தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலி; பலர் காயம்

விழாவில் இழுக்கப்பட்ட தேர் உயர் அழுத்த மின்சாரக் கம்பியின் மீது உரசி விபத்துக்கு உள்ளானதால் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர். பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
Accident
AccidentTwitter
Published on

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவில் இழுக்கப்பட்ட தேர் மின்சாரம் தாக்கி விபத்துக்கு உள்ளானதால் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் பலியாகியிருக்கியுள்ளனர். பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

காயமுற்ற 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. தேரினை இழுத்து வரும் போது மேலிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியின் மீது தேர் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர் வந்த இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் 50க்கு மேலான மக்கள் தேரிலிருந்து ஒதுங்கி நின்றனர். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தேர்
தேர்Twitter
Accident
சென்னையில் ரயில் விபத்து : கடற்கரை நிலையத்தில் தடம்புரண்டதால் பரபரப்பு

ஆண்டு தோறும் நடைபெறும் அப்பர் திருவிழாவில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை வரை தேர் இழுக்கப்படுவது வழக்கம். அதன் படி இன்று நடைபெற்ற விழாவில் ஏற்பட்ட விபத்து அந்த பகுதியில் பரபரப்பையும் பெருஞ்சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சம்பவம் நடந்த கிராமத்தினருக்கு ஆறுதல் கூறவும் மருத்துவமனையில் இருப்பவர்களை விசாரிக்கவும் முதல்வர் இன்று தஞ்சை செல்கிறார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Accident
நீலகிரி : பூனை என நினைத்து சிறுத்தை குட்டியைத் தூக்கி வந்த தொழிலாளர்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com