"ஜீன்ஸ் அணியக் கூடாது": கட்டுப்பாடு விதித்த கணவனைக் கொலை செய்த மனைவி - எங்கே?

”திருவிழாவுக்கு ஏன் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துகொண்டு சென்றாய்?” என கணவர் புஷ்பாவிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். மேலும் இனிமேல் புஷ்பா ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என்றும் கணவர் தெரிவித்துள்ளார்.
Husband and wife (Rep)
Husband and wife (Rep)Pexels
Published on

திருமணத்திற்குப் பின் ஜீன்ஸ் பேண்ட் அணிவதற்கு மறுப்பு தெரிவித்த கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஜோர்பிதா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.சமீபத்தில் திருமணமாகி வந்த புஷ்பா என்ற இளம் பெண், ஜீன்ஸ் பேண்ட் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பிருந்தே புஷ்பா விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றாக இந்த ஜீன்ஸ் உடை இருந்துள்ளது. ஆனால் திருமணத்திற்குப் பின் புஷ்பா ஜீன்ஸ் பேண்ட் அணிவது கணவருக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

jeans
jeansNewsSense

இதனால் அவ்வப்போது கணவர் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அந்த கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு புஷ்பா ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்றுள்ளார். வீடு திரும்பிய பின் ஜீன்ஸ் பேண்ட் காரணத்திற்காகவே இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது.

”திருவிழாவுக்கு ஏன் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துகொண்டு சென்றாய்” என கணவர் புஷ்பாவிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். மேலும் இனிமேல் புஷ்பா ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Husband and wife (Rep)
ஜீன்ஸ் வரலாறு: எளிய தொழிலாளர்களின் ஆடை பணக்காரர்களின் உடை ஆனது எப்படி?
Crime
CrimeCanva

வாக்குவாதம் முற்றவே, இதில் கோபமடைந்த புஷ்பா வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தன் கணவனைக் குத்தினார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, குடும்பத்தார்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து இறந்தவரின் தந்தை கூறுகையில்,

"என் மகனுக்கும், மருமகளுக்கும் இடையே ஜீன்ஸ் பேண்ட் அணிவது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் என் மகனை மருமகள் கத்தியால் குத்திவிட்டார்" என்று தெரிவித்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Husband and wife (Rep)
குழந்தைகள் கண்முன் மனைவியின் உடலை கொதிக்கும் எண்ணெயில் போட்ட கணவர் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com