கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு உலகம் முழுக்க பயணம் செய்யும் இந்திய பெண் - யார் இவர்?

டெல்லியை சேர்ந்த பெண்மணி ஒருவர் பயணம் செய்வதற்காகவே LinkedIn வேலையை விட்டுள்ளார்.
Woman quits job at LinkedIn To Travel the world Full Time
Woman quits job at LinkedIn To Travel the world Full TimeTwitter
Published on

நம்முடைய அன்றாட வாழ்க்கை ஒரு மிஷின் போல் ஆகிவிட்டது. சாப்பிடுவது, தூங்குவது, வேலைக்கு செல்வது என ஒரே மாதிரியான வழக்கத்தில் சிக்கிக் கொள்கிறோம்.

சில சமயங்களில் இதிலிருந்து ஒரு பிரேக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். இல்லையென்றால் ஒரு வாரம் லீவ் எடுத்து எங்கையாவது பயணம் மேற்கொள்ளலாம் என்றும் எண்ணுவோம். ஆனால் நினைப்பத்துடன் நிறுத்திவிடுவோம், செயல்முறை படுத்தமாட்டோம்.

இங்கு டெல்லியை சேர்ந்த பெண்மணி ஒருவர் பயணம் செய்வதற்காகவே LinkedIn வேலையை விட்டுள்ளார். யார் இவர்? விரிவாக படிக்கலாம்.

டெல்லியை சேர்ந்த ஆகாங்ஷா மோங்கா என்ற பெண் தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு தனியாக உலகம் முழுக்க சுற்று பயணம் மேற்கொண்டு வந்துள்ளார்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு அவர் LinkedIn இல் தனது வேலையை விட்டு வெளியேறினார்.

அப்போதிருந்து, தனது சமூகவலைதளத்தில் அவர் பயண உதவிக்குறிப்புகளை வழங்குவதன் மூலமும், அவரது பயணங்களை விவரிப்பதன் மூலமும் அதிக ஃபலோவர்களை உருவாக்கியுள்ளார்.

மோங்கா தனது ராஜினாமாவை அறிவித்த நாளை நினைவுகூரும் வகையில் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, கடந்த ஆண்டு இதே தேதியில் லிங்க்ட் இன் நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

தான் வேலையை விட்டபோது பேஷன் மீது கவனம் செலுத்த ஒரு வருடத்தை அர்ப்பணித்து, உலகம் முழுக்க பயணிக்கவுள்ளதாக அவர் கூறுகிறார். இன்ஸ்டாகிராமில் தனக்கு 25 ஆயிரம் பின்தொடர்பவர்கள் இருந்தபோதும் தான் தனிமையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Woman quits job at LinkedIn To Travel the world Full Time
Uber: டாக்ஸி ஓட்டி மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் பெண் பொறியாளர் - குவியும் பாராட்டு

2020 ஆம் ஆண்டில், மோங்கா டெல்லியின் தனியார் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றார்.

பெயின் & கம்பெனியில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆய்வாளராக பணியாற்றினார். பின்னர், அவர் லிங்க்ட்இனுக்கு மாறி, கிரியேட்டர் மேனேஜர் அசோசியேட்டாக பணியாற்றத் தொடங்கினார். ஆனால், தனது புதிய வேலையில் ஆறே மாதங்களில் தான் களைப்பாக உணர்ந்ததாகவும் வேறு எதாவது செய்ய வேண்டும் என்றும் மோங்கா உணர்ந்தார்.

அதன் பின்னர் தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு தனியாக உலகம் முழுக்க சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் கடந்த ஆண்டில் சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், நெதர்லாந்து, வியட்நாம், தாய்லாந்து, ஜெர்மனி என 12 நாடுகளுக்குச் சென்றுள்ளார். நீங்களும் இந்த போல ட்ரிப் எப்போது போறீங்க?

Woman quits job at LinkedIn To Travel the world Full Time
Rashi Narang: 200 முறை பெயிலான ஐடியாவை 140 கோடி லாபம் தரும் நிறுவனமாக்கிய பெண்- யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com