புவி வெப்பமயமாதலால் மகிழ்ச்சியடையும் உயிரினம் - காரணம் என்ன?

அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில் விரியன் பாம்புகளின் இரத்தம் குளிர்ச்சியானதாக இருப்பதனால் அவை வெப்பம் அதிகரித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
விரியன் பாம்பு
விரியன் பாம்புTwitter
Published on

காலநிலை மாற்றத்தினால் சிறிய பூச்சிகள் தொடங்கி மனிதன் முதல் இராட்சத விலங்குகள் வரை அவதிக்கு உள்ளாகியிருக்கின்றன. மழைக்காலங்களில் வாழ்விடம் அழிக்கப்பட்டும் வெயில் காலங்களில் வாழ்விடத்தை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிப்பதுமாக நம் வாழ்க்கை மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலை இன்னும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கொடூரமான காலநிலை மாற்றத்தாலும், புவி வெப்ப மயமாதலினாலும் ஒரு உயிரினம் மட்டும் பயனடைகிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதுதான் விரியன் பாம்புகள்.

அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில் விரியன் பாம்புகளின் இரத்தம் குளிர்ச்சியானதாக இருப்பதனால் அவை வெப்பம் அதிகரித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

புவியின் வெப்பம் அதிகரித்தால் பாம்புகள் வனத்தில் செலவிடும் நேரம் அதிகரித்து ஓய்வில் இருக்கும் நேரம் குறையும்.

இந்த ஆய்வுக்காகப் பசிபிக் விரியன் பாம்புகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அவற்றின் உடலுக்கு 86-89 டிகிரி ஃபாரன்ஹீட் உடல் வெப்பநிலை வசதியானதாக உள்ளது எனக் கண்டறிந்துள்ளனர். பசிபிக் விரியன் பாம்புகள் தெற்கு கலிபோர்னியா போன்ற பாலைவனங்களில் வசிக்கக் கூடியது. இவற்றை வாஷிங்டன் போன்ற குளிர்ச்சியான பகுதிகளிலும் சில சமயம் காண முடியும் என்கிறார்கள்.

விரியன் பாம்பு
வாழைப்பழங்களுக்கு அஞ்சும் ஆண் எலிகள் - ஆச்சரியப்படுத்தும் ஆய்வு தகவல்
விரியன் பாம்பு
விரியன் பாம்புTwitter

இந்த ஆய்வை வழிநடத்திய ஹேலி குரோவெல், “ பாம்புகள் அதன் உடல் வெப்பநிலையை வைத்துப் பார்க்கும் போது, அவை வாழ வேண்டிய வெப்பநிலையை விடக் குறைவான வெப்பநிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. புவியின் வெப்பநிலையில் 2 டிகிரி அதிகரித்தால் பாம்புகள் ஓரளவுக்கு அதற்கு ஏற்ற வெப்பநிலையை அடையும். அவ்வாறு அடையும் போது உளவியல் ரீதியில் அவை மகிழ்ச்சியாக இருக்கும்.” என்கிறார்.

விரியன் பாம்பு
உயிர்வாழ தகுதியான மண்டலத்தில் Super-Earth கண்டுபிடிப்பு - விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்தபடி

மேலும், வெப்பநிலை அதிகரித்தால் அவற்றின் ஓய்வு நேரம் குறைந்து சுறுசுறுப்பாக உலாவுவதற்கு அதிக நேரம் கிடைக்கும். எனினும், தண்ணீர் தட்டுப்பாடு, காட்டுத்தீ போன்றவற்றால் விரியன் பாம்புகள் அபாயத்தைச் சந்திக்கும்.

மற்ற விலங்குகளை விடப் பாம்புகளின் வளர்சிதை மாற்றம் குறைவு என்பதனால் அவற்றுக்கு அதிக உணவும் தேவையிருக்காது. பனிக்கட்டிகள் உருகி நிலப்பரப்பு குறைந்தாலும் பாம்புகள் உயிர்வாழ்ந்துவிடும். ஏனெனில் அவற்றுக்குத் தேவை 2 சதுர அடி இடம் மட்டுமே.

விரியன் பாம்பு
காலநிலை மாற்றம்: போர் இல்லாமல் இந்த புவி வாழ்க்கை அழியப் போகிறதா ?

பாம்புகளுக்கு நன்மை செய்யும் நோக்கில் புவி வெப்ப மயமாதலுக்குத் துணை செல்லாமல் அவற்றின் ஓய்வு நேரத்தை காப்பது, நம்மையும் பிற உயிர்களையும் காலநிலை மாற்றத்திலிருந்து காக்க உதவும்.

விரியன் பாம்பு
காலநிலை மாற்றம்: உக்ரைன் ரஷ்யா போரால் என்ன நிகழ்ந்து இருக்கிறது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com