சோஹோ: “எனது சொத்துகளை ஏமாற்றி எடுத்துக்கொண்டார்”  ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு!
சோஹோ: “எனது சொத்துகளை ஏமாற்றி எடுத்துக்கொண்டார்” ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு!ட்விட்டர்

Zoho: “எனது சொத்துகளை ஏமாற்றி எடுத்துக்கொண்டார்” ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு!

கலிபோர்னியாவில் தன்னுடன் வாழ்ந்த போது, பிரமிளாவுக்கு தெரியாமல், அவரது சோஹோ நிறுவன பங்குகளை, அறிவுசார் சொத்துகளை ஸ்ரீதர் தனது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
Published on

சோஹோ நிறுவனத்தின் சி இ ஓ ஸ்ரீதர் வேம்பு தன்னையும் தனது மகனையும் நிர்கதியாக விட்டு சென்றுவிட்டதாக அவரது மனைவி குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளில் மென்பொருள் மேம்பாடு தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது சோஹோ நிறுவனம். இதன் சி இ ஓ ஸ்ரீதர் வேம்பு.

ஒன்றுமே இல்லாமல் தொடங்கி இன்று உலகளவில் பெரு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. ஸ்ரீதர் வேம்புவின் சகோதரி ராதா வேம்புவுக்கும் இந்நிறுவனத்தில் பங்கு இருக்கிறது. ராதா வேம்பு இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், சோஹோ நிறுவன சி இ ஓ ஸ்ரீதர் வேம்பு மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார் அவரது மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன்.

ஸ்ரீதர் வேம்பு மற்றும் பிரமிளா விவாகரத்து பெறவுள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது

தன்னையும், ஆட்டிசம் குறைபாடு உள்ள தனது மகனையும் ஸ்ரீதர் வேம்பு கடந்த 2020 ஆம் ஆண்டு நிர்கதியாக விட்டு சென்றுவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

சோஹோ: “எனது சொத்துகளை ஏமாற்றி எடுத்துக்கொண்டார்”  ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு!
அதானி மீது அடுத்த பகீர் குற்றச்சாட்டு: அதிர வைக்கும் தகவல்கள்

மேலும், கலிபோர்னியாவில் தன்னுடன் வாழ்ந்த போது, பிரமிளாவுக்கு தெரியாமல், அவரது சோஹோ நிறுவன பங்குகளை, அறிவுசார் சொத்துகளை ஸ்ரீதர் தனது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும் குற்றம் சுமத்தியிருக்கிறார்

கலிபோர்னியா சட்டப்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர் சொத்துக்களை விற்க முடியாது என்று இருப்பதை அடுத்து வேம்பு தனது உறவினர் பெயர்களில் சொத்துக்களை மாற்றியது சட்டவிரோதம் என்றும் பிரமிளாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சோஹோ: “எனது சொத்துகளை ஏமாற்றி எடுத்துக்கொண்டார்”  ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு!
ராதா வேம்பு : இந்தியாவின் 3வது பெரிய பணக்கார பெண்ணான தமிழச்சி - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com