48,580 கி.மீ வேகத்தில் பூமியை நெருங்கும் விண்கல் - 4 ஆபத்துகள் குறித்து நாசா எச்சரிக்கை!

ஒரு காலத்தில் பூமியை ஆண்டு வந்த டைனோசர் இனம் விண்கல் தாக்குதலால் தான் அழிந்தது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டக் கருத்து. இதனாலே இந்த விண்கல்களில் ஒன்றினால் நமக்கு ஆபத்து ஏற்படுமா என்ற அச்சம் ஆதி முதலே மனித இனத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.
 48,580 கி.மீ வேகத்தில் பூமியை நெருங்கும் விண்கல் - 4 ஆபத்துகள் குறித்து நாசா எச்சரிக்கை!
48,580 கி.மீ வேகத்தில் பூமியை நெருங்கும் விண்கல் - 4 ஆபத்துகள் குறித்து நாசா எச்சரிக்கை!Twitter

நம் சூரியக்குடும்பத்தில் சூரியன், கோள்கள், துணைக் கோள்கள் தவிர எண்ணற்ற விண்கல்களும் இருக்கின்றன. இந்த விண்கல்களையும் வானியில் அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். லட்சக்கணக்கான விண்கல்களை அடையாளம் கண்டு அவற்றுக்குப் பெயரிட்டுள்ளனர்.

ஒரு காலத்தில் பூமியை ஆண்டு வந்த டைனோசர் இனம் விண்கல் தாக்குதலால் தான் அழிந்தது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டக் கருத்து. இதனாலே இந்த விண்கல்களில் ஒன்றினால் நமக்கு ஆபத்து ஏற்படுமா என்ற அச்சம் ஆதி முதலே மனித இனத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.

விண்கல் என்பது அளவில் மிகச் சிறியக் கோள்கள் எனலாம். இவை பாறை, பனிக்கட்டி அல்லது உலோகத்தால் ஆனவையாக இருக்கலாம். இவற்றுக்கு வளிமண்டலம் கிடையாது. விண்கல்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தாலும் அதன் வடிவம் அளவில் மாறுபடும். 5 மீட்டர் முதல் பல கிலோமீட்டர்கள் வரை இவற்றின் நீளம் இருக்கலாம். விண்வெளியின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து இந்த கல்கள் வந்தவையாக இருக்கலாம். சிதறிய சிறுகோளின் துகள்களாகவும் இருக்கக் கூடும்.

விண்வெளியில் சில விண்கல்கள் அதிவேகமாக பயணித்துக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு விண்கல் நமக்கு அருகாமையில் செல்வதை சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் பார்க்க முடிந்தது.

இப்போது பூமிக்கு அருகாமையில் ஆபத்து ஏற்படுத்தும் விதமாக நிலைக்கொண்டிருப்பதாக நாசா குறிப்பிடும் விண்கல்கள் குறித்துக்காணலாம்.

1. Asteroid 2005 LW3

நாசா கூறிய விண்கல்களில் மிகப் பெரியது ஆஸ்டிராய்டு 2005 எல்.டபிள் யூ3. இது பெரியதாக இருப்பதனால் இதனை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடித்தது நாசா. சமீபத்தில் இந்த விண்கல் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது நாசா.

இந்த விண்கலின் நீளம் 426 அடி முதல் 918 வரை எனக் கூறப்படுகிறது. இது மணிக்கு 48,580 கிலோமீட்டர் வேகத்தில் பூமிக்கு அருகில் பயணிக்கிறது.

2. Asteroid 2022 WS2

இந்த விண்கல் பூமிக்கு மிக நெருக்கமாக வந்ததனால் நாசாவால் ஆபத்தானதாக கருதப்பட்டது. இதன் அளவு 39 முதல் 88 அடி வரை இருக்கும். கடந்த நவம்பர் 23ம் தேதி இது பூமிக்கு மிக அருகில் வந்தது. இது புவியிலிருந்து 3 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில், மணிக்கு 42,039 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

 48,580 கி.மீ வேகத்தில் பூமியை நெருங்கும் விண்கல் - 4 ஆபத்துகள் குறித்து நாசா எச்சரிக்கை!
விண்வெளி சுரங்கம்: ஒரு கல்லின் விலை பல Trillion - உங்களை கோடிஸ்வரராக்கும் எதிர்கால தொழில்

3. Asteroid 2022 WR2

இது பூமிக்கு மிக மிக அருகில் நெருங்கிய விண்கல் ஆகும். wionews கூறுவதன் படி, நவம்பர் 23ம் தேதி பூமியிலிருந்து வெறும் 3.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த விண்கல் பயணித்தது.

மணிக்கு 27,629 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இது பூமியைத் தாக்கினாலும் சிறிய அளவிலேயே பாதிப்புகள் இருக்கும் என்று நாசா கூறியுள்ளது. ஏனெனில் இது அளவில் மிகச் சிறியது.

4. Asteroid 2022 WL2 

பூமிக்கு மற்றொரு ஆபத்தாக இருக்கும் விண்கல் 29 முதல் 65 அடி வரை பெரியதாக இருக்கும். இது இந்த வாரம் பூமியிலிருந்து 2.2 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் மணிக்கு 28,980 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இது நவீன ஏவுகணைகளை விட அதிக வேகமானது என்றுக் கூறப்படுகிறது.

 48,580 கி.மீ வேகத்தில் பூமியை நெருங்கும் விண்கல் - 4 ஆபத்துகள் குறித்து நாசா எச்சரிக்கை!
Tiangong : சீனாவால் ராட்சத கரத்துடன் கட்டப்படும் விண்வெளி மையம் - அமெரிக்கா அஞ்சுவது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com