ஜூன் 2011 ஆம் ஆண்டு ஓஷன் எக்ஸ் குழுவினர் வடக்கு பால்டிக் கடலின் ஒரு பகுதியை ஆய்வு செய்தபோது UFO போன்ற ஒன்றை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஸ்வீடிஷ் ஆய்வாளர்களான பீட்டர் லிண்ட்பெர்க் மற்றும் டெனிஸ் அஸ்பெர்க் ஆகியோர் ரேடார் பிங்ஸ் மூலம் நீருக்கடியில் UFO போன்ற ஒன்றை கண்டறிந்ததாகவும், அதன் பின்னர் உலோகம் அல்லது பாறையால் செய்யப்பட்ட ஒரு பெரிய 70-அடி நீள வட்டை எதிர்கொண்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த காட்சியை விளக்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தாலும், ஸ்டார் வார்ஸின் சின்னமான மில்லினியம் பால்கன் விண்கலத்துடன் ஒப்பிடப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பைப் பற்றி ஆஸ்பெர்க் அவர்கள் உண்மையிலேயே ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருப்பதாகக் கூறினார். இது ஒரு சிதைவு அல்ல, மேலும் இந்த கண்டுபிடிப்பை பற்றி ஆய்வு செய்ய நினைத்தனர். அதுமட்டுமில்லாமல் முற்றிலும் ரகசியமாக வைக்க முடிவு செய்தனர். புவியியலாளர்கள் மற்றும் கடல் உயிரியலாளர்களுடன் கலந்தாலோசித்தனர்.
அந்த வட்ட வடிவம் இயற்கையான தோற்றம் கொண்டதாக தோன்றினாலும், பனி யுகத்தின் புவியியல் நிகழ்வுகள், பனிப்பாறை இயக்கம் போன்றவை அதன் உருவாக்கத்தை விளக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர். இந்த விளக்கங்கள் இருந்தபோதிலும், பால்டிக் கடல் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews