"செக்ஸ் ஒர்க்" : LinkedIn தளத்தில் இளம் பெண்ணின் சுயவிவரத்தின் ஸ்கிரீன் ஷாட் வைரல்

வேலை தேடுவோர், வேலைக்கு ஆள் தேடுவோர் என இருவரையும் இணைக்கும் நோக்கத்தோடு இது போன்ற தளங்கள் செயல்பட்டு வருகிறது.
social App
social Apppexels
Published on

LinkedIn தளத்தில் பெண் ஒருவர் தனது சுயவிவரத்தில் 'செக்ஸ் ஒர்க்' எனப் பதிவிட்டுள்ளதை அடுத்து, இந்த ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

வேலைக்கு என்ன பஞ்சம் என்பது போல தற்போது, பல நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் இருக்கும் காலியிடங்கள் குறித்த அறிவிப்பை ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றன.

இது தவிர பல்வேறு வகையான இணையதளங்கள் குறிப்பாக LinkedIn தளத்தில் வெளியிடுகின்றன.

LinkedIn profile
LinkedIn profileTwitter

வேலை தேடுவோர், வேலைக்கு ஆள் தேடுவோர் என இருவரையும் இணைக்கும் நோக்கத்தோடு இது போன்ற தளங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் Arielle Egozi என்ற பெண், LinkedIn தளத்தில் தனது சுயவிவரத்தில் 'செக்ஸ் ஒர்க்' என பதிவிட்டுள்ளார்.

அதில், தான் ஒரு சுயதொழில் செய்பவர், "செக்ஸ் ஒர்க்", என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது. இவர் இப்படி பதிவிட்டுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

House
HousePexels

இந்த பாலியல் வேலை மூலமாக நான் அதிகபடியான பணத்தை ஈட்டுகின்றேன். பாலியல் தொழிலும் மற்ற தொழிலைப் போல ஒரு தொழில்தான் எனக் கூறும் அந்த பெண்ணின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவிற்கு இணைய வாசி ஒருவர் கூறும் போது, தற்போது பெண்களின் உரிமைகளைப் பற்றியும் கருக்கலைப்பினை பற்றியும் பேசும் நாம் , ஒரு பெண் தானாக முன் வந்து வருமானத்திற்காகத் தனது உடலைப் பயன்படுத்தும் அவரின் விருப்பத்தையும் மதிக்க வேண்டும்.

மேலும் அது அவரது உடல் அவரது விருப்பம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தான் 'செக்ஸ் ஒர்க்கர் என்பதைத் தைரியமாக வெளியிட்ட Arielle Egozi ஸ்கீர்ன் ஷாட் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

social App
Bumble: டேட்டிங் App -ல் வாடைகைக்கு வீடு கேட்ட இளைஞர் - இணையத்தை கலக்கும் ஓர் அடடே சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com