'அடங்காத ஆண்கள்' பறவைகளுக்கும் விவாகரத்து நடக்குமாம் - அறிவியல் சொல்லும் காரணம் என்ன?

எந்தெந்த பறவைகளில் அதிகமாக விவாகரத்து நடைபெறுகிறது, இதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது என்ன? போன்ற கேள்விகளுக்கு ஆய்வாளர்கள் விடை தேடியிருக்கின்றனர்.
'அடங்காத ஆண்கள்' பறவைகளுக்கும் விவாகரத்து நடக்குமாம் - அறிவியல் சொல்லும் காரணம் என்ன?
'அடங்காத ஆண்கள்' பறவைகளுக்கும் விவாகரத்து நடக்குமாம் - அறிவியல் சொல்லும் காரணம் என்ன?Twitter

அன்பு கொண்டு காதலிப்பதும், காமத்தின் பால் கலவி கொண்டு இனப்பெருக்கம் செய்வதும் மனிதர்கள் மட்டுமல்லாமல் எல்லா உயிர்களுக்குமான பண்பாக இருக்கிறது. எனில், விவாகரத்தும் அதேப் போல தானே… 

சில பறவைகள் மனிதர்களைப் போல ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவில் இருக்கும். பல வகைப் பறவைகள் இனப்பெருக்க காலத்தில் ஒரு துணையை மட்டுமே வைத்திருக்கும். 

பறவைகள் தங்கள் துணைகளை ‘விவாகரத்து’ செய்வது போல பிரிந்து செல்வதையும் தற்போது கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு பறவையினமும் ஒவ்வொரு வகையில் இதனைச் செய்கின்றன. 

இந்த பறவைகள் ஒன்றை ஒன்று பிரிய பாலுறவு சிக்கல்கள், மன உளைச்சல் போன்ற  மனிதர்களுக்கு இருக்கும் காரணங்களே இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Proceedings of the Royal Society என்ற இதழில் இந்த ஆய்வு தொடர்பான விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. சீனா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர்காள் 232 பறவையினங்களை ஆராய்ந்துள்ளனர்.

எந்தெந்த பறவைகளில் அதிகமாக விவாகரத்து நடைபெறுகிறது, இதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை தேடியிருக்கின்றனர்.

'அடங்காத ஆண்கள்' பறவைகளுக்கும் விவாகரத்து நடக்குமாம் - அறிவியல் சொல்லும் காரணம் என்ன?
கிவி : கோழி அளவுள்ள பறவைகள் ஈ.மு அளவு முட்டையிடுமா? பறக்காத பறவை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

விவாகரத்துக்கான காரணங்களை ஆய்வு செய்ததில், இரண்டு பாலின பறவைகளுக்கும் இருக்கும் துணை அல்லாத பிற பறவைகள் மீதான ஈர்ப்பு, பல தார மணத்தில் விருப்பம், இடப்பெயர்வு, வயதாவது ஆகிய காரணங்களை முக்கிய காரணமாக கண்டறிந்துள்ளனர். 

ஆண் பறவைகள் துணையல்லாத மற்ற பறவைகளையும் விரும்புவது தான் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இரண்டு பறவைகளும் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தால் இரண்டுக்குமான தொலைவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் ஒன்றை ஒன்று பிரிகின்றன.

'அடங்காத ஆண்கள்' பறவைகளுக்கும் விவாகரத்து நடக்குமாம் - அறிவியல் சொல்லும் காரணம் என்ன?
கொரிய மொழியில் தமிழ் வார்த்தைகள்! - தமிழருக்கும் கொரியாவுக்கும் என்ன தொடர்பு?| Explained

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com