Smart Phone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

ஒரு வாரம் நிற்கும் பேட்டரி, நிமிடங்களில் சார்ஜிங், 100 மெகா பிக்ஸல் கேமரா போன்ற ஃபேன்சியான விஷயங்களும் ஆஃபர்களும் மட்டுமே ஒரு போனைத் தேர்வு செய்வதற்கு போதுமானது அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
Smart Phone
Smart PhoneTwitter
Published on

இன்று நம் எல்லாருக்கும் அடிப்படைத் தேவையாக இருக்கிறது ஸ்மார்ட் போன்கள். 2021ம் ஆண்டில் மட்டுமே 16 கோடி ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளது.

உண்மையில் ஸ்மார்ட் போன்கள் வாங்குவதற்கு, இன்டெர்நெட் உபயோகிக்க, அதற்கான ஹெட் போன்ஸ் மற்ற ஆக்ஸசரீஸ் வாங்க என நம் வருவாயில் அதிக பணத்தை செலவு செய்கிறோம்.

ஆனால், அந்த பணம் அதற்கு தகுந்த பலனை நமக்குத் திரும்பத் தருகிறதா என்பது குறித்து யோசித்திருக்கிறோமா? ஸ்மார்ட் போன் வாங்குவதில் இருக்கும் ஆர்வத்தினால், சரியாக யோசிக்காமல் ஏதோ ஒரு போனை வாங்கிக்கொள்கிறோம்.

ஸ்மார்ட் போன் சந்தை மிகப் பெரியதாக வளர்ந்துள்ளதால் இருக்கும் எக்கச்சக்க ஆப்ஷன்கள் நம்மை திக்கு முக்காட செய்யும் தான். இதிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்வது கடினமான விஷயமாக இருக்கும்.

தவிர, ஒரு வாரம் நிற்கும் பேட்டரி, நிமிடங்களில் சார்ஜிங், 100 மெகா பிக்சல் கேமரா போன்ற ஃபேன்சியான விஷயங்களும் ஆஃபர்களும் மட்டுமே ஒரு போனைத் தேர்வு செய்வதற்கு போதுமானது அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தேவையைப் புரிந்துகொள்ளுதல் :

ஸ்மார்ட்போன்கள் எல்லாருக்கும் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பொழுது போக்குக்காக கூட சிலர் ஸ்மார்ட் போன்களை வாங்குவர். நீங்கள் வாங்கப் போகும் ஸ்மார்ட் போன் உங்கள் தேவையை நிறைவேற்றுமா என்பதைப் போல உங்கள் தேவைக்கு அதிகமானதா என்பதையும் கவனிக்க வேணும்.

உதாரணம்

அடிப்படைத் தேவைகளுக்காக போன் வாங்குகிறவர்கள் 2 ஜிபி ராம் (RAM) உடன் வாங்குகின்றனர் எனில், சமூக வலைத்தளங்கள் உபயோகிப்பவர்கள் 3 ஜிபி உடன் வாங்கலாம். தவிர, கேமிங் ஆர்வம் உள்ளவர்கள் விளையாடும் கேமுக்கு தகுந்த RAM கொண்ட போன்களை வாங்கிக்கொள்ளலாம்.

அதிகமாக புகைப்படங்கள் எடுப்பவர்கள் அதிக ஸ்பேஸ் உள்ள மொபைலை வாங்கலாம். ஆன்லைனில் போட்டோக்களை சேமித்து வைப்பவர்கள் குறைந்த மெமரி ஸ்பேஸ் கொண்ட மொபைலையே வாங்கலாம்.

Smart Phone
டைனோசர்களுக்கு நாட்கள் விரைவாக நகர்ந்தது - வேகமாக சுழன்றதா பூமி? விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
நீங்கள் அதிக பணம் கொடுத்து ஒரு குறிப்பிட்ட வசதி கொண்ட மொபைலை வாங்கி பின்னர் அந்த வசதியை பயன்படுத்தவில்லை எனில், நீங்கள் அதற்காக செலவிட்டப் பணம் வீண் தான் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

கேமிங் ஃபோன்:

நீங்கள் விளையாடும் கேமுக்கு தகுந்த போனை வாங்குவது தான் சிறந்தது. கேம் அப்கிரேட் (Upgrade) ஆகும் போதும் விளையாட வேண்டும் என நினைத்தால், நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் அப்போதும் போனை அப்கிரேட் செய்யலாம்.

கண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாத ஸ்கிரீனை தேர்வு செய்யலாம். RAM போலவே Processor -க்கும் கவனம் செலுத்த வேண்டும்.

கேமில் ஆர்வம் இல்லாதவர்கள் கட்டாயமாக கேமிங் போன்களை தவிர்ப்பது நல்லது.

Smart Phone
பப்ஜி : மீண்டும் தடை செய்யப்பட்ட APP - என்ன நடந்தது? | PUBG

போனின் பாடி(Body) மெட்டல் உடலாக இருந்தால் நல்லது. எளிதில் உடையாமல் இருக்கும்.

அதிகமாக பயன்படுத்துபவர்கள் சிறிய தொடுதிரை (Touch Screen) உள்ள போனை தேர்வு செய்யலாம். கைக்கு அடக்கமாக இருப்பதால் கீழே விழாது.

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடிகளை பார்பவர்கள் வீடியோக்கள் பார்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் பெரிய தொடுதிரை உள்ள போனை வாங்கலாம்.

"போனை காட்சிப் பொருளாக கருதி தேவைக்கு அதிமாக இருக்கும், பெரிய தொடுதிரை உள்ள போனை வாங்குவதை தவிர்ப்பது நல்லது."

அதிக புகைப்படங்களை எடுக்கும் பழக்கம் இருப்பவர்கள் மட்டும் அதிக மெகா பிக்சல் இருக்கும் மொபைலை தேர்வு செய்யலாம்.

இது தவிர, OS- Operating System, பேட்டரி மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் கவனித்து உங்களுக்கு ஏற்ற ஸ்மார்ட்போனை வாங்குங்கள். அது தான் நாமும் ஸ்மார்ட்டாக இருப்பதற்கு ஆதாரம்.

Smart Phone
முதன்முதலாக விமானத்தில் பயணிக்கிறீர்களா? - இந்த தகவல் உங்களுக்கானது தான்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com