42 ஆண்டுகளாக மூடப்பட்ட ரயில்நிலையம் : இன்றும் பேய் வழித்தடமாக கருதப்படுவது ஏன்?

ரயில்வே நிர்வாகம் இந்த வதந்திகளை நம்ப மறுத்தாலும், சில நாட்களுக்குப் பிறகு ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தனர்.
Why This 'Haunted' Railway Station In Bengal Remained Shut For 42 Years
Why This 'Haunted' Railway Station In Bengal Remained Shut For 42 YearsTwitter

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பேய் நகரங்கள் உள்ளன.

தற்போது வெறிச்சோடிக் கிடக்கும் இந்த நகரங்கள் ஒரு காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் இடங்களாக இருந்தன. தற்போது அவை ஆள் அரவமற்று இருப்பதற்கு ஒவ்வொரு நகரத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது.

பேய் நகரங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம், இங்கே ஒரு ‘பேய்’ ரயில் நிலையம் இருக்கிறது.

சில அசாதாரண சம்பவங்களைத் தொடர்ந்து 42 ஆண்டுகளாக மூடப்பட்ட ஒரு ரயில் நிலையத்தை பற்றி தான் நாம் இங்கே தெரிந்துக் கொள்ள போகிறோம்.

42 ஆண்டுகளாக ரயில்வே சேவை நிறுத்தம்

இந்த பேய் ரயில் நிலையம் மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இந்த ரயில் நிலையத்தின் பெயரைக் கேட்டவுடன் மக்கள் அச்சம் அடைவதாகவும், இந்த அச்சத்தின் காரணமாக எந்த ஒரு ரயில்வே ஊழியரும் இந்த ரயில் நிலையத்தில் பணியாற்றத் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த அச்சத்தை தொடர்ந்து 42 ஆண்டுகளாக ரயில்வே சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இன்றும் இந்த ரயில் நிலையம் வழியாக ரயில்கள் செல்லும்போது, ​​ரயிலுக்குள் அமைதி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரபரப்பான நிலையமாக இருந்த பெகுன்கோடர்

இந்த ரயில் நிலையத்திற்கு மாலையில் யாரும் வருவதில்லை. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் கூட இங்கு காணப்படுவதில்லை என்று சில தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையத்தின் பெயர் பெகுன்கோடர். இது 1960 களில் ஒரு பரபரப்பான நிலையமாக இருந்தது. இந்த ரயில் நிலையம் திறக்கப்பட்டபோது சுற்றுவட்டார மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஆதாரங்களின்படி, 1967 ஆம் ஆண்டில், இந்த நிலையத்தின் தற்போதைய ஸ்டேஷன் மாஸ்டர் ரயில் பாதையில் ஒரு அனுமானுஷ்யமான விஷயத்தை பார்த்ததாகக் கூறினார்.

இரவில் ரயில் பாதையில் வெள்ளை நிறத்தில் அங்கு எதோ ஒன்று உலாவுகிறது என்று ஸ்டேஷன் மாஸ்டர் இது பற்றி கூறியிருக்கிறார். இந்த வதந்தி அப்பகுதி முழுவதும் வேகமாக பரவியது. இதைத் தொடர்ந்து, பலர் வெள்ளை சேலையில் ஒரு பெண்ணை பார்த்ததாகக் கூறினர்.

Why This 'Haunted' Railway Station In Bengal Remained Shut For 42 Years
தனுஷ்கோடி முதல் உனகோடி வரை - பேய் நகரமாக கருதப்படும் இந்திய நகரங்களின் கதை!

தற்கொலை செய்து கொண்ட சிறுமி

இந்த ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்ட சிறுமி ஆவி ஆகிவிட்டதாக மக்கள் கூற ஆரம்பித்தனர். இந்திய ரயில்வேயில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த சுபாஷிஷ் தத்தா ராய், இந்த ரயில் நிலையத்தைப் பற்றிய விரிவான கதையை எழுதியுள்ளார்.

ரயில்வே நிர்வாகம் இந்த வதந்திகளை நம்ப மறுத்தாலும், சில நாட்களுக்குப் பிறகு ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, வதந்தி உண்மை வடிவம் பெறத் தொடங்கியது. ஸ்டேஷன் மாஸ்டர் இறந்த பிறகு, இங்கு பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் அனைவரும் வேலை செய்ய மறுத்துவிட்டனர்.

நிஜ ‘பேய்’ நிலையம்

இதனால், இந்த ரயில் நிலையத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டன. அடுத்த சில மாதங்களாக அங்கு ஊழியர்களை பணியில் அமர்த்த ரயில்வே முயற்சி செய்து வந்தது.

ஆனால் ஊழியர்கள் யாரும் செல்ல தயாராக இல்லை. பின்னர் ஒரு நாள் இந்த நிலையத்தை மூடுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்த ஸ்டேஷனில் அனைத்து சேவைகளையும் அதிகாரிகள் நிறுத்தியதையடுத்து, இது நிஜமாகவே ஒரு ‘பேய்’ நிலையமாக மாறியது. இந்த ரயில் நிலையம் வழியாக ரயில் செல்லும்போது பயணிகள் அச்சமடைந்தனர்.

Why This 'Haunted' Railway Station In Bengal Remained Shut For 42 Years
உலகிலேயே பயங்கரமான பேய் படம் இது தான் - அறிவியல் சொல்வது என்ன?

மீண்டும் திறக்கப்பட்ட ரயில் நிலையம்

பின்னர் 1990-களில் சில உள்ளூர் மக்கள் இந்த நிலையத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர். ரயில்வேயும் இதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. அதன்பின் 42 ஆண்டுகளுக்குப் பிறகு 2009-ம் ஆண்டு ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் முயற்சியால் பெகுன்கோடர் ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.

ஒரு தனியார் வென்டிங் நிறுவனம் இதை இயக்குகிறது. இன்றும் இங்கு ரயில்வே ஊழியர் யாரும் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

Why This 'Haunted' Railway Station In Bengal Remained Shut For 42 Years
உலகின் அமானுஷ்யமான பேய் பிடித்த 5 காடுகள் குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com