புத்தாண்டை ஒட்டி உணவு ஆர்டர்கள் அதிகரித்ததால், டெலிவரி செய்ய சோமேட்டொ நிறுவனர் தீபிந்தர் கோயல் களமிறங்கியிருக்கிறார்.
2022 ஆம் அண்டு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. 2022 கண்மூடி திறப்பதற்குள் ஓடிவிட்டது என்றாலும், உற்சாகங்களும், சோகங்களும் கலந்தே இருந்தது எனலாம்.
என்னதான், நாம் எதிர்பார்த்தபடி கடந்த ஆண்டு பலருக்கு அமையவில்லை என்றாலும், புத்தாண்டை குதூகலமாக வரவேற்க எல்லோருமே ஆவலுடன் காத்திருந்தோம்.
நீரின்றி அமையாது உலகு என்பது போல, உணவின்றி அமையாது கொண்டாட்டங்கள்.
புத்தாண்டையொட்டி ஆன்லைன் டெலிவரி ஆப்களில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஆர்டர்கள் வந்து குவியத்தொடங்கின.
இதனால், தன் நிறுவன ஊழியர்களுக்கு பக்கபலமாக வந்து நின்றார் சோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல்.
உணவு டெலிவரி சீருடையை அணிந்துக்கொண்டும், கையில் ஆர்டரை வைத்துக்கொண்டும், தன் ட்விட்டர் பக்கத்தில், புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் கோயல்.
அதற்கு அவர், “என் முதல் டெலிவரி என்னை சோமேட்டோ அலுவலகத்திற்கு கூட்டி வந்தது.” என்று தலைப்பிட்டிருந்தார்.
மேலும் அவர், நான்கு டெலிவரிகள் செய்ததாகவும் தெரிவித்திருந்தார். அதில் ஒன்று, “ஒரு வயதான தம்பதி தங்கள் பேரக்குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடியது” எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தனது மற்றொரு ட்வீட்டில், புத்தாண்டை முன்னிட்டு எவ்வளவு ஆர்டர்கள் வந்தன என்பதையும் தெரிவித்திருந்தார்.
“நாங்கள் உணவு டெலிவரி சேவையை தொடங்கிய முதல் மூன்று ஆண்டுகளில் வந்த ஆர்டர்களை விட, இன்று ஒரு நாள் மட்டுமே செய்த டெலிவரிகள் அதிகம்” என்று பதிவிட்டவர், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து, புத்தாண்டு வாழ்த்துகளை கூறியிருந்தார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust