சைபீரிய பனிக்கட்டிப் பகுதிகளில் கண்டறியப்பட்ட ஏறத்தாழ 50,000 ஆண்டுகள் பழமையான வைரஸ் உலகெங்கும் பேச்சு பொருளாக உருவாகியிருக்கிறது.
காலநிலை மாற்றத்தின் பல எதிர்மறை விளைவுகளை நம் பூமி சந்தித்து வருகிறது. அதில் முக்கியமானது பனிக்கட்டிகள் உருகுதல்.
பனிக்கட்டி உருகுதல் கடல் நீர் மட்டத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதில் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைந்திருக்கும் வைரஸ்களை வெளியில் கொண்டு வருகிறது.
கேப்டன் அமெரிக்கா போல பனிக்கட்டிக்குள் மறைந்திருந்து இப்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த 'ஜாம்பி வைரஸ்' மனித குலத்துக்கும் இந்த புவிக்கும் எந்தெந்த வகையில் தீமை விளைவிக்குமா? என்பதைக் காணலாம்.
ஜீன் மேரி அலெம்பிக் என்ற நுண்ணுயிரியலாளர் வெளியிட்டுள்ள இதழின் படி, கண்டறியப்பட்ட வைரஸ்கள் மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. மேலும் இது குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டியது அவசியம். அப்போது தான் இந்த வைரஸ்கள் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்பதனை கண்டறிய முடியும்.
பிரஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் அலெம்பிக்கின் குழுவினர் இணைந்து நடத்திய சோதனையில் 7 வெவ்வேறு நிரந்தர பனிக்கட்டிகள் இருந்த பகுதிகளில் 13 வகையான வைரஸ்கள் கண்டறியப்பட்டன.
அதில் ஒரு வகை வைரஸ் 48,500 ஆண்டுகளுக்கு முந்தையதாக அறியப்படுகின்றது. இந்த ஜாம்பி வைரஸ்கள் இப்போதும் பிற உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திறனுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
பழங்காலத்தில் உறைந்த வைரஸ்கள் இதுவரை நாம் அறியாத தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. இவை இப்போது இருக்கும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் மீது பேராபத்தை விளைவிக்கக்கூடும் என்று அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust