Pride Month: ஜூன் மாதத்தில் கொண்டாடப்படும் இந்த Pride Month என்பது என்ன?

50 வருடங்களுக்கு முன், ஒளிந்து ஒளிந்து வாழ்ந்த இவர்கள், இன்று வெளிப்படையாக தங்களது அடையாளங்களைக் கூறும் அளவிற்கு சமூகத்தில் இவர்களைப் பற்றிய விழிப்புணர்வும், புரிதலும் வந்து விட்டது எனலாம்.
LGBTQ
LGBTQPexels
Published on

ஓரினச்சேர்க்கையாளர்கள், மூன்றாம் பாலினத்தினர், க்வீர், இருபாலர்கள் தாங்கள் இதுவரை எதிர்கொண்ட இன்னல்கள், தங்கள் உரிமைகளை நிலைநாட்டச் செய்த போராட்டங்கள் பற்றி நினைவுகூர்ந்து, மக்களுக்கு LGBTQ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்படுவது தான் பிரைட் மன்த் (Pride Month). ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முழுவதும் LGBTQ மக்களை கொண்டாடுவதற்காக பிரைட் மன்த் அனுசரிக்கப்படுகிறது.

LGBTQ
LGBTQPexels

LGBTQ என்றால் என்ன?

இவர்கள், LGBTQ கம்யூனிடி என்று அழைக்கப்படுவார்கள். ஓரினச்சேர்க்கையாளர்கள், மூன்றாம் பாலினத்தினர் இருபாலர்கள், க்வீர் பல பாலினங்களைச் சேர்ந்தவர்கள் LGBTQ கம்யூனிடியை ஆவர். தங்கள் அடையாளங்களை ஏற்று, இது அவர்களது இயல்பு, அவர்கள் இயற்கைக்கு மாறானவர்கள் அல்ல என்று எடுத்துரைக்கக் கொண்டாடப்படுவது பிரைட் மன்த். 50 வருடங்களுக்கு முன், ஒளிந்து ஒளிந்து வாழ்ந்த இவர்கள், இன்று வெளிப்படையாக தங்களது அடையாளங்களைக் கூறும் அளவிற்கு சமூகத்தில் இவர்களைப் பற்றிய விழிப்புணர்வும், புரிதலும் வந்து விட்டது.


ஆனால் பல நாடுகளில், இவர்கள் இயற்கைக்கு புறம்பானவர்கள், அல்லது இது ஒரு மன நோய் என்ற தவறான புரிதல்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. இதை அசிங்கம் என்று கருதும் மக்களும் இன்றும் ஏராளம். காதலும், ஆசையும் எப்படி இயற்கையானதோ, அது எதிர்பாலினர் மேல் வந்தாலும், தன் பாலினர் மேல் ஏற்பட்டாலும் அதுவும் இயற்கை தான்.

LGBTQ
LGBTQPexels

ஓரினச்சேர்க்கையாளர்கள், மூன்றாம் பாலினத்தினர் இருபாலர்கள் அவர்களது நடவடிக்கைகளைப் படங்களை பார்த்தோ, புத்தகங்கள் படித்தோ, அல்லது மற்றவரை பார்த்தோ மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு மாறவும் இயலாது. இன்னும் சொல்லப்போனால், படங்களும், புத்தகங்களும் இவர்களை மனத்தடையை உடைத்து, அவர்களது இயல்பை ஏற்க தான் உதவியுள்ளது.

LGBTQ
LGBTQPexels

எப்போது தெரிந்துகொள்ளலாம்?

அறிவியல், ஒரு மனிதன் தான் ஸ்ட்ரெயிட்(Straight) அல்லது கே(gay) என்றும் உணரும் சரியான வயது இது தான் என்று ஒன்றில்லை என்கிறது. சிலருக்கு அது இளம் பருவத்தில் தெரியலாம். சிலர் பதின் பருவத்தைத் தாண்டிய பிறகு தெரிந்துகொள்ளலாம். இன்னும் சிலருக்கு, இவர்தான் தங்களுடைய பார்ட்னர் என்று வாழ்கையை வாழ ஆரம்பித்து, இடையில் கூட உணர்வார்கள்.

LGBTQ
LGBTQPexels

எப்படி ஆரம்பித்தது இந்த பிரைட் மன்த்?

1969ல் ஜூன் மாதம் 28 ஆம் தேதி, அமெரிக்காவில், ஸ்டோன்வால் இன் என்ற இடத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கே மற்றும் லெஸ்பியன் மக்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தினர். இதற்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் கண்டனங்கள் தெரிவிக்கவே, அமெரிக்காவில் முதன்முதலில் கே லிபெரேஷன் மூவ்மென்ட் நடந்தது.

இதன் பிறகு நியூயார்க் காவல் துறையினருக்கும், க்ரீன்விச் கிராமத்தில் வாழ்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் இடையில் பதட்டங்கள் வலுக்க, தொடர்ந்து பல இரவுகள் நடைபெற்ற போராட்டங்களில், கைதுகளும் அதிகரித்தன. இதன் விளைவாக ஓரினச்சேர்க்கையாளர்கள் குரல்கொடுக்க 3 பத்திரிக்கைகள் கொண்டுவரப்பட்டது.


அடுத்த வருடம் ஜூன் 28 1970ல் இந்த நிகழ்வின் ஓராண்டு நிறைவை கொண்டாடும் வகையில் சிகாகோவில் கே பிரைட் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பல இடங்களிலும், நாடுகளிலும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அமைப்புகள் நிறுவப்பட்டு, இன்று ஒவ்வொரு வருடமும், பிரைட் மன்த் கொண்டாடப்படுகிறது.

LGBTQ
LGBTQPexels

Pride Month -ல் என்ன செய்வார்கள்?

ஜூன் மாதம் பிரைட் மன்த் கொண்டாடப்படும். போராட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் LGBTQ மக்கள் நடத்தும் பார்ட்டிகள் இந்த மாதத்தில் இருக்கும். நியூயார்க் நகரத்தில் நடக்கும் ஊர்வலம் பெயர்பெற்றது. இதில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் மக்கள் கலந்துகொள்வார்கள்.


ப்ரெண்டா ஹாவர்டு தான் முதன் முதலில் பிரைட் மார்ச் ஐ அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் ஒரு வாரம் பின்பற்றப்பட்ட இந்நிகழ்வு, இப்போது ஒரு மாதம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.

Stonewall riots
Stonewall riotsPexels

2018 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம், இந்தியாவில் இந்திய சட்டப் பிரிவு 377ஐ அதிகாரப்பூர்வமாக நீக்கி உத்தரவளித்தது குறிப்பிடத்தக்கது. இது LGBTQ சமூகத்துக்கு ஆதரவாக அமைந்தது.

LGBTQ
Pride Month : 'LGBTQ' - கட்டுக்கதைகளும் உண்மைகளும்- எளிய விளக்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com