Marburg virus : கொரோனாவுக்கு அடுத்து உலகை அச்சுறுத்தும் அடுத்த வைரஸ் - எப்படி தவிர்ப்பது?

காய்ச்சல், தசை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் பல சந்தர்ப்பங்களில், தீவிர இரத்த இழப்பால் மரணம் கூட ஏற்படுத்தும் இந்த அதிதத் தொற்று நோய் பெருமளவில் பரவும் என்ற அச்சத்தை எழுப்புகிறது.
மார்பர்க் வைரஸ்
மார்பர்க் வைரஸ்Twitter

கோவிட் 19, குரங்கம்மைக்கு பிறகு அடுத்து ஒரு வைரஸ் உலகை ஆட்டி வைக்கப் போகிறது. அந்த வைரஸின் பெயர் மார்பர்க். ஆப்பிரிக்க நாடான கானாவில் இரண்டு பேர் மார்பர்க் வைரஸால் இறந்துள்ளனர். மேலும் 98 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல், தசை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் பல சந்தர்ப்பங்களில், தீவிர இரத்த இழப்பால் மரணம் கூட ஏற்படுத்தும் இந்த அதிதத் தொற்று நோய் பெருமளவில் பரவும் என்ற அச்சத்தை எழுப்புகிறது.

மார்பர்க் வைரஸ் என்றால் என்ன?

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இந்த வைரஸ் கொடிய எபோலா வைரஸின் குடும்பத்தை சேர்ந்தது. மார்பர்க் வைரஸ், 31 பேர் பாதிக்கப்பட்ட பின்னர் 1967 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டது. அதில் ஏழு பேர் இறந்து போயினர். அப்போது இந்த வைரஸ் தோன்றிய இடங்கள்:

பிராங்பேர்ட், ஜெர்மனி
பெல்கிரேட், செர்பியா

மார்பர்க் வைரஸ் முதலில் ஆப்பிரிக்க பச்சை குரங்கில் கண்டுபிடிக்கப்பட்டது. உகாண்டாவில் உள்ள ஆப்பிரிக்க பச்சை குரங்குகள் மூலம் இந்த வைரஸ் தோன்றி மற்ற நாடுகளுக்கு பரவியதாக கண்டறியப்பட்டது. ஆனால் பிரச்சினை அத்தோடு முடியவில்லை. அன்றிலிருந்து மற்ற விலங்குகளுடனும் இந்த வைரஸ் இணைக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடையே, இது பெரும்பாலும் வௌவால்கள் நிறைந்த குகைகள் மற்றும் சுரங்கங்களில் நீண்ட காலம் இருப்பவர்களால் பரவுகிறது.

தற்போது கானா நாட்டில் இந்த வைரஸ் மீண்டும் தோன்றியுள்ளது. ஆனால் பல ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. பரவிய நாடுகள்:

காங்கோ ஜனநாயக குடியரசு
கென்யா
தென்னாப்பிரிக்கா
உகாண்டா
ஜிம்பாப்வே

அங்கோலா நாட்டில் 2005 ஆம் ஆண்டு இந்த வைரஸ் தாக்கியதில் 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஆனால் ஐரோப்பாவில், கடந்த 40 ஆண்டுகளில் ஒரே ஒரு நபர் மட்டுமே இறந்துள்ளார். உகாண்டாவில் உள்ள குகைகளுக்கு சென்று திரும்பிய பிறகு அமெரிக்காவில் ஒருவர் இறந்து போனார். இதுவரை இந்த வைரஸ் தோன்றியதிலிருந்து நாடுவாரியான பாதிப்புகள்

2017, உகாண்டா: மூன்று பேருக்கு தொற்று, மூன்று பேர் இறந்தனர்.
2012, உகாண்டா: 15 பேருக்கு தொற்று, நான்கு பேர் இறந்தனர்.
2005, அங்கோலா: 374 பேருக்கு தொற்று, 329 பேர் இறந்தனர்.
1998-2000, காங்கோ: 154 பேருக்கு தொற்று, 128 பேர் இறந்தனர்.
1967, ஜெர்மனி: 29 பேருக்கு தொற்று, ஏழு பேர் இறந்தனர்.

மார்பர்க் வைரஸ்
குரங்கு அம்மை: கண்டம் விட்டு கண்டம் பரவும் புதிய வைரஸ் - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

என்னென்ன நோய் அறிகுறிகள் ஏற்படுகிறது?

வைரஸ் திடீரென்று தான் ஒருவரை பாதிக்கிறது. அதன் பிறகு ஏற்படும் அறிகுறிகள்: காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை வலிகள்.

மூன்று நாட்களுக்கு பிறகு தோன்றும் அறிகுறிகள்: நீர் வயிற்றுப்போக்கு, வயிற்று வல, குமட்டல், வாந்தி.

இந்த வைரஸ் தாக்குதல் பற்றி உலக சுகாதார நிறுவனம் WHO கூறுவதை பார்ப்போம்: "இந்த கட்டத்தில் நோயாளிகளின் தோற்றம் 'பேய் போன்ற' அம்சங்கள், ஆழமாக பதிந்திருக்கும் கண்கள், உணர்ச்சியற்ற முகங்கள் மற்றும் தீவிர சோம்பல் ஆகியவற்றைக் காட்டுவதாக விவரிக்கப்பட்டுள்ளது."

அதீத இரத்த இழப்பு மற்றும் அதிர்ச்சியின் காரணமாக, பலர் உடலின் பல்வேறு பகுதிகளில் இருந்து இரத்தம் கசிந்து, முதலில் நோய்வாய்ப்பட்ட எட்டு முதல் ஒன்பது நாட்களுக்குப் பிறகு இறந்து விடுகிறார்கள்.

சராசரியாக, வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பேர் கொல்லப்படுவதாக WHO கூறுகிறது. ஆனால் மிகவும் தீவிரமான வைரஸ் தாக்குதலில் 88% வரை கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மார்பர்க் வைரஸ்
பசி, அடுத்த வைரஸ் : 2022 ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கும்? - நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்

இந்த வைரஸ் எப்படி பரவுகிறது?

எகிப்திய ரவுசெட் பழ வவ்வால்கள் பெரும்பாலும் வைரஸைக் கொண்டுள்ள உயிரினமாகும். ஆப்பிரிக்க பச்சை குரங்குகள் மற்றும் பன்றிகள் கூட இந்த வைரஸைச் சுமக்க முடியும்.

மனிதர்களிடையே, இது உடல் திரவங்கள் மற்றும் அவற்றால் அசுத்தமான படுக்கைகள் மூலம் பரவுகிறது. மக்கள் குணமடைந்தாலும், அவர்களின் இரத்தம் அல்லது விந்து கூட பல மாதங்களுக்கு பிறகு மற்றவர்களை பாதிக்கலாம்.

African Green Monkey
African Green MonkeyTwitter

இந்த வைரஸுக்கு சிகிச்சை என்ன?

இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட தடுப்பூசி அல்லது சிகிச்சை எதுவும் இல்லை.

ஆனால் பலவிதமான இரத்த தயாரிப்புகள், மருந்துகள் மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று WHO கூறுகிறது.

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஏராளமான திரவங்களை கொடுப்பதன் மூலமும், இழந்த இரத்தத்தை மாற்றுவதன் மூலமும் மருத்துவர்கள் அறிகுறிகளை தணிக்க முடியும்.

மார்பர்க் வைரஸ்
கொரோனா வைரஸ் : சீனாவை நெருங்கும் ஒரு முக்கிய ஆபத்து, அஞ்சும் அரசு - என்ன நடக்கிறது அங்கே?

இந்த வைரஸை எப்படி அடக்க முடியும்?

ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் புஷ்மீட் எனப்படும் காட்டு விலங்குகளின் இறைச்சியை சாப்பிடுவதையோ கையாளுவதையோ தவிர்க்க வேண்டும் என்று தடுப்பூசி அணுகலை ஊக்குவிக்கும் சர்வதேச அமைப்பான காவி - Gavi கூறுகிறது.

தொற்றுநோய் உள்ள பகுதிகளில் மக்கள் பன்றிகளுடன் தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என்று WHO கூறுகிறது.

வைரஸால் பாதிக்கப்பட்ட ஆண்கள் அறிகுறிகள் தோன்றிய ஒரு வருடத்திற்கு அல்லது அவர்களின் விந்துவில் வைரஸ் சோதனை நெகட்டீவ் என வரும் வரை ஆணுறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும் வைரஸால் இறந்தவர்களை அடக்கம் செய்பவர்கள் உடலைத் தொடுவதையோ தவிர்க்க வேண்டும்.

மார்பர்க் வைரஸ்
கொரோனாவுக்கு அடுத்த ஆபத்து : உலகை அச்சுறுத்தும் அதிவேக Marburg virus - என்ன நடக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com