Swiggy: ஆர்டர் செய்தது சானிட்டரி நாப்கின்! வந்ததோ குக்கீஸ்- ஸ்விக்கி செய்த காரியம்!

மாதவிடாய் காரணமாக ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலமாக சானிட்டரி நாப்கின்களை ஆர்டர் செய்துள்ளார் சமீரா என்ற பெண். அவர் ஆர்டர் செய்த பார்செல் வந்தபோது, அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
Swiggy: ஆர்டர் செய்தது சானிட்டரி நாப்கின்! வந்ததோ குக்கீஸ்- ஸ்விக்கி செய்த காரியம்!
Swiggy: ஆர்டர் செய்தது சானிட்டரி நாப்கின்! வந்ததோ குக்கீஸ்- ஸ்விக்கி செய்த காரியம்! twitter
Published on

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலமாக சானிட்டரி நாப்கின் ஆர்டர் செய்த பெண்ணுக்கு அதனுடன் சேர்த்து சாக்லேட் குக்கீஸையும் அனுப்பியுள்ளது நிறுவனம். இது குறித்து இணையத்தில் அப்பெண் பகிர, பலரும் ஸ்விக்கி நிறுவனத்தை பாராட்டி தள்ளியுள்ளனர்.

நமக்காக சிலர் செய்யும் சிறு சிறு விஷயங்கள், நமக்கு பேருதவியாக இருக்கும். நம்மைப் பற்றி ஒரு நபர் எந்த அளவு புரிதலோடு இருக்கிறார் என்பதை அறியவும், நம்மை எவ்வளவு முக்கியமான இடத்தில் வைத்திருக்கிறார் என்பதையும் அறிய அந்த செயல்கள் உதவும்.

அதே நேரத்தில், நமக்கு சம்பந்தம் இல்லாத ஒரு நபர், நாம் எதிர்பாராத நேரத்தில் உதவும்போது, அது மன மகிழ்ச்சியை தரும்

இங்கும் ஸ்விக்கி நிறுவனத்தின் செயல் ஒன்று, தனது வாடிக்கையாளரை சந்தோஷப்படுத்தியது மட்டுமல்லாமல், இணையவாசிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

மாதவிடாய் காரணமாக ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலமாக சானிட்டரி நாப்கின்களை ஆர்டர் செய்துள்ளார் சமீரா என்ற பெண். அவர் ஆர்டர் செய்த பார்சல் வந்தபோது, அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

சானிட்டரி நாப்கின்களுடன் அந்த கவரில் ஒரு பாக்கெட் சாக்லேட் குக்கிகளும் இருந்துள்ளது. சந்தோஷமடைந்த சமீரா, இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

“ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் சானிட்டரி நாப்கின் ஆர்டர் செய்தேன். உடன் இந்த குக்கிஸும் இருந்தன. முன்யோசனையுடன் செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால் இதை செய்தது ஸ்விக்கி நிறுவனத்தினரா அல்லது கடைக்காரரா என்று தான் தெரியவில்லை” என்று தலைப்பிட்டிருந்தார்.

Swiggy: ஆர்டர் செய்தது சானிட்டரி நாப்கின்! வந்ததோ குக்கீஸ்- ஸ்விக்கி செய்த காரியம்!
Swiggy : 3.5 லட்சம் பிரியாணி, 61000 பீட்சா - New Year இரவில் கல்லாகட்டிய டெலிவரி நிறுவனம்

சமீரா ஸ்விக்கி நிறுவனத்தினை டேக் செய்து இந்த பதிவை பகிர்ந்திருந்தார். இதற்கு பதிலளித்த ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ட்விட்டர் பக்கம், “உங்களது இந்த நாள் இனியதாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்” என்று பதிலளித்திருந்தது.

தனது இந்த அனுபவத்தை பகிர்ந்ததிலிருந்து இணயவாசிகள் பலரும் நிறுவனத்தினை பாராட்டி வருகின்றனர். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஹார்மோன்களில் விதவிதமான மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்று இனிப்பான உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற க்ரேவிங்ஸ். இதனை புரிந்துகொண்டு ஸ்விக்கி நிறுவனம் செய்த இந்த காரியம், பலரது மனதை வென்றுள்ளது.

ஆனால் ஒரு சிலரோ இது நிறுவனம் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள கையாளும் ஒரு யுக்தி என்றும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Swiggy: ஆர்டர் செய்தது சானிட்டரி நாப்கின்! வந்ததோ குக்கீஸ்- ஸ்விக்கி செய்த காரியம்!
Swiggy: பெட்ரோல், உள்ளாடை, மம்மி - Instamartல் தேடப்பட்ட விசித்திர பொருட்கள் இதுதான்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com