ராதா வேம்பு இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவர். 21,455 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் 3வது பெரிய பணக்கார பெண்ணாக திகழ்கிறார்.
கிரண் முசும்தர்-ஷா, ஃபல்குனி நாயர் வரிசையில் சுயமாக உருவான (Self-Made) பணக்கார பெண்ணாக திகழ்கிறார் ராதா வேம்பு.
இந்தியாவில் பணக்கார நிறுவனமான சோஹோ கார்ப்பில் பெரிய அளவில் பங்குகளை வைத்திருப்பதே இவர் பெரிய பணக்காரராக உருவாக காரணம்.
சோஹோ கார்ப் (Zoho Corp) ஒரு தனியார் மென்பொருள் நிறுவனம். ராதா வேம்பு மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து இதனை உருவாக்கினர்.
1972ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தாளராக பணியாற்றினார்.
மெட்ராஸ் ஐஐடியில் தொழில்துறை மேலாண்மை பட்டம் பெற்றார்.படித்துக்கொண்டிருக்கும் போதே சோஹோவின் முன்னோடியான அட்வென்ட்நெட் என்ற நிறுவனத்தை நிறுவினார்.
1996ம் ஆண்டு அட்வென்ட்நெட் நிறுவனத்தைத் தனது சோதரர்களான ஸ்ரீதர் வேம்பு, சேகர் வேம்பு உடன் இணைந்து உருவாக்கினார்.
சோஹோவில் தற்போது ப்ராடக்ட் மேனேஜராக இருக்கும் ராதா வேம்புவின் கீழ் 250 பேர் பணியாற்றுகின்றனர். சென்னையில் தொடங்கிய சோஹோ மிகப் பெரிய ஆலமாரமாக வளர்ந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கூட சோஹோவுக்கு 375 ஏக்கரில் மிகப் பெரிய தலைமையகம் இருக்கிறது.
உலகில் 9 நாடுகளில் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. க்ளௌட் அடிப்படையிலான வணிக மென்பொருள்களை உருவாக்கி வரும் சோஹோ, வாட்ஸப் மாதிரியிலான ஒரு செயலியை சோதித்து வருகின்றனர். அதற்கு அரட்டை எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
சோஹோ மட்டுமல்லாமல் ஹைலாண்ட் வாலி கார்பரேஷன் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
பணிகள் மட்டுமல்ல, சேவையிலும் சிறந்து விளங்குகிறார். ஜானகி ஹை-டெக் அக்ரோ என்ற விவசாய என்.ஜி.ஓ நடத்தி வருகிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust