சத்தீஸ்கர்: ஹைனாவிடம் இருந்து போராடி கணவரை காப்பாற்றிய மனைவி!

மனைவி தொடர்ந்து தாக்கியத்தில் கழுதைப்புலி உயிரிழந்தது. கழுதைப்புலியிடம் இருந்து பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சத்தீஸ்கர்: ஹைனாவிடம் இருந்து போராடி கணவரை காப்பாற்றிய மனைவி!
சத்தீஸ்கர்: ஹைனாவிடம் இருந்து போராடி கணவரை காப்பாற்றிய மனைவி!Canva

சத்தீஸ்கர் மாநிலத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தனது கணவர் நந்துவை தாக்க வந்த, கழுதைப்புலி கூட்டத்திடம் இருந்து அவரது மனைவி சுக்னி போராடி காப்பாற்றியுள்ளார்.

விவசாய குடும்பத்தை சேர்ந்த நந்து யாதவ் மற்றும் சுக்னி தம்பதி நீர்பாசனம் செய்ய வயல்வெளிக்கு சென்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக ஹைனா என்றழைக்கப்படும் கழுதைப்புலி கூட்டம் வந்துள்ளன. அவை நந்துவை பார்த்ததும், வேகமாக ஓடி வந்து தாக்க தொடங்கின. கழுதைப்புலியின் தாக்குதலால் நந்து யாதவ் அலற, கணவரின் சத்தம் கேட்டு மனைவி அந்த இடத்திற்கு வந்தார்.

அதன் பின்னர் கழுதைப்புலிகளிடம் இருந்து கணவரை காப்பாற்ற போராடினார். கணவரை விடுவிக்க அங்கிருந்த கட்டை ஒன்றை எடுத்து, கழுதைப்புலியை தாக்க தொடங்கினார் சுக்னி.

மனைவி தொடர்ந்து தாக்கியத்தில் கழுதைப்புலி உயிரிழந்தது. கழுதைப்புலியிடம் இருந்து பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த கழுதைப்புலியை வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிறகு, உயிரிழந்த கழுதைப்புலியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சத்தீஸ்கர்: ஹைனாவிடம் இருந்து போராடி கணவரை காப்பாற்றிய மனைவி!
LEO: சிங்கத்தை விட புத்திசாலிகளா? விஜய் படத்தில் இடம்பெற்ற Hyena - சுவாரஸ்ய தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com