16 சைக் என்பது ஒரு பெரிய M-வகை சிறுகோள் ஆகும். இது இத்தாலிய வானியலாளர் அன்னிபேல் டி காஸ்பரிஸால் கண்டுபிடிக்கப்பட்டது. நேபிள்ஸில் 17 மார்ச் 1852ல் பணிபுரிந்து வந்த அவர் கிரேக்க புராண உருவமான சைக்கின் பெயரை அந்த சிறுகோளுக்கு சூட்டினார். "16" என்ற முன்னொட்டு அது கண்டுபிடிக்கப்பட்ட வரிசையில் பதினாறாவது சிறிய கிரகம் என்பதை குறிக்கிறது. இது M-வகை சிறுகோள்களில் மிகப்பெரியது ஆகும். இது தோராயமாக 220 கிலோமீட்டர் (140 மைல்) விட்டம் கொண்டது.
நீங்கள் கோடீஸ்வரராக விரும்புகிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தங்கம், இரும்பு மற்றும் நிக்கல் போன்ற பிற உலோகங்களால் செய்யப்பட்ட 16 சைக் எனும் இந்த சிறுகோளுக்கு செல்வது எப்படி என்று கண்டுபிடிக்க வேண்டும். செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையே பறக்கும், இந்த அற்புதமான விண்வெளி பாறை 700 குவிண்டில்லியன் டாலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது. காரணம் அதில் உள்ள அனைத்து உலோகங்களின் மதிப்பு அப்படிப்பட்டது.
டிரில்லியன் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அது என்ன குவிண்டில்லியனQuintillion? எண் ஒன்றுக்கு அருகே 18 பூஜ்ஜியங்களை போட்டால் அதுதான் குவிண்டில்லியன். இது மிகப் பெரிய தொகை. எனில் தற்போது பூமியில் வாழும் அனைவருக்கும் 16 சைக் சிறுகோளின் உலோகங்களை பிரித்தால் பூமியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் சுமார் 93 பில்லியன் டாலர் கிடைக்கும்.
சரி இவ்வளவு பெரிய தொகையை வைத்து என்றசெய்வது என்று யோசிக்கிறீர்களா? ஒரு பெரும் அரண்மனையாக கட்டி 93 பில்லியன் டாலர் பணத்தை அதில் பாதுகாப்பாக வைப்பதெனக் கற்பனை செய்கிறீர்களா? ஆனால் அதில் பெரும் பிரச்சினை உள்ளது.
உண்மையில் இவ்வளவு பெரிய விலைமதிப்பற்ற உலோகங்களை பூமிக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு மிகவும் கடினம். மற்றும் மிகச் சிறிய அளவுகளில் கூட இது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 16 சைக் என்பது 200 கிமீ (120 மைல்) விட்டம் கொண்ட உண்மையிலேயே மிகப்பெரிய விண்வெளி பாறையாகும். இது சிறுகோள் பாதையில் பறக்கும் மிகப்பெரிய சிறுகோள்களில் ஒன்றாகும்.
ராயல் அஸ்ட்ரோனமிகல் சொசைட்டியின் பேராசிரியர் ஸர்னெக்கி போன்ற வல்லுநர்கள், அந்த அளவிலான வணிகச் சுரங்க நடவடிக்கைகளை செய்ய இன்னும் 50 வருடங்கள் ஆகும் என்று கருதுகின்றனர். இதற்கென நாசா 2022ம் ஆண்டில் சிறுகோளுக்கு ஒரு டிஸ்கவரி மிஷன் அனுப்ப திட்டமிட்டுள்ளது. அது 2026 க்குள் அங்கு போய்ச் சேரும்.
யூரோ பசிபிக் கேப்பிட்டலின் பீட்டர் ஷிஃப், 16 சைக் "கிட்டத்தட்ட முழுக்க முழுக்க இரும்பு-நிக்கல் அலாய், சிறிய அளவு மற்ற உலோகங்களால் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்று ட்வீட் செய்தார். அதில் கொஞ்சம் தங்கம் இருக்கலாம். மேலும் நாம் நினைப்பது போல் இந்த சிறுகோள் விலையுயர்ந்த பொருட்களால் நிரம்பியுள்ளதாக சிலர் நினைக்கவில்லை. சிறுகோள் பற்றிய செய்திகள் பிட்காயினுக்கு உதவும் என்று அவர் நினைக்கிறார். அதாவது தங்கத்தின் விலை குறைவதால் பிட்காயின் பயனடையும்.
கருத்தில் கொள்ள வேண்டிய பிற கேள்விகளும் உள்ளன. சைக் 16 சிறுகோள் உண்மையில் தங்கம் மற்றும் பிற செல்வங்களால் நிரம்பியிருந்தால், இந்த சிறுகோள் உண்மையில் பூமியின் பொருளாதாரத்தை செயலிழக்க செய்யலாம்.
நிச்சயமாக, ஒரு பெரிய அளவிலான கனரக உலோகங்களை கண்டுபிடிக்கும் ஒரு விண்வெளி தங்க வேட்டை பூமியின் விவகாரங்களை குறைக்கும் என்ற சிந்தனை தற்போதைய பொருளாதார நிலை மற்றும் இன்றைய தேவைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு பிறகு, உலோகத்திற்கான நமது தேவைகள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கலாம்.
சிறுகோள் படுகையில் உள்ள இந்த மாபெரும் 16 சைக் பாறையைத் தவிர, பூமிக்கு மிக அருகில் மற்ற சுரங்க வாய்ப்புகளும் உள்ளன. சைக் "தங்கத்திற்கான விண்வெளி ஆய்வின் புனித கிரெயிலாக இருக்கலாம்" என்று மூர் சுட்டிக்காட்டுகிறார். (ஹோலி கிரெயில் என்பது ஆர்தரிய இலக்கியத்தில் ஒரு முக்கிய மையமாக செயல்படும் ஒரு பொக்கிஷம். பல்வேறு மரபுகள் ஹோலி கிரெயிலை ஒரு கோப்பை, பாத்திரம் அல்லது அதிசய சக்திகள் கொண்ட கல் என்று விவரிக்கின்றன. நித்திய இளமை அல்லது வாழ்வாதாரத்தை எல்லையற்ற மிகுதியாக வழங்குதல் இதுபுனித கிரெயிலின் சக்தி என்று புராணத்தில் நம்பப்படுகிறது.)
பூமிக்கு அருகில் உள்ள சிறுகோள்கள் விண்வெளி சுரங்கத்திற்கான முதல் இலக்குகளாகும். நமது சந்திரன் கூட இதுபோன்ற செயல்பாடுகளை தொடங்க சிறந்த இடமாக இருக்கலாம். இது தங்கம் மற்றும் பிளாட்டினம் மற்றும் பிற அரிய பூமி உலோகங்களையும் கொண்டுள்ளது.
பூமிக்கு நெருக்கமாக இருக்கும் விண்கற்களில் இருந்து டீப் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிளானட்டரி ரிசோர்சஸ் ஒவ்வொன்றும் 5.7 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சுரங்கம் அமைத்து உலோகம் எடுக்க திட்டமிட்டுள்ளன. இந்நிறுவனங்கள் 2011 UW158 எனும் சிறுகோளைச் சுரங்கப்படுத்த திட்டமிட்டுள்ளன.
இவை அனைத்தும் அறிவியல் புனைகதைகள் என்று நீங்கள் நினைக்காதபடி, உலக விண்வெளிப் பொருளாதாரம் ஏற்கனவே $350 பில்லியன் மதிப்புடையதாக இருக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளார். இது 2040 ஆம் ஆண்டு டிரில்லியன்களாக உயரும் என்று அது கருதப்படுகிறது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் சிறிய லக்சம்பர்க் ஆகிய நாடுகளுக்கு இடையே இத்துறையில் போட்டி உள்ளது. இதுவரை 10 விண்வெளி சுரங்க நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
16,17 ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்கா, தென்னமெரிக்காவில் தங்கத்தை கண்டுபிடிக்க கௌபாய்கள் குதிரைகளில் சாகசப் பயணம் செய்தனர். அது போல இன்னும் 50 முதல் 100 வருடங்களில் மக்கள் தமது சொந்த விண்கலங்களில் விண்வெளியில் இருக்கும் விண்கற்களில் இருந்து தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களை வேட்டையாட முயற்சிப்பார்களோ?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu