மனிதனின் உயரம் எதிர்காலத்தில் குறையும்- ஏன் தெரியுமா?

வருங்காலத்தில் மனிதர்கள் உயரம் குறைந்தவர்களாக மாறுவதற்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மனித பரிணாமமே காரணம் என்றும் கூறப்படுகிறது.
Dwarf Man
Dwarf ManTwitter
Published on

ஆதியிலிருந்து இன்று வரை பல பரிணாமங்களைக் கடந்து வந்திருக்கிறது மனித இனம். “குரங்கிலருந்து மனுஷன் வர்றதுக்கு 80 லட்சம் வருஷம் ஆகியிருக்கிறது சார்” என விக்ரம் படத்தில் ஒரு வசனம் கூட பேசியிருக்கிறார் கமல்ஹாசன்.

வரும் காலங்களில் மனித இனம் என்னவாக பரிணமிக்கும் என எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? பரிணாமங்களை எப்போதும் முடிவு செய்வது இயற்கை தான். ஆனால் தனது பரிணாமத்தை தானே எழுதியிருக்கிறது மனித இனம். ஆம், வருங்காலத்தில் மனிதர்கள் உயரம் குறைந்தவர்களாக மாறுவதற்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மனிதர்களின் நடவடிக்கையே இதற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது. அதனை வெளிப்படையாகக் காலநிலை மாற்றம் என்றும் கூறலாம். ஆம், காலநிலை மாற்றத்தின் விளைவாக நாம் உயரம் குன்றியவர்களாக மாறப்போகிறோம்.

காலநிலை மாற்றம் இயற்கையின் அமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல உயிர்கள் அழிந்து வருகின்றன என்றும் இதர மோசமான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

Global Warming
Global WarmingTwitter

காலநிலை மாற்றம் இந்த நிலையில் நீடிக்கும் வரை பூமியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கும் என்பதை நாம் அறிவோம். இதனால் புவி வெப்ப மயமாதல், கடல் மட்டம் உயர்தல் உள்ளிட்ட பல தீய விளைவுகளை ஏற்பட்டு வருகிறது. சரி, நாம் உயரம் குன்றியவர்களாக மாறப்போகும் கதைக்கு வருவோம்.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் புருசாட்டே கூறுவதன் படி, அளவில் சிறியதாக இருக்கும் பாலூட்டிகள் அதிக வெப்பத்திலும் எளிதாக வாழக்கூடியதாகவும் இருக்கின்றன.

Dwarf Man
எட்டி : இமயமலை பனி மனிதன் இருப்பது உண்மையா? - மர்ம உயிர் பற்றி ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

பேராசிரியர் ஸ்டீவ் புருசாட்டே அவரது கோட்பாட்டை பாலோசின் ஈசின் தெர்மல் மாக்ஸிமம் (Paleocene Eocene Thermal Maximum) எனும் நிகழ்வினை முன் வைத்து நிரூபிக்கிறார். இதனை விரிவாகக் காண்பதற்கு முன் பாலோசின் ஈசின் தெர்மல் மாக்ஸிமம் என்பது என்ன எனக் காண்போம்.

கிட்டத்தட்ட 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுதான் பாலோசின் ஈசின் தெர்மல் மாக்ஸிமம். அப்போது பூமியின் வெப்பநிலை 5 - 8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்தது. அதனால் அளவில் பெரிதாக இருந்த குதிரைகள் உயரம் குறைந்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

Dwarf Man
வாழைப்பழங்களுக்கு அஞ்சும் ஆண் எலிகள் - ஆச்சரியப்படுத்தும் ஆய்வு தகவல்
Climate Change
Climate ChangeCanva

காலநிலை மாற்றத்தின் சமீபத்திய எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு இருக்கிறது. இது தற்காலத்தின் காலநிலை மாற்றத்துடன் கச்சிதமாகப் பொருந்தக்கூடியது.

பெர்க்மேனின் விதி என அழைக்கப்படும் சூழலியல் கோட்பாடு படி, குளிர் பிரதேசங்களை விட வெப்ப மண்டலங்களில் வாழும் உயிரினங்கள் சிறியதாக இருக்கும்.

Dwarf Man
புவி வெப்பமயமாதலால் மகிழ்ச்சியடையும் உயிரினம் - காரணம் என்ன?

இவற்றை விளக்குவதற்கான துல்லியமான காரணிகள் இல்லை என்று கூறியிருக்கிறார் பேராசிரியர் ஸ்டீவ் புருசாட்டே. ஒரு வேளை புவி வெப்பமயமாதலில் இருந்து தப்பிக்க சரியான நடவடிக்கைகளை நாம் எடுக்காவிடில், மினியன்களைப் போல மாறிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com