கம் இன்றைய தலைமுறையினரிடம் நாம் நிறைய பார்க்கலாம். அந்த வகையில், அசாமை சேர்ந்த தம்பதியான ஷாந்தி பிரசாத் மற்றும் மிந்து ராய் தங்கள் திருமணத்தின்போது ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமான கண்டிஷன்களை போட்டுக்கொண்டு அதை ஆவணமாக தயாரித்து கையெழுத்திட்டனர்.
நிச்சயம் ஜிம் செல்ல வேண்டும், ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஷாப்பிங், வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பீட்சா போன்ற நிபந்தனைகள் அதிலிருந்தன. இவர்களது திருமண வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, இவர்களுடைய திருமண நிபந்தனைகளில் பங்கு கொண்டுள்ளது பீட்சா ஹட் உணவகம்.
கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவசமாக பீட்சா கொடுப்பதாக உறுதியளித்துள்ளது உணவகம்.
இந்த செய்தியை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தது பீட்சா ஹட். மாதத்திற்கு ஒரு முறை, ஒரு வருடத்திற்கு இலவசமாக இவர்கள் இங்கு பீட்சா சாப்பிடலாம். இந்த விஷயம் தற்போது இணைவாசிகளை கவர்ந்து வருகிறது. உனவகத்தை பாராட்டிய மக்கள், இந்த தம்பதிக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust