வோடபோன் டூ பூமர் : புகழ் பெற்ற நிறுவனங்களின் logo பின்னணி தெரியுமா?

பார்லே, ஏசியன் பெயின்ட், ஏர் இந்தியா போன்ற முன்னணி நிறுவனங்களின் லோகோக்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. அப்படி முன்னணி பிராண்ட் சின்னங்கள் மற்றும் அவற்றின் பின்னணி குறித்து பார்க்கலாம்.
புகழ் பெற்ற நிறுவனங்களின் logo பின்னணி தெரியுமா?
புகழ் பெற்ற நிறுவனங்களின் logo பின்னணி தெரியுமா?Twitter
Published on

ஒரு நிறுவனத்தின் எந்தவொரு பிரண்டும் மக்கள் மத்தியில் அறியப்படப் பல வருடங்கள் கடின உழைப்பும் தொலைநோக்கு பார்வையும் தேவைப்படுகிறது.

வாடிக்கையாளர்களை தங்கள் பிராண்டு அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள், சேவைகளை அதிக அளவில் நுகர வைக்கவும், அந்த பிராண்டை நிலை நிறுத்தவும் நிறுவனங்கள் போராடி வருகின்றன.

அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் பிராண்ட்களின் அடையாளமாக இந்த லோகோக்கள் (logo) விளங்குகிறது. இந்த முன்னணி பிராண்ட் சின்னங்கள் மற்றும் அவற்றின் பின்னணி குறித்து பார்க்கலாம்.

பார்லே ஜி

பார்லே ஜி பிஸ்கட்களை நாம் இப்போதும் சாப்பிட்டு வருகிறோம். நாம் மட்டுமல்ல, நம் பெற்றோரும் இந்த பிஸ்கட்களை சாப்பிட்டு வளர்ந்தவர்கள் தான்! பார்லே-ஜி பிஸ்கட் இந்தியாவின் மிகவும் பிரபலமான பிஸ்கட்களில் ஒன்று.

இந்த பிஸ்கட்டின் அட்டையில் இடம்பெற்றிருக்கும் பெண் குழந்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்தப் பெண் குழந்தை நீரு தேஷ்பாண்டே என்றும், அவர் 4 வயதாக இருந்தபோது அவருடைய தந்தை க்ளிக் செய்ததாகவும் வதந்தி பரவியது.

ஆனால் பார்லே தயாரிப்பு குழு மேலாளர் மயங்க் ஷா, படத்தில் உள்ள குழந்தை 60 களில் எவரெஸ்ட் கிரியேட்டிவ் கலைஞரான மகன்லால் தயாவால் உருவாக்கப்பட்ட ஒரு எடுத்துக்காட்டு என்று கூறி அனைத்து வதந்திகளும் முற்றிப்புள்ளி வைத்தார்.

நிர்மா

நிர்மா சோப்பு விளம்பரங்களை சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறோம். நிர்மா தயாரிப்புகளில் இடம்பெற்ற பெண் உண்மையானது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.

நிர்மாவை கர்சன்பாய் படேல் என்பவர் நிறுவினார், அதன் சின்னமான 'நிர்மா பெண்' உண்மையில் அவரது மகள் நிருபமா!

படேல் தனது மகளை மிகவும் நேசித்தார், மேலும் அவர் இந்தியா முழுவதும் புகழ் பெற விரும்பினார், ஆனால் அவரது மகள் விபத்தில் இறந்தார். அவளுடைய மரணத்திற்குப் பிறகு அவர் நிருபமாவை அழியாத ஒன்றாக மாற்ற முடிவு செய்தார். அவரது நினைவாக தொடங்கப்பட்டது தான் நிர்மா நிறுவனம்

அமுல்

நாம் அனைவருக்கும் மிகவும் பரிட்சையமான பிராண்ட்களில் ஒன்று அமுல் . தி பெட்டர் இந்தியா கருத்துப்படி, 1966 ஆம் ஆண்டில், டாகுன்ஹா கம்யூனிகேஷன்ஸின் கலை இயக்குநரான யூஸ்டேஸ் பெர்னாண்டஸ், விளம்பரப் பலகைகளில் ஒரு பொது தோற்றத்தை வடிவமைத்தார்.

ஒரு கண்ணை மூடிக்கொண்டு, மற்றொரு கண்ணை திறந்து வெண்ணெய் பொட்டலத்தின் முன் முழங்கால்படியிட்டு பிரார்த்தனையில் ஈடுபடும் சிறுமியின் அழகான படம் அது.

இந்த லோகோக்கு நல்ல வரவேற்பு பொதுமக்களிடமிருந்து கிடைத்தது.

புகழ் பெற்ற நிறுவனங்களின் logo பின்னணி தெரியுமா?
கூகுள் முதல் கோலா வரை: புகழ் பெற்ற பிராண்ட்களின் முதல் பெயர் என்ன தெரியுமா?

ஏசியன் பெயின்ட்

1950-70களில், குறும்புத்தனமான காட்டு (Gattu), ஏசியன் பெயிண்ட்ஸின் விளம்பரத்தின் ஒரு பகுதியாக இருந்தது,

மறைந்த ஆர்.கே.லக்ஷ்மனின் தலைசிறந்த படைப்பான காட்டு, நடுத்தர வர்க்க மக்களிடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்தியது.

1970கள் வரை அச்சு விளம்பரங்களிலும் பேக்கேஜிங்கிலும் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் வண்ணப்பூச்சு தூரிகை இடம்பெற தொடங்கியது.

ஏர் இந்தியா

ஏர் இந்தியாவின் சின்னமாக 1946 முதல் மகாராஜா இருந்து வருகிறார். இந்த லோகோ கிரியேட்டிவ் கலைஞர் உமேஷ் ராவ் என்பவரால் உருவாக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டுதான் ஏர் இந்தியா தனது பழமையான 'மகாராஜா' சின்னத்தை மாற்றி அதற்கு பதிலாக இளைய அவதாரத்தை கொண்டு வந்தது.

இந்தியப் பிரதமராக பதவியேற்று ஒரு மாதத்துக்குள்ளாகவே, நரேந்திர மோடி, மகாராஜாவுக்குப் பதிலாக வேறு சின்னத்தை மாற்ற விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிவுறுத்தினார்.

வோடபோன்

முன்னாள் நேஷனல் கிரியேட்டிவ் டைரக்டர் ஓகில்வி & மாதர், ராஜீவ் ராவ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது ZooZoos.

2008 இல் Hutch இலிருந்து Vodafone க்கு நிறுவனம் பெயர் மாற்றிய பிறகு ZooZoos அறிமுகப்படுத்தப்பட்டது.

ZooZoos என்பது இந்தியன் பிரீமியர் லீக் சீசன் 2ல் இருந்து Vodafone இந்தியாவால் விளம்பரப்படுத்தப்படும் விளம்பரக் கதாபாத்திரங்கள்.

ZooZoos வோடஃபோனின் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை விளம்பரப்படுத்தப் பயன்படும் பலூன் உடல்கள் மற்றும் முட்டைத் தலைகள் கொண்ட வெள்ளை நிற உயிரினங்கள் ஆகும்.

புகழ் பெற்ற நிறுவனங்களின் logo பின்னணி தெரியுமா?
ஷூ லேஸ் காதணிகளை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம் - என்ன விலை தெரியுமா?

பூமர்

1995 இல் ஸ்பெயினில் இருந்து ஜொய்கா என்ற மிட்டாய் தயாரிப்பாளரால் ‘பூமர்’ இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த புகழ்பெற்ற பபிள் கம் லோகோ 90களின் குழந்தைகளைக் கவர்ந்த நீல நிற சூப்பர் ஹீரோவைப் போல் இருக்கும்.

பூமர் மேன் இடம்பெறும் விளம்பரங்கள் மூலம் அதன் வலுவான காட்சி இருப்பு காரணமாக, 2000 ஆம் ஆண்டில் இது 40% க்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டு மிகப்பெரிய பிராண்டாக மாறியது.

மெக்டொனால்ட்

மெக்டொனால்டு மற்றும் அதன் சிவப்பு ஹேர்டு கோமாளி யாருக்குத் தான் தெரியாது? 1996-ஆம் ஆண்டில் மெக்டொனால்ட்ஸ் தனது முதல் கடையை டெல்லியின் உயர்தர பகுதியில் திறந்தபோது, மேற்கத்திய துரித உணவு என்பதே புதுமையானதாக இருந்தது.

இந்த கோமாளி போன்ற வடிவத்தை ஸ்காட் தனது 'Joy of Living’' புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 'ரொனால்ட் மெக்டொனால்டை உருவாக்கியதாக' கூறுகிறார்.

கேஃப்சி

KFC பிராண்டிற்கான முதல் லோகோ 1952 இல் வடிவமைக்கப்பட்டது, ஹார்லேண்ட் சாண்டர்ஸ் தனது உணவகத்தைத் திறந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த லோகோ பிராண்டின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.

முதலில் KFC லோகோவில் கர்னல் சாண்டர்ஸின் உருவப்படம் அவரது கையெழுத்து மற்றும் கோடி இடம்பெற்றது.

பின்னர் அதே போன்று KFC லோகோ 1952 இல் ஆறு வெவ்வேறு திருத்தங்களுக்கு உட்பட்டு மறுவடிவமைக்கப்பட்டது.

MDH மசாலா

MDH மசாலாவின் விளம்பரத்தை தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். புகழ்பெற்ற மசாலா பிராண்டான MDH (Mahashian Di Hatti) மற்றும் இந்திய மசாலாவிற்கான சின்னமான 'Mahashay' Dharampal Gulati தனது பயணத்தின் போது பல கஷ்டங்களையும் போராட்டங்களையும் எதிர்கொண்டார்.

புகழ் பெற்ற நிறுவனங்களின் logo பின்னணி தெரியுமா?
டாடா டூ டாபர்: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்தே செயல்பட்டு வரும் 11 நிறுவனங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com