Ambani: 100 ஆண்டுகளுக்கும் பழமையான அம்பானிகளின் வீடு - பார்வையிட வெறும் 2 ரூபாய்தானா?

அம்பானி குடும்பத்திற்கு சொந்தமான பல ஆடம்பரமான வீடுகள் இருந்தபோதிலும், குஜராத்தின் சோர்வாட் என்ற சிறிய கிராமத்தில் உள்ள இந்த வீடு ஒரு ஸ்பெஷலான இடத்தைப் பிடித்துள்ளது.
Ambani: 100 ஆண்டுகளுக்கும் பழமையான அம்பானிகளின் வீடு - பார்வையிட வெறும் 2  ரூபாய்தானா?
Ambani: 100 ஆண்டுகளுக்கும் பழமையான அம்பானிகளின் வீடு - பார்வையிட வெறும் 2 ரூபாய்தானா?Twitter
Published on

பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் பிறகு உலகின் மிக விலையுயர்ந்த வீடு மும்பையில் உள்ள அன்டிலா என்றாலும், அம்பானி குடும்பத்திற்கு, குஜராத்தில் உள்ள அவர்களின் மூதாதையர் வீடு ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வீடு 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்ட அந்த வீடு இப்போது ‘திருபாய் அம்பானி மெமோரியல் ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் நினைவிடமாக உள்ளது.

அம்பானி குடும்பத்திற்கு சொந்தமான பல ஆடம்பரமான வீடுகள் இருந்தபோதிலும், குஜராத்தின் சோர்வாட் என்ற சிறிய கிராமத்தில் உள்ள இந்த வீடு ஒரு ஸ்பெஷலான இடத்தைப் பிடித்துள்ளது.

பசுமையான தோட்டங்களுடன், அமைக்கப்பட்டுள்ள இந்த வீடு பாரம்பரிய குஜராத்தி கட்டிடக்கலைக்கு ஒரு அழகான எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.

இந்த வீடு முகேஷ் அம்பானியின் தாத்தாவால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இது 100 ஆண்டுகளுக்கும் பழமையானதாக இருந்ததால் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. இந்த வீட்டின் கட்டிடக்கலை, பாரம்பரிய சாயலுடன் நவீன வசதிக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது.

இயற்கையான ஒளி மற்றும் காற்று வீட்டின் உள்ளே செல்ல அனுமதிக்கும் வகையில் உள்ளது. வீட்டில் ஒரு பெரிய முற்றமும் உள்ளது.

Ambani: 100 ஆண்டுகளுக்கும் பழமையான அம்பானிகளின் வீடு - பார்வையிட வெறும் 2  ரூபாய்தானா?
அம்பானி to சாவித்ரி: படிப்பை பாதியில் நிறுத்தினாலும் உலகப்பணக்காரர்களான இந்தியர்கள்!

இந்த இடம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று கோகிலாபென் அம்பானி குடும்பத்திற்கானது. மற்ற பகுதி பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால் தனி தனி நுழைவு மற்றும் வெளியேறும் இடம் உள்ளது.

திங்கட்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் மூதாதையர் இல்லம் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நீங்கள் பார்வையிடலாம். இந்த நினைவிடத்தில் ஒரு உணவு விடுதியும், நினைவு பரிசு கடையும் இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணம் வெறும் ₹2 மட்டுமே என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ambani: 100 ஆண்டுகளுக்கும் பழமையான அம்பானிகளின் வீடு - பார்வையிட வெறும் 2  ரூபாய்தானா?
அம்பானி To பில் கேட்ஸ் : உலகில் விலை உயர்ந்த வீடுகளை வைத்திருப்போர் பட்டியல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com