பிங்க் நிறத்தில் ஜொலித்த அண்டார்டிகா வானம் - ஏன்? என்ன ஆச்சு?

அண்டார்டிகாவில் உள்ள ஸ்காட் பேசில் பணியமர்த்தப்பட்டிருந்த ஸ்டுவர்ட் ஷா (Stuart Shah) என்கிற நியூசிலாந்தைச் சேர்ந்த அறிவியல் தொழில்நுட்பக் கலைஞர் பிங்க் நிற வானத்தைப் படம் பிடித்தார்.
அண்டார்டிகா
அண்டார்டிகா Twitter
Published on

உலகின் ஏழு கண்டங்களில் ஒன்றான அன்டார்டிகா எப்போதும் பனி மூடி இருப்பதால் அதை வெள்ளை கண்டம் என்று அழைப்பர். சமீபத்தில் அந்த வெள்ளை கண்டத்தின் வானத்தில், அப்படியே பிங்க் நிற சாயத்தைக் கரைத்துவிட்டது போல வானம் ஜொலித்தது.

அப்போது, அண்டார்டிகாவில் உள்ள ஸ்காட் பேசில் பணியமர்த்தப்பட்டிருந்த ஸ்டுவர்ட் ஷா (Stuart Shah) என்கிற நியூசிலாந்தைச் சேர்ந்த அறிவியல் தொழில்நுட்பக் கலைஞர் அதைப் படம் பிடித்தார்.

வானம் ஏன் பிங்க் நிறத்துக்கு மாறியது?

வளிமண்டலத்தில் உள்ள நீர்த் துளிகள் முதல் தூசி வரை பலவற்றின் ஊடாக சூரிய ஒளி பயணித்து மறுபக்கம் வெளிப்படும் போது வெள்ளை நிறம் அல்லது பிங்க் நிறம் என சூரிய ஒளி சிதைந்து வெளிப்படும். இதை ஆங்கிலத்தில் Afterglow Effect என்று அழைக்கிறார்கள்.

பொதுவாக Afterglow Effect மேகக் கூட்டங்களுக்கு மேல், சூரியன் மறையும் போது ஏற்படும் அல்லது பெரிய பனிப் பாறைகளில் எதிரொலித்து சூரியன் மறைந்த பிறகு ஏற்படும்.

டொங்கா எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஆஃப்டர் குளோ விளைவு ஏற்பட்டதால் வானம் ஜொலித்ததாகக் கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டொங்கா எரிமலை வெடிப்பின் போது, வளிமண்டலத்தின் ஸ்ட்ராடோஸ்ஃபியர் அடுக்கில் நீர்த்துளிகள் தங்கியதன் விளைவாக, கடந்த ஜூன் மாதம் நியூசிலாந்தில் ஆஃப்டர்குளோ விளைவு ஏற்பட்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

அண்டார்டிகாவில் பணியாற்றிக் கொண்டிருந்த விஞ்ஞானிகள் நியூசிலாந்தின் 'நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் வாட்டர் அண்ட் அட்மாஸ்ஃபெரிக்ஸ்' அமைப்பிடம் ஆஃப்டர் குளோ விளைவு குறித்துத் தெரியப்படுத்தினர்.

பொதுவாகப் பூமியின் வளிமண்டலத்தில் 15 - 24 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் ஸ்ட்ராடோஸ்ஃபியர் அடுக்கில் நீர்த்துளிகள் தங்கினால், அது அவ்வடுக்கிலேயே பல மாதங்களுக்குத் தங்கி இருக்கும். அதோடு நீர்த்துளிகள் அதே அடுக்கில் உலகின் பல பகுதிகளுக்குப் பயணிக்கும். அது சூரிய ஒளிச் சிதைவடையச் செய்வது, ஒளி பயணிக்கும் பாதையை மாற்றுவதால் பிங்க் மட்டுமின்றி, நீலம், பர்பிள், வயலெட் ஆகிய நிறங்களிலும் சூரிய ஒளியை மாற்றும் என நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் வாட்டர் அண்ட் அட்மாஸ்ஃபெரிக்ஸ் (NIWA) அமைப்பைச் சேர்ந்த நவா ஃபெடாஃப் (Nava Fedaeff) கூறியுள்ளார்.

அண்டார்டிகா
அண்டார்டிகா : இனி நான்கு மாதங்கள் சூரியன் உதிக்காது - ஏன் தெரியுமா?


மேலும் அண்டார்டிகாவின் ஸ்ட்ராடோபியர் அடுக்கில் நிறைய நீர்த்துளிகள் இருப்பதாகத் தரவுகள் காட்டுவதாகவும் கூறியுள்ளார் நவா.

இப்படி வெள்ளை கண்டமான அண்டார்டிகா பிங்க் நிறத்தில் மின்னியது, நெட்டிசன்களை வெகுவாக ஈர்த்தது. ஆளாளுக்கு பிங்க் நிற வானத்தைப் பதிவிட்டு தங்கள் கருத்துக்களைத் தெறிக்கவிடத் தொடங்கினர்.

அண்டார்டிகா
அண்டார்டிகா : பனிப்பாறைகளுக்கு அடியே ஓடும் ஆறு - ஓர் ஆச்சரிய உலகம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com