சோமேட்டோ ஊழியர் ஒருவர் சாலையில் நின்றுகொண்டு பிளாஸ்டிக் கவரில் உணவு சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பார்ப்பவர் மனதை கனக்க செய்துள்ளது.
வேலையின்மையின் காரணமாகவோ, அல்லது அதிகப் பணத்தேவையின் காரணமாகவோ, ஒன்றுக்கும் மேற்பட்ட சம்பாத்தியம் நமக்கு அவசியமாக இருக்கிறது.
இதனால், தூக்கம், பசி, குடும்பங்கள் மறந்து உழைத்து வருகிறோம். குறிப்பாக ஸ்விக்கி சோமாட்டோவில் பணியாற்றும் ஊழியர்கள். மழை, புயல் என்றாலும் சாலையின் குறுக்கும் நெடுக்குமாக இவர்களின் வாகனங்கள் பாய்ந்துக் கொண்டிருக்கும்.
இந்த சச்சரவுக்கு மத்தியில் இவர்களுக்கு சாப்பிட நேரமோ, இடமோ, சரியான உணவோ கிடைக்கிறதா என்றால், இது போன்ற வீடியோக்கள் நமக்கு இல்லை என்று முகத்தில் அடித்தாற்போல சொல்கின்றன.
ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் சரண் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் சோமேட்டோ நிறுவன ஊழியர் ஒருவர், சாலையில் நின்றுக்கொண்டு அவசரமாக உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அதுவும் ஒரு பாலித்தீன் கவரில்! பகிரப்பட்ட வீடியோவின் தலைப்பில், ஐஏஎஸ் அதிகாரி “இந்த மாதிரி பருவக் காலங்களில் இவர்களையும் சற்று கவனித்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்
சுமார் பத்தாயிரம் லைக்குகளும், 1000த்துக்கும் மேற்பட்டோர் ரீட்வீட்டும் செய்திருந்தனர்.
எப்போதும் நமக்கு உணவளிக்கும் இவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும் என சிலர் கருத்துகள் தெரிவித்துவருகின்றனர்.
வயிற்றுப்பசிக்காக ஓடி உழைக்கும் இவர்கள், ஒரு வேளை உணவைக் கூட நிம்மதியாக ரசித்து உண்ண நேரமில்லாத நிலையில் தான் இருக்கிறார்கள். நம்மால் முடிந்தவரை இவர்களை கணிவுடன் நடத்துவோம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust