காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை நாம் எதையாவது சொல்லிக்கொண்டே இருப்போம். அன்றாட வாழ்க்கையில் பலரை சந்தித்திருப்போம்.
சிலர் பேசிக் கொண்டே இருப்பர், சிலருக்கு பேசும் தன்மை சற்று குறைவாக இருக்கும். என்னதான் பேசாதவர்களாக இருந்தாலும் வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்குமாம்.
மனிதனின் பேச்சு செயல்முறை ஒருபோதும் முடிவடையாது. ஆனால் நீங்கள் ஒரு நாளில் எத்தனை வார்த்தைகளை பேசுகிறீர்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
ஒரு ஆராய்ச்சியின் படி, மனிதர்கள் ஒரு நாளுக்கு குறைந்தது 7,000 வார்த்தைகள் பேசுகிறார்கள். இருப்பினும் சிலர் அதாவது பேசிக்கொண்டே இருப்பவர்கள் இதைவிட அதிகமான வார்த்தைகள் பேசுவதாக கூறுகிறது இந்த ஆய்வு
சரி அப்போ, வாழ்நாள் முழுவதும் எத்தனை வார்த்தைகள் பேசுகிறோம்? ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் 860,341,500 வார்த்தைகளை பேசுவதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது.
பிரிட்டிஷ் எழுத்தாளர், நடிகர் மற்றும் ஒளிபரப்பாளர், Gyles Brandreth, இந்த காரணிகளை பகுப்பாய்வு செய்துள்ளார். தி ஜாய் ஆஃப் லெக்ஸ்: ஹவ் டு ஹேவ் ஃபன் வித் என்ற 860,341,500 என்ற தனது புத்தகத்தில் இது தொடர்பான பல சுவாரசியமான உண்மைகளை கூறியுள்ளார்.
இந்த புத்தகத்தில், கேல்ஸ் மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 860,341,500 வார்த்தைகளை பேசுகிறார்கள் என்று எழுதியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust