”5 ரூவா இல்ல, இந்த யூரோ வச்சுக்கோங்க” பயணியிடம் வெளிநாட்டு Coin-ஐ கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்

5 ரூபாய் சில்லறை இல்லாததால் ஒரு யூரோ காயினை அவர் வழங்கியுள்ளார். இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் அந்த பெண் பகிர்ந்திருந்தார்.
”5 ரூவா இல்ல, இந்த யூரோ வச்சுக்கோங்க”  பயணியிடம் வெளிநாட்டு Coin-ஐ கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்
”5 ரூவா இல்ல, இந்த யூரோ வச்சுக்கோங்க” பயணியிடம் வெளிநாட்டு Coin-ஐ கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்ட்விட்டர்

ஐந்து ரூபாய் சில்லறைக்கு பதிலாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பெண்ணுக்கு ஒரு யூரோ காயினை வழங்கியுள்ள சம்பவம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

டவுன் பஸ் அல்லது ஆட்டோக்களில் பயணிக்கும்போது, பயணக்கட்டணத்திற்கு சரியான சில்லறையை நாம் எடுத்துச் செல்வது மிக முக்கியம்.

என்ன தான் டிஜிட்டல் பேமண்ட் வசதிகள் வந்துவிட்டாலும், இன்றும் சில ஆட்டோக்களில் நாம் பணம் கொடுத்து தான் பயணிக்கிறோம். ஆதலால் தான் இந்த சில்லறை பிரச்னை சமயத்தில் பெரும்பாடாக இருக்கிறது.

அனுஷ்கா என்ற பெண், ஆட்டோவில் பயணித்த கட்டணம் செலுத்திய பிறகு, சில்லறைக்கு பதிலாக வெளிநாட்டு காசை அவருக்கு கொடுத்திருக்கிறார் அந்த ஆட்டோ ஓட்டுநர்.

5 ரூபாய் சில்லறை இல்லாததால் ஒரு யூரோ காயினை அவர் வழங்கியுள்ளார். இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் அந்த பெண் பகிர்ந்திருந்தார்.

ஒரு யூரோவின் இந்திய மதிப்பு 88 ரூபாய். ஐந்து ரூபாய் சில்லறை வாங்கும் இடத்தில் அவருக்கு 83 ரூபாய் அதிகமாக கிடைத்திருக்கிறது எனலாம்.

”5 ரூவா இல்ல, இந்த யூரோ வச்சுக்கோங்க”  பயணியிடம் வெளிநாட்டு Coin-ஐ கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்
"அந்த மனசு தான் சார் கடவுள்" - உறக்கமின்றி தவித்த பயணிக்கு உதவிய Uber ஓட்டுநர்

இது கிட்டதட்ட அவரது பயணக்கட்டணமாகக் கூட இருந்திருக்கலாம். இந்த புகைப்படத்தை அந்த பெண் பகிர்ந்ததிலிருந்து இரண்டு லட்சம் பார்வைகள், ஐந்தாயிரம் லைக்குகள் அவரது பதிவுக்கு கிடைத்திருக்கிறது.

மற்றொரு ட்விட்டர் பயனர் இதே போல தனக்கும் ஒரு பஸ் நடத்துநர் சில்லறை இல்லாததால் இலங்கை காசை வழங்கியதாக கூறியிருந்தார்.

”5 ரூவா இல்ல, இந்த யூரோ வச்சுக்கோங்க”  பயணியிடம் வெளிநாட்டு Coin-ஐ கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்
"இரக்கமுள்ள மனசுக்காரன்டா" சானிடைசர் டு சாக்லேட் - வாடிக்கையாளர்களை கவரும் ஆட்டோ ஓட்டுநர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com