”கிரிக்கெட் விளையாட விடணும்”- மணப்பெண்ணிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய நண்பர்கள்

"வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட மணமகள் சம்மதம் தெரிவிப்பது" என்ற ஒப்பந்தப் பத்திரத்தை மணமகள் பூஜாவிடம் கொடுத்து கையெழுத்து பெற்றனர்.
madurai couple
madurai coupleTwitter
Published on

பொதுவாகத் திருமணத்திற்குப் பிறகு ஆண்-பெண்ணின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறி விடுகிறது. அதாவது அவர்களின் தினசரி நடைமுறை மாறி ஒரு கமிட்மெண்ட்குள் வந்து விடுகின்றனர்.

திருமணத்திற்குப் பிறகு ஏதோ காரணங்களுக்காக அவர்களின் நட்பு வட்டாரங்கள் சுருங்கி விடுகிறது.

இதனை பல படங்களில் கூட கூறி இருப்பார்கள். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் தங்களின் நண்பனை வழக்கம் போல கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என மணப்பெண்ணிடம் ஒப்பந்தப் பத்திரத்தில் மணமகனின் நண்பர்கள் கையெழுத்து வாங்கிய சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

marriage
marriageTwitter

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வசிப்பவர் ஹரிபிரசாத். இவர் தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். ஹரிபிரசாத்துக்கும், தேனியைச் சேர்ந்த பூஜா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களது திருமணம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அப்போது திருமணத்துக்கு பின்னும் மணமகனை கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டுமென அவரது நண்பர்கள் மணமகளிடம் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து பெற்ற சம்பவம் காண்போர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

madurai couple
சாதி மறுப்பு திருமணம் : சட்டரீதியாக பாதுகாத்துக் கொள்வது எப்படி?

"வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட மணமகள் சம்மதம் தெரிவிப்பது" என்ற ஒப்பந்தப் பத்திரத்தை மணமகள் பூஜாவிடம் கொடுத்து கையெழுத்து பெற்றனர். இந்த சம்பவம் திருமணத்திற்கு வந்த உறவினர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

madurai couple
பிரதாப் போத்தன் டு பார்த்திபன்: காதல் திருமணம் செய்தும் விவாகரத்து பெற்ற திரையுலக ஜோடிகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com