
பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் இ-ரிக்சா ஓட்டுநரை பெண் ஒருவர் கோவமாக திரும்ப திரும்ப தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ரிக்சா தெரியாமல் அந்த பெண் மீது இடித்து விட்டதானால் அவர் இவ்வாறு தாக்கியது தெரியவந்துள்ளது.
ரிக்சா இடித்ததால் அந்த பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் ரிக்சா காரரை தாறுமாறக தாக்கியிருக்கிறார் அந்த பெண். இந்த சம்பவம் நொய்டா நகரில் நடைபெற்றுள்ளது.
அந்த வீடியோவில் 90 நொடிகளில் அந்த ஓட்டுநரை 17 முறை ஓங்கி அறைகிறார் அந்த பெண். அத்துடன் அந்த பெண் ரிக்சா காரரின் கைப்பேசியையும் அபகரித்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பணமும் வாங்கிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக நெட்டிசஙன்கள் அந்த பெண்ணை கடுமையாக சாடி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் இதே போல சாலையில் ஒரு பெண் கார் ஓட்டுநரை தாக்கிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த ரிக்சாகாரர் நொய்டா காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அந்த பெண்ணை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 151,107 மற்றும் 116 ஆகிய சட்டங்களின் கீழ் கைது செய்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust