கொரிய மொழியில் தமிழ் வார்த்தைகள்! - தமிழருக்கும் கொரியாவுக்கும் என்ன தொடர்பு?| Explained

இந்த பெயர் நிச்சயமாக ஒரு தமிழ்ப் பெயராகத் தான் இருக்க முடியும் என்று கருத்துக்கள் நிலவுகிறது. மறுபக்கத்தில், இந்தியாவின் வடக்கு மாகாணங்களில் இருக்கும் அயோத்தியாவில் இருந்து எவ்விதமான கப்பல் போக்குவரத்தும் பண்டைய காலத்தில் இல்லை.
இந்தியாவிலிருந்து தோன்றியவர்களா கொரியர்கள்? என்ன தொடர்பு? ஒரு ஆச்சரிய வரலாறு| Explained
இந்தியாவிலிருந்து தோன்றியவர்களா கொரியர்கள்? என்ன தொடர்பு? ஒரு ஆச்சரிய வரலாறு| ExplainedTwitter
Published on

சில பல ஆண்டுகளாக கொரியாவின் இசை மற்றும் சினிமா மீதான ஆர்வம் உலகளவில் பெருகிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக, இந்தியர்கள் கொரிய மக்களின் பண்பாடு, மொழி, கலை, கலாச்சாரம், விருந்தோம்பலை பெரிதும் விரும்பத் துவங்கியுள்ளனர். இந்த விஷயங்கள் தமிழ் சினிமாவிலும் கூட எதிரொலித்திருப்பதைக் நம்மால் பார்க்க முடிகிறது. அப்படி என்ன இந்தியர்கள், கொரியர்களிடம் கண்டார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

ஆனால், கொரியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே நீண்ட கால பந்தம் இருக்கிறது என்று சொன்னால் கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஆமாம், கொரியர்கள் இந்தியாவை குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பின்னணி கொண்டவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது, கொரியாவில் உள்ள 10 மில்லியன் மக்கள் 'கிம்' என்ற பெயரைத் தங்களது கடைசிப் பெயராக வைத்துள்ளனர். இந்த 10 மில்லியன் மக்களில் 4.5 மில்லியன் பேர் கிம்ஹே என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இதில் கிம்ஹே என்ற இனம் சுரோ அரசர் தோற்றுவித்த கரக் என்ற ராஜவம்சத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கரக் ராஜவம்சத்தின் அரசி ஹியோ ஹ்வாங் ஓக் இந்தியாவைச் சேர்ந்தவராம். இது தொடர்பான 'தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் கொரியா ஹிஸ்டரி' இணையதள தகவலின்படி, இந்தியாவைச் சேர்ந்த இளவரசி ஹியோ ஹ்வாங் ஓக், 'அயுதா' என்ற இடத்தில் இருந்து 20 பேர்களுடன் கொரியாவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.

அதாவது, இளவரசி ஹியோவின் பெற்றோர் கடவுளின் விருப்பத்தின் பேரில் அவரை அரசர் சுரோவுக்கு மணமுடித்து வைக்க கொரியாவுக்கு அனுப்பியுள்ளனர். கொரியா வந்த இளவரசியை அரசர் சுரோ திருமணம் செய்த பின்னர் இவர்களுக்கு 12 குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் 10 குழந்தைகளின் பெயருக்கு பின்னால் 'கிம்' என்ற பெயரும் 2 குழந்தைகளுக்கு பின்னால் 'ஹியோ' என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பின் நாட்களில் அவர்களின் குடும்பப்பெயராக மாறி இருக்கிறது.

இந்தியாவிலிருந்து தோன்றியவர்களா கொரியர்கள்? என்ன தொடர்பு? ஒரு ஆச்சரிய வரலாறு| Explained
ஜெர்மனி: நாட்டுக்காக நாஜி வீரர்களுடன் குழந்தை பெற்ற ஆரிய பெண்கள் - மறைக்கப்பட்ட சோக வரலாறு

இளவரசி ஹியோ இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அயோத்தியா என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்ற வாதங்கள் ஒரு புறமும், மறுபுறம், தென்னிந்திய பகுதியான கன்னியாகுமரியில் உள்ள 'அயுதா' என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால், இளவரசிக்கு ஹியோ ஹ்வாங் ஓக் என்ற கொரியன் பெயர் வைப்பதற்கு முன்பாக அவரது பெயர் 'சுரிரத்னா' என்று இருந்ததாம்.

இந்த பெயர் நிச்சயமாக ஒரு தமிழ்ப் பெயராகத் தான் இருக்க முடியும் என்று கருத்துக்கள் நிலவுகிறது. மறுபக்கத்தில், இந்தியாவின் வடக்கு மாகாணங்களில் இருக்கும் அயோத்தியாவில் இருந்து எவ்விதமான கப்பல் போக்குவரத்தும் பண்டைய காலத்தில் இல்லை. ஆனால், தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி பகுதியில் இருந்து கப்பல் போக்குவரத்திற்கான வழிகள் இருப்பதால் இளவரசி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகி இருக்கிறது.

இந்தியாவிலிருந்து தோன்றியவர்களா கொரியர்கள்? என்ன தொடர்பு? ஒரு ஆச்சரிய வரலாறு| Explained
தி ஓவல் ஸ்டேடியத்தில் யானை: இங்கிலாந்தில் இந்தியாவின் முதல் வெற்றி - புல்லரிக்கும் வரலாறு!

இது தவிர, தமிழில் பேசப்படும் கிட்டத்தட்ட 500 வார்த்தைகள் கொரியாவில் பேசப்படும் மொழிகளுடன் ஒத்துப்போகிறது. இந்த இரு நாடுகளும் சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் இத்தகைய ஒற்றுமை இருப்பது சற்று ஆச்சரியமளிப்பதாகத் தான் இருக்கிறது. குறிப்பாக, தமிழில் நாம் உபயோகிக்கும் அம்மா, அப்பா, அண்ணி போன்ற வார்த்தைகள் கொரியாவில் பேசப்படும் வார்த்தைகளை அப்படியே ஒத்திருக்கும்.

இது தவிர கொரியர்களின் உணவு முறை, இசை மற்றும் நடனம் மீதான ஆர்வம் அனைத்தும் அப்படியே இந்தியர்களை ஒத்துப்போகும். இதனால் தான் என்னவோ இந்தியர்களுக்கு கொரியாவின் இசை, திரைப்படங்கள் மீது காதல் ஏற்பட்டதோ?! என்று நினைக்கத் தோன்றுகிறது. இளவரசி ஹியோ ஹ்வாங் ஓக் மற்றும் அரசர் சுரோ பற்றி வெளி வந்த கொரியன் ட்ராமா 'அரிராங்' (Arirang - 2010) கொரியா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான மர்மங்களை சிறப்பாக விளக்கி இருக்கும்.

இந்தியாவிலிருந்து தோன்றியவர்களா கொரியர்கள்? என்ன தொடர்பு? ஒரு ஆச்சரிய வரலாறு| Explained
New York: உலகின் பணக்கார நகரமாக உருவானது எப்படி?ஆச்சரிய வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com