அண்டார்டிகா : வெப்ப அலையினால் அழியும் பனி அடுக்கு - சூழும் அடுத்த ஆபத்து

2002 முதல் 2020 ஆம் ஆண்டு வரை அண்டார்டிகா கண்டம் ஆண்டுக்கு சராசரியாக 149 பில்லியன் டன் எடை கொண்ட பனிக்கட்டிகளை இழந்துள்ளதாக நாசா தெரிவிக்கிறது. காங்கர் பனி அடுக்கின் இழப்பு மேற்கண்ட மாற்றங்களின் சமீபத்திய சான்று ஆகும்.
அண்டார்டிகா
அண்டார்டிகாTwitter
Published on

நன்னீரால் ஆன அண்டார்டிகாவின் பனி அடுக்குகள் வருடந்தோறும் குறைந்து வருகிறது. இதனால் கடல் நீரின் மட்டம் கூடுகிறது. இந்த ஆண்டும் அப்படி நடந்த ஒரு நிகழ்வு முக்கியமானது.

கிழக்கு அண்டார்டிகாவில் கடுமையான வெப்பநிலை நிலவியதைத் தொடர்ந்து இம்மாதம் பிரம்மாண்டமான ஒரு பனிக்கட்டி அடுக்கு சிதைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1200 சதுர கிமீ பரப்பளவு கொண்ட காங்கர் பனி அடுக்கு மார்ச் 15 தேதி வாக்கில் முழுமையாகச் சரிந்ததைச் செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன.

வளிமண்டல நதி மற்றும் வெப்ப அலையைத் தொடர்ந்து அண்டார்டிகாவின் பனி முகடுகள் தாக்கப்படுமா என்று நாசாவின் விஞ்ஞானி கேத்தரின் கொல்லோ வாக்கர் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். மேலும் இருண்ட கடலில் பனி முகடு நொறுங்கி வெள்ளை துண்டுகள் இரைந்து கிடக்கும் படங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

பனி அடுக்குகள், நிரந்தரமாக மிதக்கும் பனித் தகடுகள் போன்றவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் உருவாகும். அவை அழியும் போது பனிக் கட்டிகள் கடலில் சேர்ந்து கடல் மட்டம் உயரும்.

வெப்பம்
வெப்பம்Twitter

கிழக்கு அண்டார்டிகாவின் சில பகுதிகளில் மார்ச் மாதல் இயல்பை விட அதிகமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. இந்த வெப்ப அலையானது வளிமண்டல நதி நிகழ்ச்சிப் போக்குடன் இணைக்கப்பட்டுள்ளதாக மினசோட்டா பல்கலையின் பனிப்பாறை நிபுணர் பீட்டர் நெஃப் கூறியுள்ளார்.

இந்த செயல்முறை நூற்றுக்கணக்கான நீளமுள்ள நெடு வரிசைகளை உருவாக்குகிறது. அவை வெப்பமண்டலத்திலிருந்து நீராவியை எடுத்துச் செல்கின்றன. இதனால் "ஈரப்பதத்தின் நெருப்பு குழாய்" என்று சொல்லப்படும் விளைவு உருவாகிறது.

அண்டார்டிகாவின் காநிலை நம்பமுடியாத அளவிற்கு மாறக்கூடியது என்றாலும் இது வழக்கமான அளவில் இல்லை. மேலும் நாங்கள் எதிர்பார்த்தது போல வெப்பமாதல் நிகழ்வு குறந்தபட்சம் இரண்டு மடங்கு தீவிரமாக இருக்கிறது என்று பீட்டர் நெஃப் கூறினார்.

வருடத்தில் இக்காலத்தில் அண்டார்டிகாவின் வெப்ப நிலை என்பது -51 டிகிரி முதல் -60 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். ஆனால் இம்மாதத்தின் துவக்கத்தில் அந்த வெப்பநிலை -12 முதல் -10 ஃபாரன்ஹீட் அளவில் இருந்தது.

பரந்த பெருங்கடல்களால் சூழப்பட்டு, பெரிய வெப்ப காற்று ஊடுருவல்களில் இருந்து பாதுகாக்க முனையும் காற்றினால் தாங்கப்பட்டு உறைந்த அண்டார்டிக்கா கண்டம், ஆர்டிக்கைக் காட்டிலும் காலநிலை மாற்றத்திற்கு மெதுவாகவே முகம் கொடுக்கிறது. ஆனால் இந்த மெதுவான மாற்றமே உலகின் மற்ற பகுதிகளை விட மூன்று மடங்கு அதிக வெப்பத்தை கொண்டிருக்கிறது.

அண்டார்டிகா
காலநிலை மாற்றம் : 360 கோடி மக்கள் எதிர்காலம் கேவிக்குறி - எச்சரிக்கும் ஐ.பி.சி.சி
அண்டார்டிகா
அண்டார்டிகாTwitter

கடந்த நூற்றாண்டில் கிழக்கு அண்டார்டிகா அரிதாகவே வெப்பமடைந்தது. ஆனால் அதில் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 2002 முதல் 2020 ஆம் ஆண்டு வரை அண்டார்டிகா கண்டம் ஆண்டுக்கு சராசரியாக 149 பில்லியன் டன் எடை கொண்ட பனிக்கட்டிகளை இழந்துள்ளதாக நாசா தெரிவிக்கிறது. காங்கர் பனி அடுக்கின் இழப்பு மேற்கண்ட மாற்றங்களின் சமீபத்திய சான்று ஆகும்.

இந்த மிகவும் சூடான கடலோர காலநிலையில் இந்த பரிதாபத்திற்குரிய பனிக்கட்டி அடுக்கானது தனது இருப்பைத் தக்கவைக்க முடியாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளாக அது உருவில் குறைந்தும், சேதமடைந்தும் வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வெப்ப அலையின் நீண்ட காலத்திற்கு முன்பே காங்கர் பனி அடுக்கு பிளவுபட்டிருக்கிறது. அதன் அழிவு அண்டார்டிக் அமைப்பு வளிமண்டல மாற்றங்களுக்கு உணர்தின் உள்ளதைக் காட்டுகிறது. ஆனால் இது கவலைக்குரிய காரணமல்ல என்கிறார் கொலராடோ போல்டர் பல்கலையின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி டெட் ஸ்கம்போஸ் கூறினார்.

மேலும் காங்கர் பனி அடுக்கு இருந்த இடத்திற்குப் பின்னால் உள்ள ஒரு சிறிய பனிப்பாறை இப்போது வேகமாகப் பாய்ந்து இன்னும் கொஞ்சம் பனிக்கட்டிகளைக் கடலில் சேர்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

நமது ஊரிலிருந்து இந்த பனிக்கட்டியைப்பார்த்தால் அது மிகப்பெரியதாக இருக்கும். ஆனால் அண்டார்டிகா தர நிலைகள் மற்றும் கடல் மட்டத் தரங்களின் படி காங்கர் பனி அடுக்கு என்பது ஒரு சிறிய பகுதி என்றும் டெட்ஸ்கம் போஸ் கூறினார்.

காநிலை மாற்றம் புவியன் எப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. இது தடுத்து நிறுத்தா விட்டால் அண்டாரடி மட்டுமல்ல ஒட்டு மொத்த பீமிக்கே ஆபத்து!

அண்டார்டிகா
காலநிலை மாற்றம்: போர் இல்லாமல் இந்த புவி வாழ்க்கை அழியப் போகிறதா ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com