கணவர் உயிருடன் இருக்கும்போதே 'கைம்பெண் உதவித்தொகை' வாங்கிய பெண்கள் - சிக்கியது எப்படி?

இத்திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 60 வயது வரை உள்ள விதவைகள் மாத வருமானம் ரூ. 1000 மற்றும் அவர்களது மகன் அல்லது பேரனுக்கு 20 வயதுக்கு மிகாமல், அவர்களின் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கல்விக்காக மாதம் ரூ.800 உதவித்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
கணவர் உயிருடன் இருக்கும்போதே கைம்பெண் உதவித் தொகை வாங்கிய பெண்கள் - சிக்கியது எப்படி?
கணவர் உயிருடன் இருக்கும்போதே கைம்பெண் உதவித் தொகை வாங்கிய பெண்கள் - சிக்கியது எப்படி?Twitter

ஜார்கண்ட் மாநிலத்தின் சிம்தேகா மாவட்டத்தில் கணவன் உயிருடன் இருக்கும்போது விதவை உதவித் தொகையை சட்டவிரோதமாகப் பெற்ற 12 பெண்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் போது கடந்த 10 மாதங்களாக விதவை உதவித்தொகையை இந்த 12 பெண்கள் சட்டவிரோதமாக பெற்றது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தொகுதி மேம்பாட்டு அதிகாரி (பிடிஓ) பங்கஜ் குமார், தீத்தடங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து அதிகாரி கூறுகையில்,

“கைம்பெண் உதவித்தொகை பலன்களைப் பெற போலியான தகவல்களை பகிர்ந்து கொண்டதால் 12 பெண்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நலத்திட்ட பலன்களை வழங்குவதற்காக அவர்களின் பெயர்கள் பயனாளிகள் பட்டியலில் நேரடியாக சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது” என்று பிடிஓ பங்கஜ் குமார் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி, இந்த பெண்களால் மொத்தம் 1,04,000 ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. இந்த திட்டத்தின் பயனை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இவர்கள் பெற்றுவந்திருக்கின்றனர்.

கணவர் உயிருடன் இருக்கும்போதே கைம்பெண் உதவித் தொகை வாங்கிய பெண்கள் - சிக்கியது எப்படி?
இரண்டாவது திருமணமா? அடுத்தவர் மனைவி தான் மணப்பெண்- வினோத வழக்கம் பின்பற்றும் பழங்குடியினர்

கணவன் இறந்த பெண்களுக்கு முக்யமந்திரி ராஜ்ய மகிளா நிராஷ்ரித், வித்வா மகிளா சம்மன் யோஜனாவின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 60 வயதுடைய கணவரை இழந்தவர்கள் மாதம் ரூ. 1000 மற்றும் அவர்களது மகன் 20 வயதுக்கு மிகாமல் இருந்தால், அவர்களின் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கல்விக்காக மாதம் ரூ.800 மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த 12 பெண்களும் மகிளா நிராஷ்ரித் வித்வா மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் பலன்களை சட்டவிரோதமாகப் பெற்றதாக BDO தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரியுள்ளார்.

கணவர் உயிருடன் இருக்கும்போதே கைம்பெண் உதவித் தொகை வாங்கிய பெண்கள் - சிக்கியது எப்படி?
கணவரை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் மனைவி - என்ன, எங்கே, எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com