ஜி 20 மாநாட்டுக்கும் சோழர்களுக்கும் என்ன தொடர்பு?ஓர் ஆச்சர்ய தகவல்

உலகின் மிகப் பெரிய நடராஜர் சிலையானது செம்பு, பித்தளை, ஈயம், தகரம், பாதரசம், இரும்பு, தங்கம் மற்றும் வெள்ளி என 8 உலோகங்களின் கலவையாக உருவாகியுள்ளது. இதனால் பல நூற்றாண்டுகளுக்கு இந்த சிலை நிலைத்து நிற்கும்.
ஜி 20 மாநாட்டுக்கும் சோழர்களுக்கும் என்ன தொடர்பு?
ஜி 20 மாநாட்டுக்கும் சோழர்களுக்கும் என்ன தொடர்பு?Twitter

ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுவதனால் வெளிநாட்டு தலைவர்கள் வருகைத்தர இருக்கின்றனர். இவர்களை வரவேற்க உலகிலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை காத்திருக்கிறது!

டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தின் முன்பகுதியில் இந்த சிலைக்கு முன்னோடிகள் தஞ்சாவூர் சுவாமிமலையில் இருக்கின்றன. ஸ்ரீகந்த ஸ்தாபதி என்ற கைவினை கலைஞர் தனது குடும்பம் மற்றும் பிற கலைஞர்களுடன் இந்த சிலையை உருவாக்கியுள்ளார்.

உலகிலேயே மிகப் பெரிய சிலையாக இருந்தாலும் இதனை வெறும் 7 மாதங்களில் செய்து முடித்திருக்கின்றனர். இந்த சிலை 20 அடி உயரம், 21 அடி அகலம் மற்றும் 18 டன் எடை கொண்டது.

இதன் மதிப்பு 10 கோடி ரூபாய். தஞ்சாவூர் சுவாமிமகலை ஸ்தாபதிகள் சோழர் காலத்தில் செய்த நடராஜர் சிலைகளை ஆதாரமாக கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

காவேரி ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள சுவாமிமலை, முருகனின் வீடுகளில் ஒன்று. இது இங்குள்ள ஸ்தாபதிகளின் வெண்கல சிற்பங்களுக்கு பெயர்பெற்றது.

இங்குள்ள ஸ்தாபதிகளின் முன்னோர்கள் தான் தஞ்சாவூர் பிரதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டும் ராஜ ராஜ சோழனின் அணியில் இருந்திருக்கின்றனர். 34 தலைமுறைகளுக்கும் மேலாக 'இழந்த மெழுகு வார்ப்பு முறை' என்ற பண்டைய பாணியில் சிலைகளைத் தயாரித்து வருகின்றனர்.

ஜி 20 மாநாட்டுக்கும் சோழர்களுக்கும் என்ன தொடர்பு?
தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலி; பலர் காயம்

உலகின் மிகப் பெரிய நடராஜர் சிலையானது செம்பு, பித்தளை, ஈயம், தகரம், பாதரசம், இரும்பு, தங்கம் மற்றும் வெள்ளி என 8 உலோகங்களின் கலவையாக உருவாகியுள்ளது. இதனால் பல நூற்றாண்டுகளுக்கு இந்த சிலை நிலைத்து நிற்கும்.

பல வருடங்கள் கழித்து வயதான, பழைய சிலையாக தெரியும் போதுதான் பார்பவர்களை மயக்கும் அதிசயநிலைக்கு வரும் என ஸ்ரீகந்த ஸ்தாபதி கூறியுள்ளார்.

சோழ கலைப்பாரம்பரியத்தை பின்பற்றிவரும் சுவாமிமலையின் 40 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேருக்கு இந்த சிலையை உருவாக்கியது மிகவுக் பெருமைமிக்க தருணம் என அவர் கூறியுள்ளார்.

ஜி 20 மாநாட்டுக்கும் சோழர்களுக்கும் என்ன தொடர்பு?
வருகிறார் சோழர்: தென் கிழக்கு ஆசியா வரை வெற்றி கண்ட Cholas - சோழர் வரலாறு மினி தொடர் 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com