Instagram
InstagramTwitter

” இன்ஸ்டாகிராம் பயன்படுத்தக் கூடாது” - கட்டுப்பாடு விதித்த கணவனை கொலை செய்த மனைவி

கணவன் மனைவிக்கு இடையில் பிரச்னைகள் அதிகமானதால், கோபமடைந்த மனைவி, தான் சமூக வலைத்தளத்தை பயன்படுத்த கணவர் தடையாக இருப்பார் என்று எண்ணி கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்
Published on

கணவன் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த அனுமதிக்காததால் தனது காதலனை விட்டு மனைவி கொலை செய்துள்ளார்.

சமீபகாலமாக சமூகவலைத்தளங்களின் ஆதிக்கம் மனிதர்களிடையே அதிகரித்துள்ளது தெரிந்ததே. இதனால் ஒரு புறம் நமக்கு நெருக்கமானவர்களோடு தொடர்புகொள்ளும் வசதிகளை எளிதாக்கியுள்ளது. ஆனால் இன்னொரு புறம் இதனால் குற்றங்களும் அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஒருவர், தான் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவழிக்க கணவர் தடையாக இருந்து வந்ததால் தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது

ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்தவர் ரமேஷ் படேல். இவரது மனைவி பிரேமிகா குட்டி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ரமேஷ், பிரேமிகாவை பல முறை கண்டித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளது. பிரேமிகாவுக்கு, இணையதளம் மூலம் பழக்கமான சங்கர் என்ற ஆண் நண்பரின் உதவியுடன் கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

திட்டமிட்டபடி, ரமேஷ் தனது உறவினருடன் பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போது, சங்கர் படேல் தனது காரை வைத்து மோதி கொலை செய்துள்ளார். பைக்கில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போலீசாரின் விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என்று நிரூபணமானது. மேலும், சங்கர் படேலுக்கும், பிரேமிகாவுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

Instagram
"ஜீன்ஸ் அணியக் கூடாது": கட்டுப்பாடு விதித்த கணவனைக் கொலை செய்த மனைவி - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com